நீரின்றி ஓர் உலகம்?

2
(1)

“ஏங்க எழுந்திருங்க, மணி அஞ்சாயிருச்சு, பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் ரேசன்கடைக்கு ஓடிக்கிட்டு இருக்காங்க. நீங்க குறட்டை விட்டு தூங்கிட்டு இருக்கீங்க பாத்ரூம்பேட், டாய்லட்பேடுகள் தீர்ந்திருச்சு இன்னிக்கி பிள்ளைக உடலைத் துடைத்து ஸ்கூலுக்கு அனுப்பத்தான் இருக்கும்! இன்னிக்கு வாங்கலைன்னாஞ் நாளைக்கு நரிப்போகும். பிள்ளைக ஸ்கூலுக்ககுப் போக முடியாது, நீங்க வேலைக்கும் போகமுடியாது! நாற்றம் பிடித்த உடம்போடு எப்படி வெளியே போறது..?” என்று அம்மா புலம்பினாள். “ஏய், கொஞ்சம் நேரம் தூங்கவிடு. ராத்திரி ஒருமணிக்கே எழுத்திருச்சு நானும் எதிர்வீட்டுக்கார ராமுவும் ரேசன்கடை முன்னால முதல் ஆளா ஒரு செங்கல்லை வச்சு அதுமேல என் பேரு எழுததின பேப்பரை ஒட்டிவச்சிட்டு வந்திருக்கேன். ராமுவும் பேரெழுதி வச்சிருக்கான். நம்மதான் முதல் இட்லி, சப்பாத்திகள் வாட்டர்பேடு என எல்லாம் வாங்கிக்கலாம், ஒரு வாரத்திற்கு கவலை இருக்காது”

“அடப் போங்க, பிழைக்கத்தெரியாத ஆளா இருக்கிங்க, அங்க வரிசையில் வச்சிட்டேன்னு இங்கே தூங்கினாஞ் நமக்கு பின்னால வந்தவங்க எல்லாம் நம்ம அடையாளக் கல்லை, பின்னாலத் தள்ளிட்டு அவங்க அடையாளத்தை வச்சிட்டா என்ன செய்வீங்க” என்றபடி அப்பாவை அம்மா உலுக்கினாள்.

அப்பா திடுக்கிட்டு எழுந்திரிச்சவர் “சரி அந்த மவுத்வாஷ் எடு” என்றார். அம்மா கை மைக் போன்ற ஒரு பொருளை எடுத்துக் கொடுத்தார். அப்பா தனது வாயைத்திறந்து அந்தக் கருவியைக் வைத்து ஒரு பட்டனை அழுத்தினார். அதிலிருந்து வாசனையான காற்று வாய்க்குள் பாய்ந்தது. உள்பக்கமாகத் தொண்டையை இறுக்கி வாயை மூடி வாய்க் கொப்பளிப்பது போல் கன்னத்தை இருமுறை குமிழச்செய்து அந்தக்காற்றை ஜன்னலுக்கு வெளியே விட்டார். முடைநாற்றம் வெளியேறியது. வாஷ்பேடை அம்மாக்கிட்ட வாங்கி முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

அம்மா இரண்டு குடிநீர் கேப்சூல்களைக் கொடுத்தாள் அப்பா தனது நடுநாக்கில் வைத்து வாயை மூடினார். நாக்கு ஈரமானது. அப்புறம் ஒரு தேனீர் கேப்சூலை அம்மாவிடம் வாங்கி அடி நாக்கில் அதக்கிக் கொண்டார். டர்ட்ப்ரூப் பேண்ட் சர்ட்களை எடுத்து மாட்டிக் கொண்டு ரேசன் கடைக்கு கிளம்பினார்.

இதை எல்லாம் அரைத்தூக்கத்தில் கவனித்த படியே நான் தூங்கி விட்டேன். மணி ஏழு ஆச்சுன்று அம்மா எழுப்பினாள். நானும் தங்கையும் வாயை ஏர்வாஷ் பண்ணிகிட்டு ஒரு குடிநீர் கேப்சூல் சப்பி, காப்பி கேப்சூல் அதக்கியபடி அன்றைய டைம்டேபிள் படி லேப்டாப்பை ப்ரோக்கிராம் பண்ணி சார்ஜரில் இணைத்தேன் பின் பாத்ரூம் போய் பாத்வாஷ்பேடால் உடலை சுத்தம் செய்தேன். அது மல்லிகை வாசனையை வெளிவிட்டது. அம்மாவின் பாத்வாஷ்பேடு சந்தனம் மணக்கும். தங்கையின் பேடு ரோஜா வாசனை மணக்கும்.

நானும், தங்கையும் டர்ட்ப்ரூப் சிந்தடிக் துணியால் தைத்த யூனிபாம் அணிந்து பாப் க்ராப்பை ஹேர்வாஷ் சீப்பால் சீவி சரிசெய்து கொண்டோம் நாங்கள் க்ராப்பை சரிசெய்யும் போதெல்லாம் எங்கள் வீட்டில் சுவற்றில் தொங்கும் போட்டோவில் நீண்ட பின்னல் தொங்கும் எங்கள் பாட்டியின் ஹேர்ஸ்டைல் பொறாமையைத்தூண்டும். இந்த முடியை பாதுகாக்க ஹேர்வாஷ் பண்ணவே எரிச்சலாய் இருக்கு. பாட்டி அவங்க காலத்தில் எப்படி தலைகுளித்து சிக்கெடுத்து நீண்ட பின்னல் போட்டாங்க என்பதை அம்மா சொல்லும்போது ஏதோ தேவலோகத்தில் நடந்த மாதிரி இருக்கும். நாங்க ரெண்டு பேரும் யூனிபார்ம் போடறதுக்குள்ள அம்மா எலக்ட்ரிக் இன்டக்டரில் நான்ஸ்டிக்கர் பாத்திரத்தில் ரெடி இட்லியை தயார் பண்ணிட்டார் சட்னி இல்லை. இட்லியிலேயே இதமான காரமுள்ள சாம்பார் ருசி மணக்கும்! அதை சாப்பிட்டு வாயைத் துடைத்து தயார் ஆனோம்.

அப்பா ஒரு அட்டை பெட்டி நிறைய ரேசன் சரக்குகள் வாங்கி வந்தார் அம்மா பெட்டியைத் திறந்து சரிபார்த்தார். ஒரு வாரத்திற்கு தேவையான நீர்க்கேப்சூல்கள், பாத்வாஷ்பேடுகள், குக்குடு இட்லி, தோசை, வடை, சப்பாத்தி, நூடுல்ஸ், மசாலாபேஸ்ட்டுகள், சுகர்பேஸ்ட்டுகள் போன்றவை இருந்தன. அம்மா, அப்பாவை பெருமையோடு பார்த்தாள். அப்பா காலரை தூக்கி விட்டுக் கொண்டார். அப்பாவிடம் சொல்லிவிட்டு நானும் தங்கையும் தெருமுனைக்கு வந்தோம். ஸ்கூல் பஸ்க்காக வரிசை நின்றது. அந்த வரிசையில் நின்றோம். காத்திருப்பதில் எரிச்சலாக இருந்தது. எங்க பாட்டி, தாத்தா படிக்கிற காலத்தில் எல்லாம் அவங்க அவங்க பிள்ளைகளை டூவீலர்களில் கொண்டு போய் விடுவார்களாம்ஞ் வசதியானவங்க அவங்க பிள்ளைகளை காரில் கொண்டு போய் விடுவாங்கலாம். அது ஒரு பொற்காலம் இப்பத்தான் பெட்ரோல் டீசல் வாகனங்களே இல்லை. எல்லாம் சூரியசக்தி வாகனம்தான் அதுவும் பொது பஸ்தான் கார் மொபெட் எல்லாம் போட்டோவில்தான் பார்க்க முடியும். பஸ் வந்தது ஒருவர் ஒருவராக ஏறினோம்.

ஞாயிற்றுக்கிழமை வந்தது. அப்பா எங்களை என்டர்டெயன்மெண்ட் சென்டருக்கு அழைத்துப் போனார். முதலில் ‘4ன’ தியேட்டருக்குப் போனோம் அந்தத் தியேட்டரில் ஒரு சோவுக்கு 30 பேர் தான் உட்காரமுடியும். ஒரு சோ பத்து நிமிடம்தான். நானும் அப்பாவும் நடுவில் தங்கச்சியும் என ஒரே வரிசையில் உட்கார்ந்தோம். உட்கார்ந்ததும் ஒரு பணியாளர் சீட்பெல்ட்டை போடச் சொல்லி சரிபார்த்து வந்தார். முப்பது பேர் மட்டும் சரியாக உட்கார்ந்து விட்டோம் என்று அறிந்து ஒரு விசில் அடித்தார். தியேட்டருக்குள் விளக்குகள் அணைந்தன. திரைக்குள் ஒரு அடர்ந்த காடு! பச்சை பசேல்னு அழகான மரங்கள், மாபலா, வாழை, மரங்கள் ஒரு புறம்! ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சுமரங்கள், ஒருபுறம் அடுத்த நொடி நாங்கள் உட்கார்ந்தபடியே காட்டுக்குள் வேகமாய்ப் போனோம் மரக்கிளையில் இடிப்பது போலும், இடிக்காத மாதிரியும் இருந்தது. பயமாகவும் இருந்தது. ஜில்லுன்னு காற்று வீசுகிறமாதிரியும் இருந்தது. வேகமாய்ப் போனோம் அங்கே பொது பொதுன்னு நீர் வழியிற அருவி சளசளன்னு சத்தம்! அந்தக்காலத்தில் குற்றால அருவி இப்படித்தான் இருந்துச்சாம். இந்த அருவிக்குள்ளே நாங்க போனோம் எங்கள் மீது ஜில்லுன்று தண்ணி சடசடன்று அடிப்பதுபோல் விழுகின்ற மாதிரி உணர்வு “குற்றால அருவியிலே குளித்தது போல் இருக்காஞ்” என்று பாட்டுச்சத்தம் கேட்டது.

அப்புறம் உட்கார்ந்த படியே வெளியே வருவது போல இருந்தது அங்கே வரிசையாய் கடைகள் ஜிலேப்பி, அல்வா, இட்லி, தோசை, வடை, புரோட்டா, பணியாரம், என விதவிதமான பலகாரங்கள் சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இரண்டு பேர் அந்த பலகாரங்களை தட்டில் வைத்து எங்களுக்கு ஊட்டுவது போல் இருந்தது! பார்த்தால் பசி தீரும்” என்று பாடல் ஒலித்தது. எனக்கு ஜிலேபி கொடுன்னு என் தங்கச்சி அழுதாள், “ஏய் உட்காருடி விழுந்திடுவே’ என்று சத்தமிட்டு தங்கச்சியைப் பிடித்தேன்.

“ஏய் என்னடி புலம்புற, என்னடி கனவு கண்டே” என்று அம்மா எனது தொடையில் தட்டியபடி எழுப்பினாள்.

அம்மா, மவுத் ஏர் வாஷ் கொடும்மா” என்றேன் என்னடி கனவு இன்னும் கலையலையா என்று என்னை உலுக்கினாள் தண்ணீர் இல்லாத உலகம் எப்படி இருக்கும்? நீரின்றி அமையாது உலகம் எனற பாடல் படித்தபடியே தூங்கினது நினைவுக்கு வந்தது.!

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 2 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top