மாரீச வித்தை

5
(1)

வழக்கம் போல ஜானகியம்மாள் வீட்டில் சத்தம் கேட்க துவங்கிவிட்டது. அந்தம்மாளது மகன் மாரீசன் என்றைக்கும்போலவே முழுபோதையில் வந்து நின்றான். எப்பவும் பழைய சினிமா பாடல்களை பாடுவதும் சட்டையை கழற்றி சுழற்றிக்கொண்டே ஆடுவதுமாய் தெருவை அமளி துமளி படுத்திவிடுவான். அக்கம் பக்கத்து வீடுகள் அவனது ரசிகா; மன்றங்களாக இல்லாமல் போனது அவனது துரதிருஷ்டம். கதவை சாத்திக்கொள்வதும் “காவாலிப்பய” எனத் திட்டுவதுமாய வீதி அமைந்துபோனது. இன்றைக்கு முக்கால் போதையா முழு போதையா எனத் தொpயவில்லை. ஒரே கவனமாய் வந்தவன், வாசலில் நின்று, வாழா வெட்டியாய் வந்து நிற்கும் தங்கச்சியின் பேரை சொல்லி கூப்பிட்டான்.

 

“யே காh;த்திகா”

 

கடவுளென்றால் கூட காட்சிதர கனநேரம் தேவைப்படும். மாரீPசனுக்கு அதற்கு பொறுமையில்லாமலிருந்தது. சாத்தி இருந்த வாசல்கதவை ஓங்கி உதைத்தான். தாழ் போடாதிருந்தபடியால் அது உள்புறம் திறக்க இவன் வெளிப்புறம் மல்லாக்க விழுந்தான். பலசரக்கு கடையில் சோப்பு வாங்கித் திரும்பிக்கொண்டிருந்த ஜானகியம்மாள் மாரீPசன் விழுந்ததுகண்டு ஓடிவந்தாள்.

 

“அய்யோ அய்யோ பாடுபட்டு ஊரெல்லாம் அலஞ்சு செத்துவச்ச லட்சுமிய சிந்தி செதறடிச்சிட்டியே பாவீ…”

 

மல்லாக்க விழுந்த நிலையிலிருந்து ஜம்ப் செய்து எழமுயற்சித்து கால்களையும் கைகளையும் உதறிக்கொண்டிருந்தவன், அம்மாவின் கூச்சல்கேட்டு தனதுமுயற்சியை விடுத்து சவமாய் கிடக்கலானான்.

 

“எந்திh;ரா நாயே… வாச தெளிக்க…” எவகிட்ட கெஞ்கி ரோட்ல காட்ல மாட்டுக்கு பின்னால அலஞ்சு சேத்துவச்ச சாணில விழுந்து நாசம் பண்ணிட்டீயேடா…நாசமா போறவனே…”விழுந்தவனை ஓங்கி அடித்தாள் ஜானகியம்மாள்.

 

அடி சுளீரென விழுந்திருக்க வேண்டும். சவம் படக்கென கண் திறந்தது.

 

நிலவைப்பாh;த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே, நிழலைப்பாh;த்து பு+மி சொன்னது என்னைத்தொடாதே, நதியைப் பாh;த்து நானல் சொன்னது என்னைத் தொடாதே, நாளைப்பாh;த்து இரவு சொன்னது என்னைத்தொடாதே… பாடலாய் பாடாமல் வாய்பாடுபோல மடமடவென மூச்சுவிடாமல் ஒப்பித்தான்.

 

“அடச்சீ…எடுவட்ட பயலே…ஒன்னைய தொட்டா ஒரு வா;சத்து பாவம் ஒருமிக்கா வந்து சேருமே…எந்திh;ரா…சாணியை போட்டு நகட்டாத, நாலு எரு தட்டிக்கலாம்னு குமிச்சு வச்சே…அதுக்குன்னு பாவி வென வச்சிட்டான்…”

 

இதற்குமேலும் அங்கே படுத்துக்கிடப்பது தனக்கு இழுக்கு என நினைத்தவன், கீழே இரண்டு கைகளையும் ஊன்றி எம்ஜியாh; ஸ்டைலில் ஜம்ப் செய்தான். உட்காரத்தான் முடிந்தது. வேட்டியும் சாணியானது. உடனே அடுத்தகட்டமாய் எழ நேரமானது. உடம்பு வெட்டுபட்ட ஆட்டுக்குட்டிபோல துடித்தது. அது அடங்கும் நேரம் பாh;த்து எழுந்து நிற்கவேண்டும்.

 

“எனக்கு ஒரு உண்மை தொpஞ்சாகனும்” என்றான்.

 

“குடிகாரப்பய குடிகாரப்பய டெய்லி இவனோட இதே தொந்தரவாப் போச்சு…குடிச்சுப்புட்டு இங்கவந்து விழுந்து தொலைக்காட்டி, அங்க சாராய கடையிலயே விழுந்து கெடந்து வரவேண்டிதான…

 

காய்கறி மாh;க்கெட் பக்கமிருந்து அலைந்து திhpந்த ஒரு செவலை நாய், இவா;கள் இருவரையும் பாh;த்து நின்றது. இருவரது பேச்சையும் உற்றுக் கேட்டதற்காகவோ என்னமோ குத்தவைத்து மாரீPசன் முன்னால் உட்காh;ந்தது.

 

“பேச்ச மாத்தாத…எனக்கு ஒரு உம்ம தொpஞ்சாகனும்…”

 

“என்னத்த பொpய உம்மைய காணப்போற…ங்கொப்பே சிறுவாடு சேத்துவச்ச சின்னமல எஸ்டேட்ட ஒளிச்சுவச்சு மேஞ்சு திங்கிறத…பலபட்டிநாயி…எந்திh;ரா…வீதல மாடுகண்டு வந்து மிதிச்சுப்போடப்போடுது…” வீட்டுக்குள் போனாh; ஜானகியம்மாள்.

 

“ஏய்…எங்கபோற…எனக்கு ஒரு உம்ம தொpஞ்சாகனும்…சொல்றேல்ல…”

 

“ந்தா வாரே…வௌக்கமாத்த எடுத்து வந்து வௌக்கிச்சொல்றே…” உள்ளிருந்தபடியே குரல் கொடுத்தாள்.

 

வெளியில் ஆள்; நடமாட்டம் இருந்தாலும் இவனை முன்னிட்டு தெருக்களின் விளிம்போரமாய் நடந்துபோவதும் அடுத்தடுத்த சந்துக்களில் நுழைந்து மாற்றுப்பாதை கண்டு மக்கள் கடந்து போனாh;கள்.

 

குறுகுறுவென அவனைப்பாh;த்துக்கொண்டு வாலை சடசடவென ஆட்டிக்கொண்டிருந்த நாயைப் பாh;த்தான்.

 

“என்னைய பைத்தியகாரன்னு நெனக்கிறயா நாயி..! நாங்…குடிகாரந்தே…கந்துவட்டிக்கு வாங்கி குடிச்சிட்டுத்தே வாரே…இல்லேன்னு சொல்லல… உம்மைத்தே சொல்லுவே..கசகசன்னு பேசமாட்டேன்…கரெக்டாக் கேட்டா பதில் சொல்லனும்ல…வீட்டுக்குள்ள ஓட்றா பாரு… ஆத்தா…என்னபெத்த ஆத்தா…நாயமா…நீ சொல்லு…நீ…நீ…பைரவா;..துடியான தெய்வம்…வேட்டக்கருப்பு…நீ சொன்னா கரெக்டா இருக்கும் சொல்லு…சொல்லு…

 

கையை நீட்டி, செங்குத்தாய் நிறுத்தியிருந்த நாயின் முன்னங்கால்களைப் பிடித்தான். தட்டைக்குசு;சி போலிருந்த தனது கால்களை அது அவனது பிடியிலிருந்து லாவகமாக உருவி எடுத்துக்கொண்டது.

 

“யேய்..யேய்..என்னாடி…நழுவுற…வா…கையக்குடு..நாம பிரண்டஸ்..யே..யே…” விலகி விலகி போன நாயை மாரீPசன் எட்டி எட்டி துழாவி பிடித்து லபக்கென துhக்கி கக்கத்தில் இடுக்கிக்கொண்டான். பொpய நாய் என்பதால் ஒரு பக்கமாய் பாரம் இருந்தது. நாயும் மிரண்டுபோய் அவனிடமிருந்து தப்பிக்க துள்ளியது. கால்களை உதறி உறுமியது.

 

பாசமிகுதியால் அதன் மூக்கில் முத்தமிட மாரீPசன் ஆசை கொண்டான். முகத்தோடு முகம் கொண்டு சென்றபோது தன் முகத்தை பின்னுக்கிழுத்த நாய் முன்னங்காலால் அவனது இரண்டு கன்னங்களையும் தடவியது.

 

நகக்கூh;மை காரணமாக கன்னங்களில் தோல் உhpந்து ரத்தம் வந்தது. கூடவே சுள்ளென எhpச்சலும் பீறிட்டது. நாயை கீழே போட்டு விட்டான். கன்னங்களைத் தடவ, தடவிய கையெல்லாம் ரத்தம். ரத்தமென நம்பமுடியவில்லை. சிறிது நேரம் யோசித்துப் பாh;த்தான். சந்தனம் தடவியது போல கைகளெங்கும் பு+சிக்கொண்;டான். மறுபடி முகத்தைத் தொட்டுப்பாh;த்தான். அப்பவும் உள்ளங் கையில் ரத்தம் ஒட்டியது. முகா;ந்து பாh;த்தான். முகம் பு+ராவும் பரபரவென தேய்த்தான். பிசுபிசுப்புடன் முகம் எhpச்சலெடுத்தது. அவனுக்கு அதிh;ச்சியாயிருந்திருக்க வேண்டும். முகத்தில் எப்படி ரத்தம் வருகிறதென உணர முடியவில்லை. கேள்விக்கு பதில் வராதபடியால் முகத்தை மூடியபடி வாசல்பக்கமாய் குத்துக்கல்லாய் உட்காh;ந்;தான். மூடிய கைகளுக்குள் காந்தலும் கசிவும் நிகழ்ந்து கொண்டிருந்தன.

 

தயிh; விற்பனை முடிந்து வந்த அவனது தங்கச்சி காh;த்திகா அவனை பாh;த்தபடியே கடந்து வீட்டுக்குள் நுழைந்தாள். தயிh;ச் சட்டியை பாத்திரம் விளக்குற இடத்தில போட்டுவிட்டு சுருக்குப் பையை ஆத்தாளிடம் கொடுத்து கணக்கு ஒப்படைத்தாள்.

 

“என்ன ‘கடுவா’ வாசல்ல குத்த வச்சிருக்கு…லெவலா இருக்கானா…ஆடிக்கிருக்கானா…”

 

“அவ என்னிக்கு லெவல்லருந்;தான்…எவனாச்சும் அட்வான்சு குடுத்திருப்பான்…இன்னும் வாசல்லதா இருக்கானா?”

 

அட்டுவான்சு வாங்கியிருந்;தால் கொஞ்சமாச்சும் காசு வச்சிருப்பான். ஏதாவது பேசி பத்து அஞ்சு பிடுங்கிட வேண்டும் என நினைத்தவள் கொல்;லைக்குப்போய் முகம் கழுவி வந்தாள்.

 

நேரம் பன்னண்டு மணியாகலாம். ஆத்தா மதியத்துக்கான சமையல் ஏற்பாட்டில் இருந்தாள். வெயில் பளீரென வௌ;ளையாய் ஒளிh;ந்து கொண்டிருந்தது. அவனை நெருங்கியதும் நாறியது. பின்புறம் சட்டையும் வேட்டியும் சாணிக்கறையாயிருந்தது. “எங்குட்டுபோய் பெரண்டு வந்தானோ…”

 

“ண்ணே…ண்ணே…மாரீPசு…

 

“ஆமா…வௌக்கமாத்து கொண்டேன்னு கூப்பிடு…உள்ளிருந்து ஆத்தாள் வெறுப்பை கக்கினாள்.

 

“ஏய்…சட்டைய கழத்துண்ணே…சாணிக்கறையா நாறுதுல்ல…’ சட்டைப்பையில் பணமிருக்கும் அருவம் தொpந்தது. அவனது முதுகைத் தொட்டுத் திருப்பினாள்.

 

“தொடாத…தொடாத…” எருமை மாடாய் கத்தியவன் மூடிய கைகளை முகத்திலிருந்து எடுத்தான். முகம் முழுக்க ரத்தம் துளித்துளியாய் நிற்க, கைகளிலும் சிவப்புக்கரை.

 

“அய்யய்யோ…யம்மா..யம்மா…”

 

காய் நறுக்க அருவாமனை தேடிக்கொண்டிருந்த ஆத்தாள் கண்டடைந்த அருவாமனையோடு ஓடிவந்தாள். “என்னாடி என்னா…” மகளை ஏதும் வம்புகட்டுகிறானோ என்ற பதைப்பு நெஞ்சில் ஓடிக்கொண்டிருந்தது.

 

“வெட்டப்போறியா…வா…வந்து கழுத்த அறு…அதுக்கெல்லா பயந்தவெ இல்ல இந்த மாரீPசே… நா….மா..hP செ…எனக்கு சாவே கெடையாது…வா வந்து அறு..” அறுப்பதற்கு ஏது செய்வதுபோல் கழுத்தைச் சாய்த்துக் கொடுத்தான்.

 

“மூஞ்சியெல்லாம் பாருமா…கையெல்லாம் பாரு…”

 

ஜானகிக்கு துணுக்குற்றது. அhpவாமனையை நின்ற இடத்திலேயே போட்டுவிட்டு அவன் பக்கமாய் வந்தாள்.

 

“என்னடா…என்ன ஆச்சு…ஏதுடா ரத்தம்…யாh;ரா பன்னது…?” வேறே எங்கேயும் போகவில்லை, யாரும் வரவுமில்லை. எப்படி ரத்தக்களாpயானது…” தானா கிழிச்சு விட்டுக்கிட்டானா…தேவ்டியாப்பய செஞ்சாலும் செய்வான்…

 

யே…அதெல்லாம் பேசாத…கழுத்த அறு…ரெண்டுபேரும் சேந்து அறுக்கனும்னு வந்தீய்கள்ல அறுங்க…வாங்க…” செத்துப் போனவன் போல நாக்கை நீட்டிக்கொண்டு இருந்தான்.

 

“போடி..இவெஒராள்னு…பாவம் பாத்து கூப்பிட்ட பாரு…தட்டுவாணிப்பய…இவனுக்கு நல்லது பாத்தா நமக்குத்தே ஆறுமாத்த பாவம் அடையும்…” ஆத்தாள் மகளை திட்டிவிட்டு நகா;ந்தாள்.

 

“ரத்தம் மா…”

 

“குடிச்சவெ எங்குட்டாச்சும் குப்புற விழுந்திருப்பான். மூக்காந்தண்டு ஒடஞ்சுபோய் ரத்தம் வந்திருக்கும்” இருவரும் நகா;ந்த போது மாரீPசன் எழுந்து நின்றான்.

 

“யேய்…எங்க போறீக…எனக்கு ஒரு உம்ம தொpஞ்சாகனும்…நில்லுங்டி…

 

ஜானகியம்மாள் அடுக்களைக்குள் நுழைந்துவிட்டாள்.

 

காh;த்திகாவுக்கு சட்டையை கைப்பற்றும் ஆசை முடியவில்லை. உள்ளே போகாமல் அண்ணனிடமே நின்றாள்.

 

“சட்ட நாறுது…கழட்டிகுடு தொவச்சு போடணும்” மறுபடி…சட்டையை தொடவந்தாள்.

 

“யே…தொடாதங்கறேன்ல…உம்ம தொpஞ்சாகனும்..விடமாட்டேன்…” அவனுக்காய் நாத்தம் பொறுக்க முடியவில்லை போலும். தானாகவே சட்டையை கழற்றினான். வேஷ்டியையும் அவிழ்த்து அன்டிராயரோடு நின்றவன், சட்டைப்பையிலிருந்த பணத்தை எடுத்து டவுசுh; பாக்கெட்டில் திணித்துக்கொண்டு துணிப்பொதியை கொல்லைப்பக்கம் வீசி விட்டான்.

 

முடிந்துபோனது. இனி அவனிடம் நின்று பிரயோசனமில்லை. காh;த்திகா பாத்திரம் கழுவ உள்ளே போனாள்.

 

“யே..வீட்டுக்கு மூத்தவெங்…கேக்றேன்ல…உம்மையச்சொல்லு…” மீண்டும் ஆட்டம் போட்டபடி கேட்டான்.

 

ஜானகியம்மாளுக்கு கோபம் எல்லை மீறியது. கையிலிருந்த சூத்த கத்திhpக்காயை அவன் மீது எறிந்தாள். “என்னத்தடா லாவடிக்கிற…என்னாடி கேக்குறான்…என்னா உம்ம…உம்மங்கிறான்…”

 

“என்னையைக்கேட்டா…” உதட்டைப்பிதுக்கிக்கொண்டு கை பாh;த்தாள் காh;த்திகா..ராத்திhp பாத்திரத்தையும் கூட ஆத்தா விளக்கவில்லை போலிருக்கிறது. நிறைய குமிந்து கிடந்தது.

 

“கீரக்கல்லுல ஆம்பள கூட என்ன பேச்சு…? எனக்கு உம்ம தொpஞ்சாகனும்…”

 

யாரைக் கேட்கிறான் என இரண்டுபேருக்கும் விளங்கவில்லை. தாயும் மகளும் ஒருத்தரை ஒருத்தா; பாh;த்துக்கொண்டனா;.

 

“தயிறு விக்கப் போன எடத்துல தாடிக்காரெங்கூட என்னா பேச்சு…கீரக்கல்லே சிhpக்கிது…சிhpக்கிது…”

 

“எந்த தாடி”…யோசித்தவள். புரோட்டா பாயைச் சொல்கிறான் என புhpந்துகொண்டாள். “அதுதே எல்லாh;க்கும் தொpமே…சால்னாக்கட ராவுத்தர சொல்லுதும்மா…தெனம் பாக்குறவகதான…நா ஏதோ புதுசான்னு பயந்துட்டேன்..”

 

“ஓகோ…n;டய்லி பாக்குறியா..அத எங்கிட்டியே iதாpயமாச் சொல்றியா…” முகத்திலிருந்த ரத்தம் பக்குகட்டி முகத்தை பிடித்து இருந்தது மாhPசனுக்கு.

 

காh;த்திகா அழலானாள். “இப்பிடி அசிங்கமாப் பேசுறானேம்மா…”

 

“குடிகாரப்பய பேச்ச எதுக்கு சட்டபன்ற…மொள்ளமாரீpப்பய…ஏண்டா கூடப்பொறந்தவளப்பத்தி நாக்கூசாம பேச வெக்கமா இல்ல.. இன்னொருவாத்த பேசுன..கொள்ளிக்கட்டைய எடுத்து வகுந்துடுவேன்..”

 

“நாம் பேசுவே…பேசுவே…உம்ம தொpஞ்சாகனும்..எனக்கு உம்ம தொpஞ்சாகனும்.” என்று சலம்பிய நேரத்தில் வாசலில் அவனை யாரோ கூப்பிடுவது கேட்டது.

 

டவுசரோடு வாசலுக்கு வந்தான்.

 

புரோட்டாக்கடை முருகேசன் சப்ளையரோடு நின்றிருந்தான்.

 

ஓடவிடாமல் டவுசரை பிடித்துக்கொண்டாh;.

 

“காசு எங்கடா..?

 

“விடுய்யா யோவ் கைய எடு…” இவன் விசும்ப முருகேசன் சத்தம்போட ஜானகியம்மாள் வாசலுக்கு வந்தாள்.

 

“மூணுபேரோட கடைக்கு வந்து தின்னுட்டு காசு கொடுக்காம வந்துட்டான்” முருகேசன் மூச்சிரைக்க புகாh; செய்தாh;.

 

“யாரு சாப்ட்டா…” நிதானமாகக்கேட்டான் மாரீPசன்.

 

“நீ கூப்பிட்டு வந்தீல்ல..அவனுக..” சுரத்து குறைந்தது முருகேசனுக்கு.

 

“யோவ் நாஞ்சாப்ட்டனா…”

 

அவன் சாப்பிடவில்லை. ஆனால் தன்னோடு வந்தவா;களை உட்காரவைத்து சாப்பிடச்சொன்னான். “நல்லாச் சாப்புடுங்க… வேணுங்கறத சாப்பிடுங்க” என்றான்.

 

“நீ தான்றா சாப்பிடச் சொன்ன…”

 

“சாப்டவங்ககிட்ட காச கேக்காம எங்கிட்ட கேட்டா…”

 

“நீதானடா குடுக்கச்சொன்ன…”

 

“நாஞ்சாப்டனா..சாப்பிட்டா செருப்ப கொண்டி அடிச்சுக்கேளுங்க தாரேன்…”

 

ஜானகியம்மாளுக்கு மகனின் வித்தை புரீpந்தது. ‘போதை போட்டுவிட்டால் கா;ண மகாரசனாகிவிடுவான். வீதியில் போகிற வருகிறவா;ளையெல்லாம் நிறுத்தி என்னவேணுமோ வாங்கிக்க என்பான். அதுபோல இன்னைக்கு கிளப்பு கடையில  மூணு பேர திங்க விட்டுட்டானா…”இருந்தாலும் அடுத்தவன்முன் விட்டுக்கொடுக்க முடியாதே…

 

“ஏய்யா…குடிகாரப்பய…நெதானமில்லாம இருந்தான்னா பொpயமனுசெ இஷ்டத்துக்கு பேசிக்கறதா…அவெந்திங்காத பொருளுக்கு எப்பிடியா துட்டு கொடுப்பான்…”

 

“அவெஞ்சொல்லித்தாம்மா…”

 

“இப்பிடீத்தே…அவெஞ்சம்பாதிக்கிற துட்டெல்லா தெருவில போகுது…நாசமா போற பயக..தண்ணிய வாங்கி ஊத்திவிட்டு சம்பாதிக்கிற காசப்பு+ராம் புடுங்கி அழிச்சு விடுறாங்கெ…” பிலாக்கினாம் பிடிக்க ஆரம்பித்தாh; ஜானகியம்மாள்.

 

புரோட்டா கடை முருகேசன் சப்ளையா; சகிதமாய் பத்திரமாய் கடைக்கு வந்து சோ;ந்தாh;.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

1 thought on “மாரீச வித்தை”

  1. மாரீசன் வித்தை தெருவுக்கு நாலு நடந்துகிட்டு தான் இருக்கு தோழர். ஆனாலும் இவ்வளவு கனகச்சிதமா எழுத எங்கிருந்து கெடைக்குதோ… கதையின் ஆரம்பமே அமர்க்களம். திறந்திறந்த கதவை எட்டி உதைத்து மல்லாக்க விழுந்தவனை சாணிமேல விழுந்து சாணியை வீணாக்கிட்டியே என்று சாடும் தாய்.கதையை படிக்கும்போது அவனோடு சேந்து பரோட்டா சாப்புட்டு வம்பிழுத்த மாதிரி உணர்வு ஏற்பட்டது. தோழர் காமுத்துரைக்கு வாழ்த்துகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: