வேரற்ற மரங்கள்

3.7
(101)

மாலைநேரம் வந்திருந்தது. இருளப்பன் வாசற்படியில் உட்கார்ந்திருந்தான். மிகவும் பொறுப்புடன் செய்தாக வேண்டிய, உயிரைத் தக்கதைத்துக் கொள்ள வேண்டிய விஷயமாயிருந்ததால் மனைவியுடன் தர்க்கம் பண்ண அவன் விரும்பவில்லை. மனைவியின் ஆற்றாமையும் அதனால் எழும் கவலையும் தனக்காக என்பதால் அவளைக் கடிந்து கொள்வதில் அர்த்தமில்லை என்றே பட்டது. ஆனால் ஒன்றையே திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறாள் என்ற எரிச்சல் இருக்கத்தான் செய்தது.

“ஒரு வழியும் பொலப்படல… நெனைச்ச மாத்திரத்தில ஆயிரம் ரெண்டாயிரம்னு பொறட்டுறதுங்கிறது நம்மப் போல உள்ளவங்களுக்கெல்லாம் மலைய உருட்ட நெனைக்கிற மாதிரி… ஏதோ நடக்குறது நடக்கட்டும்னு பேசாம இருந்திடப் போறேன்” அவன் இதைப் பதட்டமில்லாமல் சொல்லத்தான் நினைத்தான். வார்ததைகளில் தடுமாற்றம் புரண்டது.

“பையனுகளாய்ப் பெத்திருந்தாலும் கவலையில்ல… நாளப்பின்ன நமக்கு கஞ்சியூத் தாட்டியும் அவனுகளையாவது அவனுக பாத்துக்குவானுக…” மனைவி முடிக்குமுன் அவன் குறுக்கிட்டான்.

“ஒனக்கு இதத் தவிர வேற பேசுறதுக்கு ஒன்னுமேயில்iலா? பொம்பளப் புள்ளைகளும் உசிருகதே… நமக்காவது மூனு பொண்ணுக அஞ்சு ஆறுன்னு பெத்திருக்கவங்க பாட்டப் பத்தி கொஞ்சமாவது நீ யோசிக்கிறீயா… கடைசி காலத்துல தாய் தகப்பங்கிற பற்று பாசம் பொம்பளப் புள்ளைகளுக்குத்தே அதிகமாயிருக்கும்…” சொல்லிக் கொண்டிருக்கும் போதே அடிவயிறே பிதுங்கிவிடும் போல் பலம் கொண்ட மடடும் இருமினான். கண்கள் வெளியே துருத்திக் கொண்டு நீர் பொங்கியது. துரும்பாய் ஒடுங்கினாற் போல் சற்று உள்ளே தள்ளி வீட்டிற்குள் அமர்ந்தான். ஐந்தும் ஏழும் வயதான இரண்டு பெண் குழந்தைகள் அப்போதே தூங்கத் துவங்கியிருந்தன. பனிரெண்டு வயதான பெரிய பெண் மட்டும் பெற்றோரின் சம்பாஷனைகளைக் கவனித்துக்’ கொண்டிருந்தாள்.

தண்ணீர் டம்ளருடன் அவன் மனைவி அவனுக்கு மருந்து கொடுத்து நெஞ்சை ஆதுரத்துடன் தடவிவிட்டுக் கொண்டே சொன்னாள். “ஒரு பொருள் போறதுனால இன்னொரு முக்கியமான பொருள் வருதுன்னா அதுக்கு நாம ஏற்பாடு பண்ணித்தா ஆகனும். நீங்க வேலை வெட்டி செய்யாமக் கூட உசுரோட இருந்தால் போதும். ஒங்களத் தினம் பாக்குற தெம்பிலேயே ஊக்கமா வேல செஞ்சு ஒங்க எல்லாரையும் நா காப்பாத்திடுவே” நெஞ்சு நிமிந்தாற்போல் ஒன்றைச் சொல்லி விட்ட போதிலும் அவள் உடலும் உள்ளமும் ஒரு சேர நடுங்கத்தான் செய்தது. வருங்காலம் பற்றிய பீதி மெல்ல மெல்ல படர்ந்து அவளுள் வியாபிக்கத் தொடங்கியது.

தோப்பை விற்றாவது பணம் புரட்டி புருஷனுக்கு ஆபரேசன் பண்ண ஏற்பாடு செய்து விட்டாலும் அவன் பிழைத்துக் கொள்வானா என்ற சந்தேகம் எழுந்து இவளைப் பயத்திலாழ்த்தியது. ‘இந்தக் காலத்துல ஆபரேஷன் கேஸ_கள முழுசா நம்ப முடியல…’ பக்கத்து வீட்டு அன்னபூரணி ஒருநாள் சொன்னது அவள் நெஞ்சில் விஷமுள்ளாய்த் தங்கி உருத்தியது. ‘அவ சொல்ற மாதிரியில்ல. முன்னாலதே ஆபரேஷன்ல சாகுறதும் பொழக்கிறதும் நிச்சயமில்லாம இருந்துச்சு. இப்பத்தே புதுசு புதுசா மருந்து மாத்திரைன்னு கண்டு பிடிச்சு போன உசிரத் திரும்பிக் கொண்டார்ராப்பில ஒலகம் முன்னேறிடுச்சே..!’ தனக்குள் கணந்தோறும் சமாதானம் செய்து கொள்வதில் கொஞ்சம் அமைதியடைந்தாலும் மனதில் எங்கோ ஓர் மூலையில் பயம் விலகாமல் படிந்திருப்பதாய் அவளுக்குத் தோன்றியது.

“ம்.. சொத்துனு இருக்கறது அந்தத் தோப்பு ஒன்னுதே அதாவது இருக்கேங்கிற தெம்பும் தைரியமும் கொஞ்ச நாள்ல போயிடும் போலிருக்கு கண்டுகெல்லாம் தளதளன்னு வளருது எளங்கண்டுக! நேலைச்சிருந்துச்சுன்னா பிற்காலத்துல புள்ள குட்டிகள கரை சேத்துடலாம்.” எங்கோ பார்த்தவாறு அவன் மெதுவாய்ச் சொன்னான். மனசுக்குள் கவலை முட்கள் காடாய்ப் படர்ந்தன.

“செட்டியாரு இப்ப என்னதே சொல்றாரு…? சோல்லுங்க அவருக்குப் பிரியமில்லேன்னா வேற ஆளப் பாக்கலாம். அதுக்காக அவரையே சதாவும் கண்டு பேசனுமா? அதனாலதா அந்த மனுஷன் ரொம்ப கெராக்கி பண்ணிக்கிறாரு… நா சொல்றதக் கேளுங்க… நம்ப..” அவள் பேச்சைத் துண்டிக்கும் வகையில் அவன் குறுக்கிட்டான்.

“கொஞ்சம் பேசாம இரு பாக்கியம். வேற யாரைப் பேய் பாத்துக் கேக்கச் சொல்றே. எவெ இந்த நேரத்துல தோப்பக் கேக்கிறான். செட்டியாரு தோப்பும் நம்ம தோப்பும் ஒடடி இருக்கிறதுனால அவராவது எனச்சு வாங்கிடலாம்னு கேட்கிறாரு. மத்த பயக அவரை விட் ஈனக் கெரயமாத்தே கேப்பானுக”

“ஒத்திக்கு என்ன சொல்றாரு.”

“அதுக்கெல்லாம் அவரு ஒத்து வர்றாப்புல இல்லை… அஞ்சு வருஷம் வச்சுக்கங்கன்னு சொல்லி ரெண்டாயிரம் கேட்டு கடைசியில் ஆயிரமாவது குடுங்கன்னு கேட்டுப் பாத்துட்டே.”

“இப்ப என்னாதே சொல்றாரு.” கவலையுடன் கேட்டாள் பாக்கியம்.

“அவரு மனசுல என்ன நெனைப்போ தெரியலே… ஒத்தியெல்லாம் ஒத்து வராதுன்னு முடிவா சொல்லிட்டாரு.. மூவாயிரம் தர்றேன் கெரயப் பத்திரம் வேன்னா எழுதிக் குடுங்கிறாரு…” இதைச் சொல்லுகையில் அவன் உடலும் உள்ளமும் அங்கேயிருப்பதாய் அவனுக்குத் தோன்றவில்லை. ஏதோ ஒரு இருண்ட வெளியில் சஞ்சரிப்பதாய் உணர்ந்தான்.

அவளும் விக்கித்துப் போனாள். என்ன சொல்வதென்றே புரியாதவள்போல் சிறுபொழுது மௌனித்து நின்றாள். “இதென்ன கொடுமையாயிருக்கு… மூவாயிரத்துக்;கு வேணுமா…” சொற்கள் கரகரத்துப்போய் முணுமுணுப்பாய் உள்ளடங்கியது.

புயல் தாக்குதலாய்ப் பீறிடும் வாழ்க்கைப் பிரச்சனைகளினூடே தப்பித் தவறி மிஞ்சிய ஒன்னரை ஏக்கர் பூர்வீக நிலம், விவசாய விருத்திக்கு ஏற்று வராத பொட்டல் நிலம். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தோப்புகள் கூழ்ந்த பகுதியில் வறண்டுபோய்க் கிடந்த போதுதான் இருளப்பனுக்கு அதைச் சின்னத் தோப்பாகவாவது ஆக்கிவட வேண்டுமென்ற யோசனை எழுந்தது. பெற்றோர் இறந்தபின் அவனது பராமரிப்பில் நவதானியங்களை விளைவிக்க அவன் எடுத்த முயற்சிகள் யாவும் தோற்றபின் தோப்பு உண்டாக்குவதில் தீவிரம் காட்டினான்.

ஊரிலிருந்து மூன்று மைல் தள்ளியிருந்த அப்பகுதிக்கு மனைவி மக்களுடன் தகரக் குடங்களை ஏந்தி நடந்தான். காட்டிற்கு ஒரு பர்லாங் தள்ளி ஆறு ஓடியது. நாலைந்து வருஷங்கள் இடைவிடாது நடந்தபின் ஐம்பது மாங்கன்றுகள் நிறைந்த அந்தத் தோப்பு nhலிவுடன் நிமிர்ந்து வந்தது. தோப்பைப் பழுதற்ற முறையில் பாதுகாக்கும் முயற்சியில் அவன் பட்ட துயரங்கள் அளவில் சொல்வதற்கில்லை. அதிகாலை சென்றால் மாலை ஐந்து மணிவரை கன்றுகளுக்கு நீரூற்றிவிட்டு வீடு திரும்பிய சிறிது நேரத்தில் மனைவியுடன் ஜின்னிங் பாக்டரிக்கு நைட் வேலைக்குச் சென்றுவிடுவான். உடனடியாக வருமானம் தராமல் போனாலும் ஒரு காலத்தில் தான் ஒடுங்கி ஓய்ந்துவிட்ட நிலையில் உறுதுணையாய்க் காக்கும் என்ற முழு நம்பிக்கையில் கன்றுகளை ஆர்வத்துடன் காப்பாற்றினான்.

மாதத்தில் பல நாட்கள் மனைவி பகல் வேலைக்குச் சென்று விடுவாள். அப்போதும் அவன் தனியாக தண்ணீர் ஊற்ற தோப்புக்குக் கிளம்பி விடுவான். பீடிக்கட்டும் தீப்பெட்டியும் இருந்தால் போதும் என்ற நிலையில், மனைவி குழந்தைகளாவது கால் வயிற்றை கழுவட்டும் என்ற நிலையில் தன் வயிற்றைப் பெருமளவு வஞ்சித்தே காலம் தள்ளினான்.

“போறது போறீங்க… இருக்கிற கஞ்சிய ஊத்திட்டுப் Nபுhனா மதியம் சாப்பிட்டுக்கலாமில்ல… ஏதோ கொஞ்சம் தெம்பா ரெண்டு கொடம் சேத்து ஊத்தலாமில்ல…” மனைவி எத்தனையோ முறை கூறியிருக்கிறாள். அதற்கெல்லாம் இவன், “இல்ல பாக்கியம்… இங்கிருந்து நடந்து போறதுக்கே மத்தியானமாயிடுது. அதுக்குப் பின்னாலே தண்ணி ஊத்த வேண்டியிருக்கு. இதுல வேற சாப்பிட்டுகிட்டு நீட்டி நிமிந்தா வேல ஓடாது. அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடுறேனில்ல… வீட்லயே சாப்புட்டுக்கிட்டாப் போகுது…” இப்படியே ரொம்ப நாட்களை இருளப்பன் தட்டிக் கழித்திருக்கிறான்.

கன்றுகள் செழித்து வளர வளர, பலன் தரும் பருவம் நெருங்க நெருங்க இவனுக்கு இருமல் துவங்கி மோசமாய் வலுத்துக் கொண்டே வந்தது. பகலில் தோப்புக்குப் போய்வர ஏழு மைல் நடந்தும் இரவில் ஜின்னிங் பாக்டரிக்கு அரவைக்குச் சென்றும் எந்திரமயமான வாழ்க்கையில் பழுதேற்பட்டபின் பீடிப் புகையையே மிகுதியாய் ஆகாரமாகக் கொண்ட வயிற்றில் மிகுந்த வலியேற்பட்டு டாக்டரிடம் பரிசேததித்த போதுதான் ஆபரேஷன் செய்யுமளவுக்கு குடல்புண் ஏற்பட்டிருப்பதை அவனாலும் அவன் மனைவியாலும் புரிந்து கொள்ள முடிந்தது. கொஞ்சம் முன்னதாக காட்டிவிட்டதால் குணப் படுத்துவதில் சிரமமிருக்காது என்று டாக்டர் கூறியிருந்தார். ஆபரேஷனுக்கு இரண்டாயிரம் தேவைப்பட்டது.

“செட்டியாரு நமக்கு ஏற்பட்ட நெலமய நல்லதாப் பயன்படுத்திக்கப் பாக்குறாரு.  எங்க தட்டனுமோ அங்க தட்டத் தெரிஞ்சு வச்சிருக்காரு…”

“அப்படியில்லாமப் போனா அவரு இம்புட்டுச் சொத்துச் சேத்திருக்க முடியுமா பாக்கியம்? அம்பது அறுபது ஏக்கர் நெலத்தையும் அடிச்சு வாங்கித்தான் சேத்திருக்காரு. அந்தத் தோப்பு மட்டும் சும்மாவா அதுவும் கடனுக்காக ஒருவன் கிட்டேயிருந்து அமுக்குனதுதா…!” பெருமூச்செறிந்து கொண்டே சொன்னான் இருளப்பன். இடையிடையே இருமல் வந்து சித்திரவதை செய்து கொண்டே இருந்தது. “ அஞ்சு வருஷ குத்தகைக்கு வாங்குனார்னா என்னவோ நம்ப நெலம் நம்பகிட்டேருந்து போகலேங்கிற நம்பிக்கையாவது மிஞ்சும். இப்படி மொதலுக்கே மோசம் வரும்னு நெனக்கலே…”

“அதெல்லாம் இப்பப் பேசிப் பிரயோஜனமில்லை. நம்ம உயிர் போனாலும் சந்ததிகளுக்காவது தோப்பு மிஞ்சனும். எனக்கும் நாற்பது வயசாயிருச்சு. இம்புட்டு வயசு இருந்ததே பெரிய காரியம். இதுக்கு மேல ஆபரேஷன் பண்ணுனா பொழைச்சிடுவேங்கிற நம்பிக்கை எனக்கில்ல. நா செத்துப் போனா செலவெல்லாம் வீணாப்போயிடும்…” அவள் குறுக்கிட்டு அழுகுரலில் கத்தினாள். “ஒங்களுக்கென்ன பைத்தியமா புடிச்சுடிச்சு… நீங்களே போனப்புறம் நெலமும் நாங்களுமா இருந்து என்னத்த வாரிக் கொட்டப் போறோம்… உசிருதான் முக்கியம். அதுக்கப்புறந்தே சொத்து சொகம் எல்லாமே…”

“ஏ பாக்கியம் நீ புரியாமப் பேசுறே” என்று அவன் சொன்னதும் அவள் இன்னும் கோபத்துடன் இடைமறித்துக் கத்தினாள். இடையறாமல் கண்கள் நீர் வந்த வண்ணமிருந்தது. “நானா புரியாமப் பேசுறே… இந்த நெலம் கஞ்சியூத்தும்னு நா என்னிக்குமே கருதலே. இது போறதுனால எனக்கொன்னும் கவலையில்லே. நெலங்கள்லாம் எந்தக் காலத்துலே நமக்குப் பிரயோஜனப் பட்டிருக்கு. அனுபவிக்கிறதுக்கு அந்தச் செட்டியாரு மாதிரி ஆளுகதான் இருக்காங்க… நீங்க சம்மதிக்காட்டியும் நா செட்டியாருகிட்ட போயி தோப்ப எடுத்துக்கச் சொல்லப் போறே…” அவள் நிலை கொள்ளாமல் பரபரத்தாள். கணவன் துளியளவு குறையுமின்றி பிழைத்தெழ வேண்டுமென்ற துடிப்பு அவள் வார்த்தைகளில் இரண்டறக் கலந்திருந்தது.

இருளப்பன் மேற்கொண்டு எதுவும் பேச வலிவற்றுப் போனவனாய் தன்மேல் மனைவி கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையைக் கண்டு வியந்த நிலையில் அவளையே பார்த்தான். ‘இவ சந்தோஷமா இருக்காப்லே நா எதுவும் செஞ்சடலே, ஆனா ஏ மேல எவ்வளவு பாசமா இருக்கா.’ மனம் நெகிழ்ந்து பொன நிலையில் அவள் முடிவுக்கு அனுமதி அளிப்பவன் போல் வாளாவிருந்தான்.

அவள் வீட்டை விட்டு விருட்டென வெளியேறினாள். “நா செட்டியாரு வீட்டுக்குப் போயிட்டு வர்றேன்…” அவள் குரலில் அழுத்தமிருந்தது. எதையும் செய்து முடிக்கும் தெளிவு இருந்தது.

“பாக்கியம் நா மறுபடியும் சொல்றே… நீஎங்கயும் போக வேணாம். ஏழாயிரம் எட்டாயிரம்னு போற தோப்பு பின்னால பலன் கொடுக்கும் போது நீங்கள்ளாம் சொகமாயிருப்பீங்க… நா சொல்றத கேளு பாக்கியம்…” மரணத்தருவாயில் புலம்புவது போல் பலகீனமாய் முனங்கினான் இருளப்பன்.

“கண்டத நெனைச்சு மனசக் கொளப்பாதீங்க. ஞாயத்துக்கு எங்க காலம் கோடீஸ்வரன் வீட்டு கோவணத் துணிகூட ஆயிரம் பெரும்னு ஒலகத்துல பேசுவாங்க. ஆனா நம்ம வீட்ல அது கெடந்தா குப்பைத் துணியாத்தே மதிப்பாங்க… காசிருக்கவன் எதையும் அடிச்சுத்தான் கேட்பான்! நம்ம கஷ்டங்களுக்கு ஆத்தமாட்டாம ஒவ்வொன்னா வித்து கடைசீல எல்லாத்தையும் விட்டுத்தே ஆகவேண்டியிருக்கும்.” சற்று நிறுத்தியவள் எதையோ யோசிப்பவள் போல் நின்றபின், “சரி நா போயிட்டு வந்துடுறே… நாளைக்குப் பத்திரம் பதியனும். ஏன் எதுக்குன்னு உசிரெடுக்கக்கூடாது. நீங்க உசிரோட இருந்தாத்தே நானும்…” உருக்கமாய்ச் சொன்னவள் மேலும் பேச நா எழாதவளாய் சில நிமிடங்களில் அந்தந் தெருவைத் தாண்டிப் போய் விட்டாள்.

முழங்காலில் தலைகவிழ்ந்தபடி சோகமயமான நினைவுகளில் ஆழ்ந்தான் இருளப்பன். ‘ஏ ஒடம்பு இருக்கிற நெலமையிலே நா பொழச்சிடுவேனோ? பயித்தியக்காரி, ஒன்னுக்கு அரைக்காலா தோப்ப வித்து காசக் கரியாக்கப் போறாளே…’ வெளியில் கவிழ்ந்திருந்த இருள் அவன் மன இருளைப் போல் கனமானதாயில்லை. கொஞ்சமும் விலகாத கவலையுடன் லேசாகத் தலையை நிமிர்த்தினான். மூன்று பெண் குழந்தைகளும் தூங்கிக் கொணடிருந்தன. அவர்களைப் பார்க்கப் பார்க்கக் கண்களில் நீர் முட்டிக்கொண்டேயிருந்தது. தொடர்ந்து வந்த அழுகையை அவனால் அடக்க முடியவில்லை. நான் இனி இருக்கப் பொறதில்ல. ஏற்கனவே நொந்து போயிக் கெடக்கிற ஒங்கம்மாவும் எவ்வளவு நாளைக்கு ஒங்கள காப்பாத்தப் போறாளோ?’ குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துப் பார்க்கவே அவனுள் விதவிதமாய்ப் பயங்கர எண்ணங்கள் தோன்றி குரல்வளையைக் கொடூரமாய் நெரித்தன.

நெடுநேரம் கழித்துமனைவி வந்தாள். அப்போதும் அவன் அழுதுகொண்டேயிருந்தான்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 3.7 / 5. Vote count: 101

No votes so far! Be the first to rate this post.

318 thoughts on “வேரற்ற மரங்கள்”

 1. Jayaprakash M

  உடல்நலம் எனும் வேரையிழந்து இருலப்பன், பாக்கியம் எனும் மரங்களாய் பலக்குடம்பங்கள் ரேற்றமரங்களாய் தவிக்கின்றன.

 2. ராஜீ இளமுருகு

  தோழர்.அல்லி உதயனின் வேரற்ற மரங்கள் _ படிக்கும் பொழுதே எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் தன்னால் முடிந்த அளவுக்கு போராடி அந்த சூழலைக்கடக்கமுற்படுவாள் என்பதை அழகாக நேரில் நிருத்திக்காட்டியுள்ளார்.படிக்கும் பொழுதேமனம் மிகவும் வலித்தது.
  இந்த இக்கட்டான சூழலையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தும் மனிதர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.
  காலம்கடந்து யோசனை செய்யும் இருளப்பன்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.அந்த வேரைக்காப்பாற்ற பெண்கள் படும் மனவலிக்கு அளவேயில்லை.

 3. கதை என்பது நமது ஞாபகங்களின் சேமி;ப்புக் கூடம். மரபி;ன் தொடா;ச்சி. கதைகள் நம் சமூகத்தின் மனசாட்சி. ஓ.ஹென்றியின் ’தி கிப்ட் ஆப் மாஹி’ சிறுகதையில் வரும் N;;ஜம்ஸ் டெல்லா தம்பதியா; வறுமை மிகுந்த வாழ்க்கையிலும் ஒருவருக்கொருவா; விட்டுக்கொடுத்து நிறைவான வாழ்க்கை வாழ்வதை இக்கதை நினைவுபடுத்துகிறது. இல்வாழ்க்கையின் உண்மையான தாத்பாpயம் தனக்காக வாழ்ந்துகொண்டிருந்த ஒருவனோ ஒருத்தியோ இன்னொருவருக்காக வாழ்வதே.
  புhக்கியம் இருளப்பன் இணையாpன் உரையாடலில் இல்வாழ்வின் விழுமியங்களையும் சமூக அவலங்களையும் ஆசிhpயா; அல்லி உதயன் புனைவு மொழியில் தந்துள்ளாh;. சின்ன மீனை பொpய மீன் விழுங்கும் உலகமயமாக்கல் சமூகத்தின் குறியீடாக கதையில் செட்டியாh; வருகிறாh;.
  சிறுகதையை வாசிக்கும் போது வாசகன் வெறுமே கதை படிப்பவராக இல்லாமல், கதையை பலவாறாக ஊகித்து புனைந்தபடியே செல்கிறாh;. கதை இப்படி இருக்குமோ! அப்படி முடியுமோ என்றெல்லாம் எண்ணிக்கொண்டே அவா; படிக்கிறாh;. இதையே வாசகப் பங்கேற்பு என விமா;சகா;கள் குறிப்பிடுகிறாh;கள்.
  பாக்கியம் செட்டியாhpடம் தோப்பை விலை பேச சென்று திரும்பும் போது, இருளப்பன் அழுதுகொண்டிருந்தான் என்று கதை முடிகிறது. சிறுகதை என்பது வாசகாpடம் எதையாவது சொல்வதற்காக உருவான வடிவம் அல்ல. வுhசகரை எந்த அளவுக்கு கற்பனை செய்ய வைக்கிறதோ அந்த அளவுக்கு சிறுகதை வெற்றி பெறுகிறது. அதைத்தான் கதையின் முடிவு உணா;த்துகி;றது.
  நல்ல சிறுகதை அதன்கடைசி வாpக்குப் பிறகு வாசகா; மனதில் மீண்டும் தொடங்குகிறது

  மாதா, சக்கம்பட்டி, ஆண்டிபட்டி.

 4. பா. அறிவன், மதுரை 9962254636

  அப்படி என்னதான் செட்டியாரிடம் நீண்ட நேரம் பேசி இருக்க முடியும் தோப்பை பற்றி …. உழைப்பையே பெரிதாக நம்பியிருந்த இருளப்பன், சித்திரத்துக்கு சுவர் அவசியம் என்பதை புரிந்து இருக்க வேண்டும். உடலை கெடுத்து உழைத்து என்ன பயன் இந்த உடலையே மூலதனமாக கொண்டு குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் பாக்கியம்…. பருவம் பார்த்து பயிர் செய்த செட்டியார்

 5. S.Gurumanickam

  S.Gurumanickam, Selaiyur Chennai
  9840598611

  ஒரு நட்பை சந்தேகப்பட்டு பின்னர் உடனேயே அதில் தெளிவு கண்ட திருப்தி வாசகர்களை அடைந்து விடுகிறது.

  என்ன தான் இருந்தாலும் திருமணத்துக்குப் பிறகு, பெண்களின் நட்பு ஆண்களின் நட்பைப் போல தொடர்வதில்லை என்று ஒரு வழக்கு உண்டு. அப்படியில்லாமல் திருமணத்துக்குப் பிறகும் ஷீலா-கவிதா நட்பு பாராட்டுவது சிறப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  அதே நேரம் தோழியின் கருக்கலைப்புக்கு முடிவெடுப்பதில் திணறுவதில் யதார்த்தம் தொக்கி நிற்கிறது. அது போலவே, தோழி தன் பெயரை சொன்னவுடன் ஏற்படும் ஏமாற்றமும், கோபமும் இயல்பாக வாசகர்களை அடைகிறது.

  தோழி அதற்கு மன்னிப்பு கேட்டவுடன் அடங்குவதும் புரிந்து கொள்வதும், அழகான் நேசிப்பின் வடிவம்.

  அலட்டலில்லாத அதே நேரம், நெஞ்சைத் தொட்ட சிறுகதை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: