பகல் விளக்குகள்!

0
(0)

வயிற்றுக்குள் நெருப்புக் குண்டம் ஆங்காரமாய்த் தகித்துக் கொண்டிருந்தது. கைகளும் கால்களும இரும்புத் துண்டங்களாய் அசைவற்றுக் கிடந்தன. நாவின் ஸ்பரிசத்தில் எல்லா இனிய பொருட்களும் கசப்புத் தட்டின. சுற்றுப் புறங்களும் சூழ்நிலைகளும் பஞ்சுப் பொதிகளாய்ப் பார்வையில் தடுமாறின. ஆம்! மனித ஜீவிதத்தின் சங்கமக் கரை நோக்கி அவர்தம் ஆத்மா வேகமாய் நடை போட்டுக் கொண்டிருற்தது.

“பாலம்மா!”

ராமசாமி, தனது உள்ளோட்டமான சக்தி முழுவதையும் பயன்படுத்திய பிறகு ஹீனமாய் ஒலித்தது குரல்.

ஒருவார காலமாய்க் கணவனுக்குப் பக்கத்திலேயே அமர்ந்திருந்து, பணிவிடை செய்து கொண்டிருந்த பாலம்மா, இன்று கொஞ்சம் அயர்ந்திருந்தாள். அவளின் அயர்வான விழிகளுக்கு நோய் நீங்கிய புருஷனின் உருவம் கனவுகளாய்த் தேன்றிற்று. வினாடிகளின் அஸ்திவாரத்தில் யுகங்களை சிருஷ்டிக்கும் கனவு ஸ்தலத்தில் நோய்களற்ற சுக பிம்பமாய்க் கணவன் நடமாடிய போது தூக்கம் இன்னும் கொஞ்சம் ஆழமாய்த் தழுவிற்று.

உலுக்கி விழுந்து கண் விழித்தாள் பாலம்மா. குரல் நடுங்கிற்று, “என்னங்க, என்ன வேணும்?” ‘பாழாப் போன பாதகத்தி, இப்படியா அக்கறை இல்லாம செந்து  போவேன்?’ என்று தன்னைத் தானே சபித்துக் கொண்டாள்.

“தண்P, தண்P.” என்றார் ராமசாமி.

ஆறிய வென்னீரைச் சொட்டுச் சொட்டாய் வாயில் ஊற்றினாள். அந்த சின்னச் சின்ன நீர்த்திவலைகளின் ஸ்பரிசத்தில் தொண்டை கொஞ்சம் இதமாய்க் குளிர்ச்சி அடைந்தது. பத்துத் திவலைகளுக்கு மேல் இறங்கிய போது தொண்டை இறுக்கமுற்றுத் திணறினார். ‘அம்மா.’ ‘அம்மா’ என்று விரக்தியாய் முனங்க ஆரம்பித்தார்.

பெரியாஸ்பத்திரியில் வாங்கிய சிவப்பு மருந்தில் வெள்ளை மாத்திரைகளைக் கரைத்து வாயில் புகட்டினாள் பாலம்மா. அவள் முகமும் வரண்டிருந்தன. கண்கள் குழிந்திருந்தன. உடம்பு சோர்ந்து துவண்டிருந்தது.

“வேண்டாம்’ என்றார் ராமசாமி. “மருந்து வேண்டாம் பாலம்மா| எனக்கு என்னமோ போல இருக்கு. இனிமே நான் உசுரு பொழச்சு ஒன் குங்குமத்தக் காப்பாத்தவா போறேன்?”

பாலம்மாவின் விழிகள் சரம் சரமாய் நீர் சிந்தின. கணவனின் வார்த்தைகள் மனசை ரம்பமாய் அறுத்தன. அவரின் இறுதி யாத்திரைக்கு முன் தனது ஆத்ம அடங்கலை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று உணர்ச்சி வசப் பட்டாள்.

“தங்கராசு கிட்டப் போனியா?” என்றார் ரமசாமி.

‘இல்ல” என்றாள் பாலம்மா. முந்தானையால் கண்Pரைத் துடைத்து, இடது கையல் மூக்கைச் சிந்தி மதிலில் தடவினாள்.

‘ஏன்?”

“சும்மாதான், பிச்சக்காரி மாதிரி அவன்ட்ட போயி கையேந்தப் பிடிக்யல.

ராமசாமி உண்ர்ச்சிவசப் பட்டார். “ஏண்டி இப்படிப் பண்ற? என் வார்த்தயக் கொஞ்சங்கூட கண்ககுல எடுக்க மாட்டம்குறியே. எத்தன நாளக்கித்தான் பட்டினி கெடந்து சாகப் Nபுhற?” இந்த வார்த்தைகளைச் சொல்லி முடிப்பதற்குள் அவர் அதிகமாய்க் களைத்துப் போனார்.

பாலம்மா அமைதியாக இருந்தாள். கடந்த மூன்று நாட்களாக வென்னீருக்காக மட்டுமே அடுப்பு எரிந்தது. பசி, வயிற்றை நெருக்கிய போதெல்லாம் தண்ணீரைக் குடித்துத் தணித்துக் கொண்டாள்.

தனது ஒரே மகனை மனசுக்குள் சாடினாள். ‘இத்தன வருஷமா வளத்து வாலிபமாக்குளதுக்கு என்ன பிரயோஜனம் இருக்கு?’ என்று தன்னைத் தானே தேட்டுக் கொண்டாள். ‘சோறு கெடக்யாம பட்டினி கெடக்குற என்னைப் பத்திக் கவலைப் படலைன்னாலும் பரவாயில்ல| சாகக் கெடக்குற தகப்பனவாச்சும் கொஞ்நஞ்சம் பணம் குடுத்து ஒடம்பத் தேத்த ஒதவக் கூடாதா?’

படிக்கிற கால்த்தில் இருந்தே ‘சில்லறப் பய’ என்று பேரெடுத்தவன் சங்கரன். பதினைந்து வயதிலேயே தனது குடும்பத்திற்கு அன்னியப் பட்டுப் போனான். எவனெவனிம் எல்லாமோ எடுபிடி வேலை செய்து வயிற்றைக் கழுவி, பின்பு லாரியில் கிளீனராகி இப்போது கண்டக்டராக ஓடுகிறான். எப்போதாவது வீட்டுக்கு வருவான். ‘கால்’ ‘அரை’ என்று காசுகளை எறிந்துவிட்டு சாப்பிடாமல் கூட ஓடிவிடுவான்.

பாலம்மா கண்ணீர் விடுவாள். ‘ஒதத மகனாச்சேன்னு செல்லம் குடுத்து வளத்தனே, தாய் தகப்ன்குற பாசமில்லாம, குடும்பம்சுற பொறுப்பில்லாம, இப்படி வங்கங்கெட்டுத் திரியிறியே’ என்று புலம்புவாள். அவன் கண்ணீர்க்கெல்லாம் இவன் மசிந்ததில்லை. அவனுடைய பாதையிலேயே போய்க் கொண்டிருந்தான்.

தனது இறந்த கால வாழ்க்கையை மனசில் அசை போட்டாள் பாலம்மா. ஐந்து ஏக்கர் நஞ்சையும் பத்து ஏக்கர் புஞ்சையும் பசுமையாய்ச் சிரித்தன. அங்கு விளைந்த நெல்மணி போல், தானிய தவசம் போல் பாலம்மாவும் அந்தக் காலத்தில் பூரித்திருந்தாள். அந்த சந்தோஷத்தில் இன்று நூறில் ஒரு பங்கு கூடக் கிடைக்க வில்லையே என்று அடிக்கடி ஏங்கினாள். ராமசாமி ஒரு வயிற்று வலிக்காரர்.

பல வருஷங்களுக்கு முன் அவர் வயிறு ஆபரேஷன் செய்யப் பட்டு உபாதை நீங்கியது. ஆனால், ‘கனத்த வேலை ஏதும் செய்யக் கூடாது’ என்று டாக்டர் கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டார். அதன் விளைவ? அவரால் உழவுத் தொழிலைக் கட்டிக் காக்க முடியவில்லை. முதலில் நிலங்களைக் குத்தகைக்கு விட்டார் ராமசாமி. சில வருஷங்கள் குத்தகைப்

பணம் ஒழுங்காய்க் கிடைத்தது. பழைய செழுமை இல்லாவிட்டாலும் வாழ்க்கை ஓரளவுக்குத் தடையின்றி நடந்து போயிற்று.

பிறகு வானம் வரண்டது| பூமி பொய்த்துப் பேனது| உழுதவர்கள் ராமசாமியைக் கண்டபோதெல்லாம் ஓடி ஒளிந்தார்கள். அதனால் நிலங்களை விற்று விட்டுக் காபிக் கடை நடத்த முயன்றார். அதுவும் அவர் உடம்பைப் பாதித்தது. ‘யாவாரமும் வேணாம், ஒரு எழவும் வேணாம்’ என்று சலிப்படைந்து கடையை மூடிவிட்டார்.

அடிக்கடி பொழுதைப் போக்கத் தேனிக்கு வந்து போனார் ராமசாமி. நகை வேலை செய்யும் தங்கராஜ் பழக்கமானான்.

“ஏய்யா பெரிசு!”

தங்கராசு ராமசாமியை எப்போதும் ‘பெரிசு’ என்றுதான் அழைப்பான்.

“என்ன தங்கம்” என்றார் ராமசாமி.

‘நான் நகக் கட ஒண்ணு வக்யலாம்னு பாக்குறேன்.”

“ரெம்பச் சந்தோஷம். நல்ல ஐடியா.”

“அதுக்கு நீ ஒரு ஒதவி செய்யணும்.”

‘நானா? ஒதவியா?” கேலியாய்ச் சிரித்தார் ரமசாமி. ‘இருந்த தோட்டம் தொரவுகளையெல்லாம் வித்துத் தீத்திட்டு, பொம்பள வருமானத்துல பொழுதப் போக்கிட்டு இருக்கேன்.என்னால என்ன ஒதவி செய்ய முடியும்?”

‘பண ஒதவியெல்லாம் வேண்டாம் பெரிசு| நம்ம பரமன் இருக்கான்ல?”

“யாரு, அந்த டீக்கடக்காரன்தான? பாவம்! அவன் ஏழரக் கட்டையில இருக்யான் போல. மொடங்கியில போயி கடய வச்சுக்கிட்டு யாவாரம் இல்லாம பொலம்புறான்.”

“நானும் அப்படித்தான் கேள்விப் பட்டேன்” என்றான் தங்கராஜ். சிறிது நேரம் மௌன யோசனையில் ஆழ்ந்தான். “ஏன் இப்படி செய்யக் கூடாது?”

“எப்படி?”

அவன் கடயக் காலி பண்ணி சாவிய எங்கிட்ட குடுக்கட்டும்| அவனுக்கு நான் ஐயாயிரம் ரூபா குடுத்துர்றேன்.”

இதைக் கேட்டு ராமசாமி கொஞ்சம் உரக்கவே சிரித்தார். ‘ஏந்தங்கம்! அது என்ன அவன் சொந்தக் கடைன்னா பாத்த? வாடக எடமாச்சே?’

அவரைவிட உரக்க சிரித்தான் தங்கராஜ். “இத்தன வருஷமாத் தேனியில வாழ்ந்து டவுனோட நெலம தெரியாம இருக்கியே பெரிசு.” ராமசாமிக்கு நகரத்தின் மெய்ன் பஜாரின் மௌசு பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினான். கடை வைத்துக் கொண்டு வியாபாரத்தில் பலவீனமாய் இருகு;கும் சின்ன வர்த்தகர்களைப் பணத்தின் கம்பீரமான தோற்றத்தைக் காண்பித்து, வீழ்த்திவிடக் கூடிய சாதுர்யமான வியாபார நுணுக்கத்தை விவரித்தான். –“அதனால நான் என்ன சொல்றேன்னா, ஐயாயிரம் இல்ல, ஆறாயிரம் வேணும்னாலும் தந்துருவோம்| வகையாப் பேசி அவனக் காலி பண்ண வேண்டியது ஒம்பொறுப்பு. கடக்கிச் சொந்தக்காரனுக்கு வாடகைய கொஞ்சம் கூட்டிக் குடுத்துருவோம்.இத மட்டும் நல்ல முறையில முடிச்சுத் தந்தா ஒனக்குப் போதுமான அளவு ‘சீல்’ தாரேன்.”

“சீலா?”

வியாபார தந்திரங்களுக்காக, வியாபாரத் தரகுகளுக்காக, அந்தத் துறையோடு சம்பந்தப் படாதவர்களுக்குப் புரியாத சில பிரத்தியேக சொற்கள் இருக்கின்றன என்று ராமசாமிக்குத் தெரிய வில்லை. “சில்னா என்ன?”

தங்கராஜ் மனசுக்குள்ளேயே அயவரைக் கிண்டல் பண்ணினான். “சில்னா கமிஷன்னு அர்த்தம்.” சில வினாடிகள் மொனமாய் இருந்தான். பிறகு ராமசாமியின் மேல் வித்தியாசமான பார்வையை வீசிவிட்டு “யோவ் பெரிசு” என்றான். “உண்மையாவே ஒம்மேல ரெம்ப அனுதாபப் படுறேன். ஏந்தெரியுமா? இவ்வளவு பெரிய தேனியில பொழக்யத் தெரியாம இருக்கியே.”

தங்கராஜ் ராமசாமிக்கு நிறையவே பாடம் புகட்டினான். தரகுகளின் தன்மை, அது நகர வாழ்வில் ஆழமாய் ஊடுருவி வலிமையாய் நிலைநின்று விட்ட பாங்கு, தரகு இல்லாத வியாபாரப் பரிமாற்றங்கள், குழம்பு ரசம் இல்லாத வெறுஞ்சோற்றுப் படையலாய் ஆகிப் போன நிலமை, ஆகியவற்றை எடுத்துக் கூறினான்.

“தரகுங்கறது ஒரு நுணுக்கமான கலை| அதக் கத்துக் கிட்டவன் எந்த எடத்திலயும் சந்தோஷமா, சொகமா வாழலாம்| அதுக்குத் தேவையான ஒரே மூலதனம் பேச்சுத் தெறமதான்.”

ராமசாமியின் மன ஓட்;டத்தில் இனம் புரியாத புது வெள்ளம் பிரவாகமெடுத்தது. இருண்டு Nபுரியிருந்த காட்டுப் புதரில் லேசாய் வெளிச்தம் தெரிந்தது. இறந்த கால அறியாமைக்காக, வாழத் தெரியாத தருணங்களுக்காகத் தன்னைத் தானே நொந்து கொண்டார்.

“என்ன பெரிசு! யோசன பண்ணிட்டிருக்க? நான் காட்டுற வழி யாருக்கும் தொந்தரவு தராத வழி. மொதல் பேடணும்னு கஷ்டப் படவோ, போட்ட மொதலு நஷ்டமாப் போச்சேன்னு கவலப் படவோ தேவையில்ல. மனச நெலப் படுத்திட்டு ‘சரி’ன்னு சொல்லு. “

ராமசாமி விழித்துக் கொண்டார். “சரி தங்கம்| பரமன சந்திக்கிறேன். அவன் இருக்குற அநலமையில ஐயாயிரத்தக் கண்டா அசந்து போவான்.”

“இப்பவே தொழில ஆரம்பிச்சுடு| நான் மட்டும் நகக்க கட ஆரம்பிச்சுட்டன்னா, ஒனக்கு இதே தொழில் நெரந்தரமாயிடும். நகைய விக்யவோ வாங்கவோ வர்ர கெராக்கிகளக் கடக்கிக் கூட்டியாந்தா சீல் கெடக்யும்.”

ராமசாமியின் பயணப்பாதையில் புதுசாய் ஒரு பச்சைக் கொடி விரிந்து நின்று வழி காட்டியது.

“பாலம்மா!”

“தயவு செஞ்சு அதிகமாப் பேசாதீங்க.—-கொஞ்சூண்டு மருந்து குடிங்க.”

“மருந்து வேண்டாம்னா பேசாம இரு. நான் சொன்னேன்னு தங்கராசுகிட்டப் பேயி பத்து ரூபா வாங்கியா. எத்தன நாளக்கசித்தான் பசியில கெடந்து சாகப் போற? தரகுக்காரன் தொழில் எலலாம் இப்படித்தான்| ஒருநா தொழில் ஓடலைன்னா மறுநா பட்டினிpதான்.

வேண்டா வெறுப்பாக கணவனின் ‘கட்டளை’யை ஏற்றுக் கொண்டாள் பாலம்மா. தங்கராசு பத்து ரூபா கொடுத்தால் முதலில் ஒரு கிலோ வரகு அரிசி வாங்க வேண்டும். மீதிப் பணத்தைக் கொண்டு கான்வென்ட் ஆஸ்பத்திரியில் காண்பிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

இருபது வருஷங்களுக்கு முன் தேனிக்குக் குடி பெயர்ந்து வயந்த போது பாலம்மாவுக்கு எரிச்சலாய் இருந்தது. கிராமத்தின் அழகோ அமைதியோ நகரத்தில் தென்பட வில்லை. நகரத்து ஆண்களின் பார்வை குளுமையாய் இல்லாமல் கள்ளம் கபடு நிறைந்ததாய் அவளுக்குத் தோன்றியது. நகர வாழ்க்கை கசந்ததிருந்தாலும் கணவனின் பாதையில் இருந்து முரண்பட்டுச் செல்ல கிராமியப் பண்பாடு இடம் கொடுக்கவில்லை.

தங்கராசுவைப் பற்றி நினைக்கவே அவளுக்கு அருவருப்பாய் இருந்தது. முதன்முதலில் தேனிக்கு வந்தபோது ராமசாமியும் அவளும் புதுசயாய்த் திறக்கப் பட்ட அவனின் நகைக் கடைக்குப் Nபுhனார்கள்.

“யோவ் பெரிசு! இதுதான் ஒன் சம்சாரமா?” என்றான் தங்கராஜ். அவன் விழிகள் பாலம்மாவின் நெஞ்சைத் தடவித் தடவிப் பார்த்தன. அவன் முகம் சுளித்தாள். ‘பெறக்கித் தின்னிப் பய’ என்று மனசுக்ள்ளேயே நினைத்துக் கொண்டாள். ‘எனக்கே இந்தப் பாடுன்னா, சின்ன மொட்டுகளக் கண்டா என்ன பாடு படுத்துவானோ, பாவிப் பய.’ அதற்குப் பிறகு இன்றைக்குத்தான் சந்திக்கப் போகிறாள் பாலம்மா.

தங்கராசு வியாபாரத்தில் மும்முரமாய் இருந்தான். நகைத் தரகர் ஒருவர் ‘கெராக்கி’யோடு உள்ளே நுழைந்தார். கடையின் படிபக்கட்டு அருகே ஒதுங்கி நின்றிருந்தாள் பாலம்மா.

“தங்கராசு! அரப் பவுனு ஆகுறாப்புல ஒரு எலத் தோடு எடுத்துக் குடு! சீலு தடவலம்” என்றார் தரகர்.

‘சீலு தடவலம்’ என்ற வார்த்தைகள் பாலம்மாவுக்குப் புரிந்தன. இது தரகு பாஷை! அவர் அழைத்து வந்த நபருக்கோ மற்றவர்களுக்கோ இது புரியாது. கடைக்காரருக்கும் தரகருக்கும் மட்டுமே புரிகிற அந்த பரிபாஷையை அவளுக்கு இனம் காட்டியிருந்தார் ராமசாமி.

பாலம்மா மனசுக்குள்ளேயே முனுமுனுத்தாள். ‘அடப் பாவி! அரப் பவுனு தோடு வாங்கித் தாரதுக்கு பத்து ரூபா கமிஷனா? இப்படியெல்லாம் நகை எடுக்க வார ஏழைபாழைக கிட்ட தடவலம்(பத்து) ஈரிள தடவலம் (இருபது) என்று கொள்ளையடிச்சு என்ன ஆகப் Nபுhகுது? கடைசிக் காலத்துல கஞ்சிக்கு இல்லாமல்தானே சாக வேண்டியிருக்கு?”

அந்த கிராக்கி கடையை விட்டுப் போன பிறகு “தங்கராசு” என்றாள் பாலம்மா.

“யாரு?” புரியாமல் விழித்தான். சிறிது நேர யோசனைக்குப் பின் “ஓ! ராமசாமியோட வீட்டுக்காரம்மாவா?” என்றான் “பெரிசுக்கு ஒடம்பு சேட்டமில்லைன்னாங்களே, எப்படி இருக்கு?”

“ரெம்ப முடியாமக் கெடக்காக| அதான் ஆஸ்பத்திரி செலவுக்கு ஒங்pட்ட பத்து ரூபா வாங்கியாரச் சொன்னாக.”

“பத்து ரூபா இல்லையேம்மா. பணத்துக்கு ஏகப் பட்ட மொடக்கம். இன்னக்கி ஐயாயிரம் ரூபாய்க்காச்சும் வித்தாத்த்hன் நாளக்கி கொள்முதலுக்குப் போக முடியும்.”

சிரத்தை இல்லாமல் சொல்லிவிட்டு வியாபாரத்தில் மூழ்கினான். பாலம்மாவுக்கு விழிகள் வெடித்து விடும் போல் இருந்தது. தனது பிறவி ஈனமடைச்து யவிட்டதாய், தனது வாழ்க்கை சோரம் போய் விட்டதாய் ஆகரோஷப் பட்டாள். ‘அந்த மனுசன் சொன்னாக் கேக்குறாகளா? பத்து வருஷமா ஒண்ணுமண்ணாப் பழகி இந்தப் பயலோட வகுசியப் புரிஞ்சுக்காம இருக்காகளே.’  என்று உள்;ரப் புலம்பினாள்.

விஷயத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் ராமசாமி. ‘தங்கராசுப் பயலா அப்படி சொன்னான்?’ என்று ஆச்சர்யப் பட்டார். நகைத் தரகு என்ற தொழிலைத் தனக்குப் பயிற்றுவித்து தன்னை ஒரு மேம்பட்ட மனிதனாய் உயர்த்தி, தனது இருபதாண்டு கால வாழ்க்கை ஓட்டத்துக்குத் துணை நின்ற தங்கராஜ் இப்படியும் செய்வானா என்று சந்தேகப் பட்டர்.

“டே! தங்கராசு! நீயா என்ன உதாசீனம் பண்ணின? நீயா? நீயா?”

அழுது கொண்டிருந்த பாலம்மா “அய்யோ ஏன் ஆழுகுறீங்க? அமைதியா தூங்குங்களேன்” என்றாள்.

தங்கராஜு ‘மொடங்கியி’ல் கடை வைத்து ஆறு மாதம் வரை வியாபயாரம் இல்லாமல் வதங்கியதையும், ராமசாமி பெரிய நகைக் கடைகளுக்கு முன் போய்க் காத்திருந்து அங்கு வரும் கிராக்கிகளை நசூக்காகப் பேசி இவன் கடைக்குக் கடத்திக் கொண்டு வந்து விற்பனையை விருத்திப் படுத்தியதையும் நினைத்துப் பார்த்தார். அதனால் பெரிய கடை முதலாளிகளோடு பகைத்துக் கொள்ளவும் நேர்ந்தது.

அந்தப் பழைய நாட்கள் மனசில் விரிந்தன. “வெள்ளிக் கொலுசு விக்ய வந்திருக்காக| சீலு அசலம்.”

விற்க வந்தவர் கேட்ட விலைக்குக் nhகடுத்து விட்டுப் போய்விட்டார். ராமசாமிக்குப் பத்து ரூபா கொடுத்தான் தங்கராஜ்.

அவர் ஆச்சர்யப் பட்டார். ‘நாம கேக்குறத குடுக்க சங்கடப் படுற முதலாளிக மத்தியில இப்படியும் ஒரு மனுஷனா?

“நான் அஞ்சு ரூபா தானே சொன்னேன்.”

சின்னதாய் ஒரு புன்னகையை உதிர்த்தபடி தங்கராசு சொன்னான். “வந்த கெராக்கி ஒரு அசலம் சேத்துக் கேட்டாலும் குடுக்கத்தானே போறேன்? அந்த அஞ்ச நீ சாப்யபிட்டா எனக்கு பலம்.”

இன்னொரு நாள் ஒருவர் கழுத்துச் சங்கிலி எடுக்க வந்தார்.

“தங்கம்! நூத்துக்கு நூறு மச்சத்தில ஒரு தொங்கு சங்கிலி வேணும். சீலு பருப்புக்குப் பருப்பு.”

‘அது என்ன பருப்புக்குப் பருப்பு’ என மனசுக்குள் நினைத்துக் கொண்டார் கிராக்கி. ஆனால்வெளியில் ஏதும் கேட்க வில்லை.

வந்தவர் எண்பது கிராமில் ஒரு சங்கிலி எடுத்துப் போனார். ராமசாமிக்கு சந்தோஷமாய் இருந்தது. ‘பருப்புக்குப் பருப்புன்னா? அடேயப்யயபா! ஒரு கிராமுக்கு ஒரு ரூபாய். இன்னக்கி எண்பது ரூபா செத்துப் போச்சு.’

ஆனால் ராமசாமிக்கு நூறு ரூபா திடைத்தது. “இந்த கிராக்கியக் கூட்டியாந்ததுக்கு ஈரிள தடவலம் இனாம். கசமுசா இல்லாத கெராக்கியாச்சே.’ தங்கராசுவின் வியாபார உத்திpயை வியந்து பாராட்டினார் ராமசாமி. அவனின் ‘தாராள புத்தி’ அனைத்துக் கட்டளைகளுக்கும் அடிபணிந்து போக வேண்டும் என்ற உணர்வை அவருக்குள் ஏற்படுத்தியது. வாழ்நாள் முழுவதும் அவனுக்கு உண்மை ஊழியனாத் தொண்டாற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டார்.

“டேய் தங்கராசு! ஒன் ஈனப் புத்தியக் காட்டிட்டியே! மத்த மொதலாளிகளப் போல நீயும் ஒரு வயிறடிக்கிப் பயதான்னு நிரூபிச்சுட்ட. நான் நல்ல மொறையில சம்பாதிச்சுப் பொழப்ப ஓட்டிக்கிட்டு இருந்த காலத்துல கேட்டதுக்கு மேல அதிகமாக் குடுத்துக் குடுத்து சந்தோஷம் காட்டினியே| இப்போ, எரணங்கெட்டு சாகப் போற வேளையில, ஒரு சின்ன ஒதவி செய்ய மாட்டேங்குறியே| ஏன்? ஏன்? செ! நீ ஒரு மனுஷனா? ஆபத்துக்கு ஒதவாத மனத் தாராளம் பட்டப் பகல்ல வெட்ட வெளியில எரியிற டியூப் லைட் மாதிரி| அதனால யாருக்கு என்ன பிரயோஜனம்?”

இதற்கு மேல் அவரால் சிந்திக்க முடியவில்லை. அசதி கண்களையும் மனசையும் மூடிற்று. இமை இடுக்குகளில் கண்ணீர்த் துளிகள் பிதுங்கிக் கொண்டிருந்தன. சூழ்ச்சிகளும் நன்றியில்லாத நய வஞ்சகங்களும் விரவிக் கிடக்கும் இந்த உலகத்தை ஒரே மிதியில் நசுக்கி விடவேண்டும் போல் ஆNவுசமாய் இருந்தது.

பாலம்மாவிடம் ஏதோ பேச வேண்டும் என்று நினைத்தார். ஆனால், அவர்தம் நினைவுகள் தரை தட்டி நின்றன. சுவாசங்கள் மேல் நோக்கிப் பறக்க, உடம்பு கீழ் நோக்கி இழுத்தது. “ஐயோ” என்று அலற நினைத்த போது, பாறாங்கல்லாய் ஜட நிலை அடைந்தது.

பாலம்மாவின் அலறல் பாதாளத்தில் இருந்து கேட்டது. பின் அதுவும் தேய்ந்து மடிந்து போனது. அவள் கழுத்தில் மின்னிய மஞ்சள் துண்டு பார்வையில் இருந்து மங்கிப் போயிற்று. ஆம்! மனித ஜீவிதத்தின் சங்கமக் கரையில் ஓர் ஆத்மா அடங்கி விட்டது.

அந்தப் புதிய தரகர் கேட்டார். “என்ன தங்கராசு! நான் அசலந்தானே சொன்னேன்? நீ தடவலம் குடுக்குறியே?”

“நீங்க அசலம் சேத்து சாப்பிட்டா எனக்கு பலம்” என்றான் தங்கராசு. ஒரு யுகத்தையே அடிமைப் படுத்திவிட்ட கம்பீரத்துடன் அவன் இதழ்க் கடையில் ஒரு புன்னகை பிரகாசித்தது.

 

தாமரை ஜூலை 1980

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top