மண்!

2
(1)

‘’ஜெயா!’’

‘’ம்!’’

‘’நான் ஒரு கவிதை சொல்லட்டா?’’

‘’ஒங்களுக்கு வேற வேல இல்ல; எப்பப் பாரு இதே ஜோலிதான், கத கவிதன்னுக்கிட்டு, வீட்டுல இருக்கும் போதுதான் இதே பொழப்பாத் திரியிறீக; இப்ப ஊரக்குப் போய்ட்டிருக்கோம், அதுவும் நடந்து போறோம்; இப்பவும் கவிதைதானா?’’

‘’நடந்து போறது போறோம், சும்மா போகாட்டி என்ன. ஒரு கவிதையாச்சும் பாடுவோமேன்னுதான்…..’’

‘’நீங்களாப் பாடிக்கங்க; எனக்கொண்ணும் வேண்டாம்.’’

அவள் எப்போதுமே இப்படித்தான், கவிதையை ரசிக்கத் தெரியாத மண்டு.அடுப்பூதத் தெரியும், துணி துவைக்கத் தெரியும், வீட்டின் நாலு சுவர்களுக்கப்பால் என்ன நடக்கிறது என்று தெரியாது. குறிப்பாக நிகழ்காலக் கலைகளை ரசிக்க மாட்டாள். கலா ரசனை இல்லாத வரட்டு மனம் இவளுக்கு.

சரி போகட்டும், அவள் என் கவிதையை ரசிக்க வேண்டாம்; அவள் ரசிக்கவில்லை என்பதற்காக என்னால் கவிதை சொல்லாமல் இருக்க முடியாது. பூமியெங்கும் ஜீவ துடிப்புடன் பலனி வரும் அழகு தேவதையின் ஆத்ம ஸ்வரூபத்தைக் கண்டும் காணாதவன் போல் வெறுமனே நடக்க முடிhது. அப்படி அது ஒரு பெரிய பாரமாகி நெஞ்சை அழுத்தும். எதையோ இழந்து விட்ட மாதிரி தோன்றும். ஆகN, சின்னச் சின்ன வரிகளில் என் அனுபவத்தை வெளிப் படுத்த வேண்டும்.

சூரியன், தன் பயணம் முடிந்த திருப்தியில் மேற்கு வீட்டில் பிரவேசிக்கிறான். அவன் விழிகளில் ஆவேசம் குறைநது சௌஜன்யம் பிரகாசிக்கிறது. சகல பறவை இனங்களும் வாழ்த்தி வரவேற்கின்றன. அவன் மஞ்சள் ஒளி வீசி நன்றி தெரிவிக்கிறான். உலகம், ஜீவிதம் பெறுகிறது.

‘’என்னங்க!’’

ஜெயா கூப்பிடுவது கேட்டு ரசனையில் இருந்து விடுபடுகிறேன். ‘என்ன’ என்பது போல் ஏறிட்டுப் பார்க்கிறேன்.

‘’இதுதான் கொங்குளம்.’’

இப்போதுதான் புரிகிறது, நாங்கள் ஒரு கிராமத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கிறோம் என்று.

 

அது சின்ன கிராமம். அளவளவான வீடுகள்! ஓடுகள் வேயப் பட்டு எல்லா வீடுகளும் ஒரே மாதிரி காட்சி தருகின்றன.

‘’இங்க இருக்கவுக எல்லாமே கொறவருகதான்; சர்க்காரு முக்காவாசிப் பேத்துக்கு ஓசியா வீடுகட்டிக் குடுத்திருக்கு. ஓட்டு வீடுக பூராவுமே சர்க்காரு வீடுகதான்.’’

‘’அப்படியா?’’ என்கிறேன். இந்த கிராமம் கூட அழகாகத்தான் இருக்கிறது. இயற்கை எழில்; சூழ்ந்த கிராமம். பூவரசு மரங்களும் வேப்ப மரங்களும் பெரும்பாலான வீடுகளின் முன் வாசலில் வளர்ந்து நிற்கின்றன. பின் வெளியில் முரங்கை மரங்கள்!

வீதியில் சின்னஞ்சிறுசுகள் ஓடி விளையாடுகிள்றன. கண்ணாமூச்சி, நொண்டி, கொலகொலயா முந்திரிக்கா! இப்படிப் பட்ட விளையாட்டுக்கள்.

சீரங்கம் பட்டிக்குப் போய்க் கொண்டிருக்கிறோம். அதுதான் என் மாமனார் ஊர். அதாவது ஜெயாவின் பிறந்த ஊர்! நிலக் கோட்டையிலிருந்து மூணு மைல் தொலைவில் இருக்கிறது.

‘’சின்னக் கடை ஒன்று வைத்திருக்கிறேன்’’ என்று போன மாசம் மாமா எழுதியிருந்தார். ‘’நீங்களும் ஜெயாவும் வந்து போகணும்’’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

ஜெயாவுக்கு ஏக சந்தோஷம். கூலி வேலை செய்து அத்தக் கஞ்சியும் அரக்கஞ்சியும் குடித்துக் கொண்டிருந்தவர்கள் கடை வைத்து விட்டார்கள். இனி ‘ஈரத் துணிய இறுக்கிக் கட்டி ஊத்தப் பல்ல உறிஞ்சிக் குடிக்க வேண்டிய நெலம வராது’ என்நு சந்தோஷமாய்ச் சொன்னாள்.

எனக்கு ஒருபக்கம் மகிழ்ச்சி; இன்னொரு பக்கம் வருத்தம். கூலி விவசாயிகள் நிறைந்த கிராமத்தில் அதிக முதலீடு இல்லாமல் வியாபாரம் செய்வது சாத்தியமா? நுpறையக் கடன் போகும்; கடன் கொடுத்து வாங்கும் அளவிற்குப் பணப் புழக்கம் இருக்க சேண்டும். போன கடனில் பாதி திரும்பி வரும், மீதி கிணற்றில் விழுந்த கருங்கல் மாதிரி அமுங்கிப் போகும். அவர் எப்படி சமாளிப்பார்?

கடந்த ஒரு மாசமாக ஜெயா ஓயாமல் நச்சரித்தாள். ஊருக்குப் போகணுமாம்; அவள் அப்பா கடை வைத்திருப்பதைப் பார்க்க வேண்டுமாம்.

‘’இனிமே எங்க குடும்பம் விருத்திக்கி வந்துரம்; எனக்கு வரவேண்டிய சீர்செனத்தி எல்லாம் கூசாமக் கேட்டு வாங்குவேன்’’ என்றாள்.

அவள் நச்சரிப்புத் தாங்காமல் இன்று கிளம்பினேன். இதோ, இப்போது சீரங்கம்பட்டிக்கு குறகிய பாதையில் நடந்துகொண்டிருக்கிறோம். அந்த ஊருக்கு மினிபஸ் ஓடுகிறது. மூன்று அல்லது நான்கு டிரிப் அடிக்கிறது. பஸ்ஸ_க்காகக் காத்திருந்து நேரத்தை வீணடிக்க விரும்ப வில்லை. அதனால்தான் அந்த கிராமம் நோக்கிள நடந்துகொண்டிருக்கிறோம்.

ஜெயா கூப்பிடுகிறாள்.

‘’என்ன?;’ என்கிறேன்.

‘’கம்மாயப் பாத்திங்களா, எம்புட்டுத் தண்ணின்னு?’’ ஏறிட்டுப் பார்க்கிறேன். குhதல் இளங்கன்னியின் கண்போல தண்ணீர் ததும்புகிறது. கார்காலத்து வானமும் வசந்தகாலப் பூச்செடியும் நீர் நிரம்பிய கண்மாயும் அழகுடையவை. அதிலும் குறிப்பாக அடுக்கடுக்காய் அலை சமந்து மிருதுவாய் நடனமிடும் இதன் நீர்ப்பரப்பு ரெம்பவும் அழகு! தலையில் கரகம் வைத்துக் கொண்டு லாவகமாய், நளினமாய் உடம்பை அப்படியும் இப்படியும் அசைத்து, கலைக் கோலம் இடும் நடனக்காதரி மாதிரி…….

‘’இந்தக் கம்மா மட்டும் இல்லைன்னா, சுத்து கிராமம் பூரா வரண்டு போகும்’’ என்கிறாள் ஜெயா.

கண்மாய்க் கரைமேல் ஏறி நடக்கிறோம். சரிந்து கிடக்கும் அதன் வெளிப்புற சுற்றுச் சுவரில் சின்னச் சின்னச் கெடிகள்! வேள்ளை வெள்ளையாய் நீலம் நீலமாயப் பூரித்திருக்கும் அழகான செடிகள்! வுpட்டில்களும் வண்டுகளும் பறந்து பறந்து செடிகளுக்குள் எதையோ தேடுகின்றன. அந்த சின்னப் பூச்சிகளை மனசுக்சுள் ரசிக்கிறேன்.

கண்மாயைத் தாண்டி, காடு மேடெல்லாம் கடந்து ஊருக்குள் நுழைகிறோம். முhலை மயங்குகிறது. இருள் பூமியை ஆரத் தழுவி அரவணைக்கிறது. இரவின் ஸ்பரிசத்தில் பறவைகள் கூட மயங்கி, பாடுவதை நிறுத்துகின்றன.

வீட்டுக்குள் நுழைகிறோம். குடை இருந்ததற்கு அடையாளமாய் வாசலில் ஸ்டால்; ஒன்று கிடக்கிறது. அத்தை எங்களை வரவேற்க, மாமா படுக்கையில் இருந்தபடியே ‘’வாங்க மாப்பிள்ள’’ என்கிறார்.

‘’கட என்னமமா ஆச்சு?’’ ஜெயா அவநம்பிக்கையோடு கேட்கிறாள்.

அத்தைக்குக் கண்ணீர் முட்டுகிறது. புpன்பக்கம் திரும்பிக் கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறார். ‘’கட நொடிச்சுப் போச்சும்மா.’’

தன் தந்தை அருகே போய் உடகார்கிறாள். ‘’என்னய்யா? ஏன்ன ஆச்சு? ஏன் இப்படி ஆயிப் போனீங்க?’’

‘’என்னம்மா செய்யிறது?’’ த

Pனமாய் ஒலுpக்கிறது அவர் குரல் ‘’கடன் வாங்கிக் கட வச்சேன்; யாவாரம் பிடிக்யல; வித்த யாவாரமும் கடனுக்குத்தான் போச்சு! வாங்குன கடனத் தீப்பிக் கேட்டா பையத் தருபோம்குறாக; நான் வாங்குன கடன எப்படி அடக்யப் போறனோ தெரியல.’’

‘லொக்’ ‘லொக்’ என்று இருமகிறார். அவர் முகத்தில் அவநம்பிக்கை அப்பிக் கடக்கிறது. அடுப்பைப் பார்க்கிறேன். தீ எரிந்ததற்கான அடையாளம் தெரியவால்லை.

‘’பாப்பாத்தி!’’ மாமா அத்தையைக் கூப்பிடுகிறார். கோவிந்த சாமி கொத்தனார்கிட்டப் போயி நாளக்கி வேலக்கி வர்ரதாச் சொல்லி அஞ்சு ரூபா அட்வான்ஸ் வாங்கியா. புpள்ளைகளுக்கு சோறு காச்சிப் போடு.’’

‘’இல்;ல மாமா, சோறு வேண்டாம். வகுறு பசிக்யல.’’

நூங்கள் நடந்து வந்த வழித்தடம் நினைவுக்கு வருகிறது. ஒரு பக்கம் அடகு! இன்னொரு பக்கம் அவலம்! என்ன இரு முரண்பாமு?

 

செம்மலர் ஜனவரி 1986

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 2 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top