எரிச்சலடைந்தான். என்ன இது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறதே. எல்லா நேரங்களிலும் எல்லாச் சூழலிலும் இது எப்படி சாத்தியமாகும். நெருக்கடி மிகுந்த நேரங்களில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அதற்காக யாருமற்ற நள்ளிரவில் கூட கடைபிடிக்க வேண்டும் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். அரசு எப்பொழுதுமே தவறானவற்றை மட்டுமே சிந்திக்குமோ, அதிகாரம் நடைமுறைச் சிக்கலை கவனத்தில் கொள்ளாதோ, மீறலைச் செய்வோருக்கு சிறிதான அபதாரம் போட்டால் பரவாயில்லை. அதற்காக ஆதார் கார்டை பறிமுதல் செய்துவிடுவார்களாம், எல்லாவற்றிற்கும் ஆதாரை கட்டாயமாக்கிவிட்டு இப்படியொரு சட்டத்தைப்போட்டால் என்னதான் செய்வது. யாராவது காவலர்கள் நின்றால்கூட யாதாகினும் சாக்குபோக்கு சொல்லி போகலாம். அதற்கும் வழியில்லை. எங்கும் கேமராக் கண்கள்.
இரவு ஷிப்ட் வந்தாலே இதுதான் பிரச்சினை. பத்துநிமிடத்தில் வீடடைந்த சூழல் மாறி இப்பொழுதெல்லாம் ஒரு மணி நேரமாகிவிடுகிறது. யாருமற்ற போதும் நின்று நின்று வரவேண்டியிருக்கிறது. எல்லா நேரங்களிலும் சிக்னலை கடை பிடிக்க வேண்டும் இல்லையாயின் ஆதார் கார்டை பறிமுதல் செய்வோம் இது நம் தேசத்தின் நலன் பொருட்டுப் போடப்படும் சட்டம் இச்சட்டம் சமூக விரோதிகளிடமிருந்து நம் தேசத்தை காக்கும் என கையில் சூலாயுதத்தை ஓங்கி பிடித்தவாறு மோடிஜி ஆக்ரோசமாக அறிவித்த காட்சி மனதில் தோன்ற புல்லட் வண்டியின் சத்தம் நினைவைக் கிழித்து விரைந்தபடி இருந்தது. யாராவது மந்திரி மகனாகவோ சொந்தக்காரனாகவோ இருப்பான் அதான் இவ்வளவு துணிச்சலாக போகிறான் என அவ்வண்டியை பார்த்துக்கொண்டிருக்கையில் அத்தெருவில் முகப்பு வீட்டின்முன் எரிந்துகொண்டிருந்த சிவப்பு விளக்கு அணைந்தது.