மிரட்டல்கள்!

0
(0)

பொங்கித் ததும்பும் கார்காலத்து ஊருணியாய்ப் பெரிய விழிகள்! கருப்பு வண்ணம் தீட்டிய ஐந்தாம் பிறையாய் மீசை! புல் முளைத்த கரிசக் காடாய் ரோமம் அடர்ந்த கைகள், கால்கள்! சுருளி நீர்வீழ்ச்சியின் அடர்ந்த காட்டுப் பகுதியில் வளர்ந்து கிடக்கும் வேலமரமாய் உடல் தோற்றம்!

எப்போதும் போல் அந்த பிரம்மாண்டமான வாரச் சந்தை கலகலப்பாக இயங்கிக் கொ:டிருந்தது. ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனி வீதியாய், டேராத் துணிகளுக்கடியில் கடைகள் கசகசத்துக் கிடந்தன. வாழ்க்கைத் தேவைகளின் சங்கம சமுத்திரத்தில் மனித அலைகள்தான் எத்துணை சுறுசுறுப்பாய் இயங்குகின்றன!

சின்னுவ்ன் காய்க் கடைக்குமுன் சைக்கிளை நிறுத்தி, ஹாண்ட் பாரில் மாட்டியிருந்த மஞ்சள் பையைக் கையில் எடுத்துக் கொண்டு, ‘’என்ன சின்னு!’’ என்று ‘அன்பாய் அழைத்தவாறு, சடையைச் சுற்றி நின்று காய்கறி வாங்கிக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தைத் துளை போட்டு உள்ளே பிரவேசித்தார் காண்ஸ்டபிள் கந்தவேல். தராசுத் தட்டின் ஊசலாட்டத்தில் விழிகளைப் பதித்திருந்த சின்னு, அண்ணாந்து பார்த்து, மதிப்புக் கொடுக்க எழுவதுபோல பாவனை பண்ணி, ஸ்பிரிங் ஆக்ஷனில் எம்பி அமுங்கியபடி ‘’வாங்க சார்’’ என்றான்.

‘’பராவல்ல, ஒக்காந்து யாவாரத்தப் பாரு!’’ அவருக்குக் கொடுக்கப் பட்ட மதிப்பைப் பெருந்தன்மையுடன் ‘நிராகரித்து’ விட்டார்.

“ஒண்ணுமில்ல; நாளக்கி நம்ம பயலுக்குக் காதுகுத்து வச்சிருக்கேன்….”என்று சொல்லிக் கொண்டே பைக்குள் கைவிட்டுப் புது டிசைன் பத்திரிகை ஒன்றை எடுத்து சின்னுவிடம் நீட்டினார். “நீயும் ஒம்பொஞ்சாதியும் மறக்காம வந்து சேந்திடுங்க!’’

“சரிங்க சார், நிச்சயம் வந்துர்றோம்.” தராசுத் தட்டைக் கீழே வைத்துவிட்டு, பணிவு கலந்த மரியாதையோடு இரு கைகளாலும் பத்திரிகையை வாங்கினான். ‘’பெரிய எடததுக் காரியம், சமயலுக்கெல்லாம் செலவு ஜாஸ்தியாகுமே?” ‘பெரிய எடத்துக் காரியம்’ என்பதைக் கொஞ்சம் அழுத்தமாகவே உச்சரித்தான்.

“அத ஏன் கேக்குற? ரெண்டு மூட அரிசியும் பலசரக்கு ஜாமானும் வாங்கியாச்சு. காய்கறி மட்டுந்தான் பாக்கி. நீ, மாயாண்டியெல்லாம் இருகு;கும் போது அதப் பத்திக் கவலப் படவேண்டியதில்லைன்னு நெனச்சேன்…” பேசிக்கொண்டே சைக்கிள் கேரியரில் வைத்திருந்த கோணிப் பையை எடுத்து வந்தார். “இன்னக்கி நம்மளக் கொஞ்சம் ஸ்பெஷலாக் கவனிக்யணும்.”

“அதுக்கென்னங்க சார். ஒங்களக் கவனிக்யாம வேற யாரக் கவனிக்கப் போறேன்?” பேசிக் கொண்டே கத்தரிக்காயையும பீன்சையும்  அள்ளிக் கோணிக்குள் போட்டான். விசேஷம்குறதால வெண்டிக்யா தேவப் படாததுன்னு நெனக்கிறேன். என்னங்க சார்?”

“வெண்டக்கா தேவையில்ல, பீன்ஸ்மதான் காணாது போல்ருக்கு.” பசுமைப் பொங்கித் ததும்பி நார் வைக்காத இளம் பிஞ்சு பீன்ஸ் காய்கள் அவர் கண்ணை உறுத்தின. “இன்னும் கொஞ்சம் ஒன் கைவீச்சக் காட்டு, ரூபா வேணும்னாலும் தாரேன்.”

“ஐயோ! ரூபாயா? என்னங்க சார் நீங்க?” மனசுக்குள் கான்ஸ்டபிளைப் பற்களால் கடித்துத் துப்பினான். “ஒங்க புண்ணியத்திலதான் எங்க பொழப்பு நடந்துட்டிருக்கு. ஒங்ககிட்ட காசு வாங்குனா தெய்வத்துக்கு ஆகுங்களா?” இன்னும் கொஞ்சம் கத்தரியும் பீன்ஸ{ம் கோணிக்குள் இடம் மாறின. மொத்தம் ஆறு அல்லது ஏழு கிலோ தேறும்.

“ஒனக்குத் தெரியுது, என் ஒதவி இல்லாம எதுவும் நடக்காதுன்னு, அந்த மாயாயண்டிப் பயலுக்குப் புரிய மாட்டேங்குதே. கை வெளங்கி ரெண்டு கெழங்கு கூட்டித் தரமாட்டான்.’’ கந்தவேலின் சொற்களில் மாயாண்டி ‘கஞ்சப் பய’லாய் வர்ணனை பெற்றான்.

“பாவம்! பிள்ளகுட்டிக்காரன் சார்.” சின்னு மாயாண்டிக்காக அனுதாபப் பட்டான். “டவுனுக்குள்ளயும் அவனுக்குச் சரியான யாவாரம் இல்ல. என்னதாஞ்செய்வான் பாவம்!”

‘இல்ல சின்னு, அவன ஒரு நாளாக்யாச்சும் மாட்ட வச்சத்தான் புத்தி வரும். அது வரக்யும் நம்மல மனுசனா மதிக்யு மாட்டான். ஏழப்பட்ட பய, பொழ்ச்சுட்டுப் போகட்டும்னு பாததாக்கா, என்னய நாயடிக்கிற குச்சியா நெனக்கிறானே?”

‘பெரிய யேக்யம்’ என்று மனசுக்குள் கருவினான் சின்னு. அப்படியெல்லாம் இல்லீங்கய்யா, அவன் சொவாவமே அம்பட்டுத்தான். வேணுங்குறத வாங்கிட்டுப் போங்க, நான் அவன்ட்ட சொல்லி வக்கிறேன்.”

சின்னுவிடம் விடை பெறும்போது மீண்டும் ஒருமுறை ‘’நாளக்கி மறந்துராம வந்துருப்பா’’ என்று ஞாபகப் படுத்தவிட்டுப் போனார்.

சின்னுவின் மனம் அழுதது. ‘பிளாட்பாரத்துல யாவாரம் செஞ்சு பொழக்கிகறத விட எடுபிடியா வேல செஞ்சு வாழலாம். அதுல அரிப்பு இருக்காது. மனசுக்குள் புலம்பினான். ‘மூர்த்த யாவாரம். சரக்கு வாங்குற எடத்துல கொள்ளப் பிரியம். விக்கிற எடத்துலயோ அதுக்கேத்த வெல கெடக்ய மாட்டே;ங்குது. இந்தப் பிரியத்துல கொஞ்சநஞ்சம் சம்பாரிக்கலாம்னு பாத்தா, இந்தக் காக்கிச் சட்டக்காரன் வந்து மொதலயும் சேத்து முழுங்கிட்டுப் போறான். பாவிப்பய!’

சின்னுவும் மாயாண்டியும் அந்த வணிக நகரத்தில் முச்சந்தியான ஓரிடத்தில் காய்கறிக் கடை போட்டிருக்கும் பிளாட்பார வியாபாரிகள். சந்தை தினத்தில் மட்டும் அவர்கள் வியாபாரம் சந்தைக்குள் மாற்றப்படும். மற்ற நாட்களில் முச்சந்தியில்தான். காக்கிச் சட்டைப் பேர்வழிகள் தினம் தினம் வந்து ‘சம்திங்’ வாங்கிக் கொண்டு “போக்கு வரத்துக்கு எடஞ்சல்” என்று பயமுறுத்தாமல் போய்விடுவார்கள். போலிசார் காட்டும் ‘எரக்கத்துக்கு’ இந்தச் சில்லரை வியாபாரிகள் தரும் காய்கறிகள் ஈடாகாது என்று அடிக்கடி ஞாபகப் படுத்துவார் கந்தவேல்.

‘பிச்சக்காரப் பய! இன்னக்கி லாபத்துல முக்காவாசிய அடிச்சுட்டுப் Nபுhய்ட்டான். நாளக்கிக் கொறஞ்சது அம்பது ரூபாயாவது மொய் எழுதணும். இல்லாட்டி….’ சின்னுவின் மனம் குழம்பிற்று.

“என்ன மாயாண்டி!”

ஏறெடுத்துப் பார்த்தான். “வாங்க ஏட்டையா.” வியாபார ஸ்தலத்தை விட்டு எழவில்லை. பற்கள் மௌனமாய் நறநறத்தன. தனது வியாபாரம் போலிஸ்காரர்களால்தான் நஷ்டமடைகிறது என்று கணக்குப் Nபுhட்டான். ‘ஒரு நாளக்யாச்சும் இவன்கள வசமாக் கை வச்சயாத்தான்…’

“பையனுக்கு நாளக்கிக் காதுகுத்து, மறந்துராம மொத ஆளா வந்து சேரு.”

“அதுக்கு என்ன ஏட்டையா? மொhத ஆளா வந்துர்ரேன்.ஒங்க வீட்டு விசேசத்துக்கு வரைல்லைன்னா எங்க பொபை;பு ஓடுமா?”

“நீ பெரிய ஆளப்பா, வாழப் பழத்துல ஊசி ஏத்துற மாதிரி ஒரு குத்து குத்துறியே?—அது சரி, நம்மல இன்னக்கிக் கொஞ்சம் கூடுதலாக் கவனிக்யணும். என்னக்யும் போலக் கஞ்சத்தனம் பண்ணக் கூடாது.”

“இன்னக்கி சரக்கு டிமாண்டு ஏட்டையா. அருளக் கெழங்கு ரெண்டு சிப்பத்துக்கு மேல கெடக்யல, கேரட்டு அதவிட டிமாண்டு, டர்ணிப்பு சுத்தமாவே வரல. கோசுதான் மலிவத் தெரியுது.”

“இந்தா பாரு மாயாண்டி, எனக்குத் தர்ரதுல நீ ஒண்ணும் கொறஞ்சு போயிற மாட்ட. மத்த நாள்னா இம்புட்டுத் தூ ரம் வாதிக்ய மாடேன். ஏதோ ஒன்ன மாதிரி ஆளுகள நம்பி விசேசம் வச்சாச்சு, இந்த வாரம் கொஞ்சம் வீச்சாக் கவனிச்சுப்புடு. அடுத்த வாரம் ஒன் பக்கத்துல கூட வரல.” கெஞ்சுவது போலக் கேட்டார் கந்தவேல்.

உருளைக் கிழங்கு, கேரட், கோசு ஆகியவை கந்தவேலின் கோணிக்குள் இடம் மாறின. “ஏதோ ஏட்டையா, என்னால ஆனது இம்புட்டுத்தான். இத ஏத்துக்கங்க, அடுத்த வாரம் வேணும்னா…”

“என்னடா லூஸ் மாதிரி பேசுற?” கோபமாய்க் கத்தினார். “நான் என்ன பிச்சக் காரன்னு நெனச்சியா? இந்தாடா, ஒங்கெழங்கும் வேணாம், நீயம் வேணாம்..” கோணியை விட்டெறிவது போல் பாவனை பண்ணினார். “ஒன்னய சரியான எடத்துல மாட்டி விட்டாத்தான் வசத்துக்கு வருவ. போன வருஷம் தெண்டங்கட்டுனியே. ஞாபகம் இருக்கா?”

போன வருஷம். ஆம்! போன வருஷம்!

‘என்ன செய்வாம் பாப்போம்’ என்ற வீறாப்போடு போலிசின் கட்டளைக்குப் பணிய மறத்ததும், அதனால் நீசென்ஸ் கேஸ் Nபுர்ட்டுக் Nகுர்ர்ட்டுக்கு இழுத்துக் கொண்டு போனதும், வாய்தா மேல் வாய்தாப் Nபுர்ட்டு ஆறு மாதங்கள் வரை தன்னை இழுத்தடித்ததும், அதன் பிறகு அமீனா, அரசு வக்கீல், கிளார்க் எல்லாரையும் ‘கவனித்த’ பிறகு தான் அழைத்து விசாரிக்கப் பட்டுத் தெண்டம் கட்டியதும், நிழற்படமாய் நெஞ்சில் ஓடின. நூத்துக் கணக்கான ரூபா நட்டம் என்பதோடு வியாபாரதம் செய்ய முடியாத நெருக்கடியும் ஏற்பட்டது. ‘பிச்சக் கார நாயி, இவன் ஆச இம்புட்டுத்தான?’

மவையாண்டியின் விழிகள் சிவந்தன. கங்கு கணக்கில்லாமல்; கிழங்குகளை வாரிக் கேணிப் பைக்குள் போட்டான். தேரிதலில் வென்ற அபேடசகராய் அகங்காரமாய்ச் சிரித்தார் கந்தவேல். பை நிறைந்து விட்டதன் பூரிப்பு முகத்தில் வழிந்தது. “சரியான ஆளப்பா நீ.” மீண்டும் லேசாய்ப் புன்னகைத்தார். “சரி. நான் வரட்டுமா? நாளக்கி மறந்துராம வந்து சேரு.”

மாயாண்டியின் உள்மன அழுகை கான்ஸ்டபிளுக்குக் கேட்டிருக்க நியாயம் இல்லைதான். ஆனால் ஓர் ஏழைப் பிடிவாதக் காரனைப் பணிய வைத்துவிட்ட வெற்றிக் களிப்பு அவரின் உதட்டுப் புன்னகையில் ஓங்கி ஒலித்தது. முன் பழக்கம் காரணமாக அங்கையன் செட்டியாரிடம் ரெண்டு சீப்பு வாழைப் பழமும், முத்தையா நாடாரிடம ஐந்து தேங்காய்களையும் ‘அன்ப’ளிப்பாய்ப் பெற்றுக் கொண்டார். ஏறத்தாழ சாக்கு நிரம்பி விட்டது, இருந்தாலும்…

வெங்காயம், பூடு, பச்சமிளகாய் முதவியவற்றின் கழிவுச் சில்லுகளை சம்சாரிகளிம் இருந்து குறைந்த விலைக்கு விலைக்க வாங்கிக் கூறுகட்டி விற்கும் சில்லரை வியாபாரிகளின் விற்பனை ஸ்தலமான சந்தையின் கடைசி வீதிக்கு சைக்கிளைச் செலுத்தினார். அங்காயயிக் கிழவியிடம் இரண்டு கூறு பூடுகளை அள்ளி பையில் போட்டுக் கொண்டார்.

தன்; விழிகளில் பட்ட வெயிலை, நெற்றியின்மேல் புறங்கையை வைத்து மறைத்துக் கொண்டு, “யாரு?….நிதானா?” என்றாள் அங்காயி கிழவி.

“என்ன கெழவி சௌக்யமா?”

“போடா நாப்பயலே. ஒன்ன மாதிரி கொள்ளக்காரப் பயக உசுரோட ஒலாத்திக்கிட்டு இருக்க வரக்யும் ஏழபாழைக எங்குட்டு சவ்க்கியமா இருக்கது?”

இதப் பாரு கெழவி, ஏதாச்சும் எக்குத் தப்பாப் பேசுனியாக்கும், உள்ள புடுச்சுத் தள்ளிப்புடுவேன்.” தமாஷ் போலப் பேசினார் கான்ஸ்டபிள். “சரி, Nபுர்ய்ட்டு வரட்டா?”

கந்தவேல் சைக்கிளில் ஏறி வேகமாய் நகர்ந்தார். ‘திருட்டுப் பய, அவன் குடும்பமும் கொலமும் அடிமாஞ்சு போக.’ என்ற அங்காயிக் கிழவியின் வார்த்தைகள் லேசாய்க் காதில் வழுந்தன. அவர் அதை லட்சியம் செய்யவில்லை. இதையெல்லாம் பொருட்படுத்தினால் பிழைப்பது எப்படி?

சந்தையின் கடைசி கேட்! சைக்கிளை நிறுத்தினார். ‘கரும்புக் கடக்கிப் Nபுhனா சுப்புப் பய ரெண்டு சவளம் குடுப்பான்.’ யோசனை பண்ணினார். சைக்கிளில் பாரம் அதிகமாய் இருந்தது. ‘அடுத்த வாரம் பாத்துக் கிடுவோம்.’

பொங்கித் ததும்பும் கார்காலத்து ஊருணியாய் விழிகள்! கருப்பு வண்ணத்து ஐந்த்hம் பிறையாய் மீசை! புல் முளைத்த கரிசல் காடாய் கைகால்கள்! வேல மரமாய்த் தடித்துயர்ந்த உடல்! கேட்டைக் கடந்து தார் ரோட்டில் வேகமாய்ப் பறந்தது சைக்கிள்.

 

 

தாமரை/டிசம்பர் 1979

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top