தெளிவு

0
(0)

‘என்னய்யா ஆபீஸ் இது? அநியாயமா இருக்கு! யாரு என்ன சாதின்னே தெரியாது. கழுதை, வெள்ளந்தியா பேசுவேன். இதுக்கு மெமோ, டிரான்ஸ்பர்னு மிரட்றாங்க! ஏம்மா ஏஒன் சீட்டு தங்கச்சி, நான் யாரையாவது சாதியைச் சொல்லிப் பேசியிருக்கேனாமா? இந்த இருபது வருஷக் காலத்தில் சாதி வித்தியாசம் பார்த்து பழகி இருக்கேனாமா? நீ சொல்லு தங்கச்சி!’ – ராஜு உரத்த குரலில் புலம்பிக் கொண்டிருந்தார்.

அவரைப் பார்க்க பரிதாபமாகத்தான் இருக்கிறது. வெகுளியான மனுஷன். மாங்கு மாங்கென்று ரெண்டு இருக்கை வேலைகளை இழுத்துப்போட்டு செய்கிறார். எந்த ஆதாயமும் எதிர்பார்க்காத மனுஷன். அவர்கிட்ட இருக்கிற ஒரே பலவீனம் எதையும் மனசில் வச்சுக்காமல் பேசுவார். சந்தோஷமோ சடவோ உச்சிமேகம் கலையற மாதிரி, மனுஷன் கொட்டிட்டுதான் சும்மா இருப்பார். யாரையும் பகையா நினைக்கமாட்டார்.

அவரையே பார்த்துக் கொண்டிருந்த என்னிடம் வந்து புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

‘தம்பி நீங்களே சொல்லுங்க, நான் தப்பு செய்யிற ஆளா? காலியா கிடக்கிற சீட்டு வேலைகளை எல்லாம் இழுத்து போட்டு மாங்கு மாங்குன்னு செய்யிறதுக்கு பரிசாவா ஓலை தயாராகுது? டிரான்ஸ்பர்னு வேற பேச்சு அடிபடுது? இது நியாயமா தம்பி? ஒரு சங்கவாதி அதிகாரியா வந்திருக்காருன்னு சந்தோஷப்பட்டா அவரு ஓலையில்ல விடப்போறாரு! நீங்களும் சங்கத்துக்காரர்தானே தம்பி, கொஞ்சம் பேசுங்க தம்பி’ என்னை உலுக்கினார்.

‘அண்ணே கவலைப்படாதீங்க, உங்களுக்காக நான் பேசுறேன்’ என்று எழுந்தேன். அவர் பொங்கும் எரிமலைப் போல பெருமூச்சு விட்டார்.

அலுவலர் அறைக்குச் சென்றேன் ‘சார் நம்ம ராஜு சார்…’

‘உக்காருங்க, நானே கூப்பிடலாம்னு இருந்தேன். நீங்களே வந்தீட்டீங்க! ராஜு விசயத்தை நான் பார்த்துக்கிறேன். யாரு எப்படின்னு எனக்குத் தெரியும். நீங்களும் நம்ம புதுக்கண் காணிப்பாளர் சாரும், போடி நாயக்கனூர் அலுவலகம் போய் தணிக்கை அறிக்கைகளை ஆய்வு செய்திட்டு வந்தீருங்க.. காலையில சீக்கிரமா கிளம்பிப்போய் முடிச்சிட்டு வந்து எனக்கு நாளைக்கே அறிக்கை தரனும்!’

நான் தயங்கினேன். என் மனவோட்டத்தை புரிந்தவாறே ‘ராஜுவைப் பத்தி கவலைப்படாதீங்க! நான் பார்த்துக்கிறேன்’ என்றார் அதிகாரி கிருஷ்ணன்.

புது சூப்பிரண்டெண்ட் சுப்பிரமணியமும், நானும் ஆரப் பாளைத்தில் பஸ் ஏறினோம். காலை நேரம் புறநகருக்குப் போகும் காய்கறிக்காரர்கள் கூடைகளோடு ஏறினார்கள். நடத்துனர் உற்சாக மாக டிக்கட் கொடுத்துக் கொண்டு வந்தார். ஒரு கிராமத்துப் பெண்மணி ‘ஒன்றரை டிக்கட் உசிலம்பட்டி’ என்று பணத்தை நீட்டினார்.

‘அரை டிக்கட் யாரு’

இந்தா, இந்தப் பையன்’

‘ஏம்மா பயனைப் பார்த்தா ஒன்றரைக்கழுதை வயசாகும் போல இருக்கு! அரை டிக்கட் கேட்கிற? அந்தா அந்த படிக்கட்டு கம்பி கிட்டேபோய் நிக்கச் சொல்லு. உசரம் கொறவா இருந்தா அரை டிக்கட்டு காசு குடு’

‘இந்தாய்யா கண்டக்டரு, துட்டு வேணும்னா வாங்கிக்க! அதுக்காக அழகு பெத்த என் பிள்ளையை கழுதைன்னு வையற தெல்லாம் வச்சுக்காதே! எம் புள்ளைக்கு எட்டு வயசுதான் ஆகுது என்று வெடித்தபடி பணத்தை நீட்டினார்.

‘என்ன அந்த பையனை கண்டக்டர் திட்றாரே…?’ என்று கண்காணிப்பாளர் முனுமுனுத்தார்.

‘சார் இதெல்லாம் சகஜம் சார். கண்டுக்காம வாங்க’ என்றேன்.

பஸ் புறநகரில் ஆள்களை இறக்கி அங்கங்கே கை நீட்டுபவர்களை நின்று ஏற்றிக் கொண்டு ஊர்ந்தது.

‘ஏய்யா பி.பி வண்டின்னு சொல்லி காசு கூட வாங்கிறீங்களே, வண்டி வேகமாக நிக்காமப் போகும்னு ஏறினா… இப்படி புளிய மரத்துக்கு புளிய மரம் நிறுத்தி ஓட்றீங்களே, வெரசா போங்கயா! அவசர ஜோலிகளுக்குப் போய்ச் சேரணும்ல்ல!’ என்று பெரியவர் ஒருத்தர் அங்கலாய்த்தார்.

‘அய்யா பெரிசு, பி.பி ன்னா பாய்ண்ட் டு பாய்ண்ட் இல்ல! புளிய மரத்துக்குப் புளிய மரம் நின்று போறதுன்னு அர்த்தம்’ என்று ஒரு இளவட்டம் நக்கலடித்தார். பயணிகள் நடத்துனரைப் பார்த்து சிரித்தனர். நடத்துனர் காதை இறுக்கிக்கொண்டு இன்வாய்சை பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒரு பயணி, ‘கண்டக்டர் சார் உசிலம்பட்டி என்ட்ரன்ஸ்ல அந்த ஆஸ்பத்திரி முன்னால கொஞ்சம் நிறுத்துங்க சார். உடம்புக்கு முடியாதவங்க ஆஸ்பத்திரிக்கு போகணும்!

‘என்னயா இது கழுதைக்கு வாக்கப்பட்ட பொழப்பா போச்சு! நின்று இறக்கி, ஏத்திகிட்டு போனாலும் திட்றீங்க, நிக்காமப் போனாலும் திட்றீங்க! போய் டிரைவர்கிட்டப் போய் சொல்லுங்க?

கண்காணிப்பாளர் உடலில் பூச்சி ஊறியது போல நெளிந்தார்.

அந்தப் பயணி ஓட்டுனரிடம் போய்ச் சொன்னார்.

‘என்ன சார் டீசல் சிக்கனம்னு டீசல் பம்பை நிர்வாகம் அடைச்சி வச்சிருக்கு. எவ்வளவு மிதிச்சாலும் வண்டி வேகமாகப் போகாது. அதனால ஒரே லெவலா போய்கிட்டு இருக்கோம். வர்றவங்க எல்லாம் எகடாசி ஏளனம் பன்னிக்கிட்டு வர்றாங்க. நீங்க வேற, அங்க நிறுத்து, இங்கே நிறுத்துங்கிறீங்க. அங்கங்கே நின்னு நின்னு போனா டீசல் செலவு கூடும்! அதனால கோவிச்சுக்காதீங்க நிறுத்த முடியாது!

‘சார், சார் சீக்காளி, வயசானவங்க. ஆட்டோ பிடிச்சு திரும்ப வரவும் வசதி இல்ல! கொஞ்சம் மனசு வைங்க சார்!

‘என்னய்யா இது! புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க! இப்படி கார்ப்பரேன்ஸ்ல வண்டி ஓட்றதுக்கு அஞ்சாறு கழுதைகளை மேய்க்கலாம்னு தோணுது’

அந்த பயணியின் முகம் ஜீவன் இழந்து போவதைக் கண்ணாடியில கவனித்தவர்.

‘சரி, சரி இன்னிக்கு இறக்கி விடறேன். நானை பின்னே இப்படி கேட்காதீங்க! எங்க பொழப்பையும் கொஞ்சம் யோசிங்க!

வண்டி நின்று நோயாளி இறங்கியதும் தொடர்ந்தது. கண்காணிப்பாளர் கடுவன் பூனை போல முகத்தை உர்ரென்று வைத்தபடி ஜன்னல் பக்கம் திரும்பினார். நான் செய்தித்தாளை பார்த்த கண்ணயர்வில் உறங்கிப்போனேன். பஸ் போடி நாயக்கனூரை நெருங்கிக்கொண்டிருந்தது. ஒரு பக்கம் மலையும் இன்னொரு பக்கம் வயலும், இதமான காற்றும் பார்த்து ‘ஏரியா அருமையா இருக்கு சார்’ என்றார் கண்காணிப்பாளர்.

தூக்கம் கலைந்த நான், ‘ஆமாம் சார், நல்ல ஏரியா. வெயிலு காலத்தில் வெயிலு கடுமையா இருக்கும். குளிர் காலத்தில் குளிரும் ஜாஸ்தியா இருக்கும். இந்த ஏரியா ஜனங்களும் அப்படித்தான். மனசுக்கு பிடிச்சா ரொம்ப பாசமா இருப்பாங்க! உயிரையும் கொடுப்பாங்க! பிடிக்கலைன்னா எதிரியா கொந்தளிப்பாங்க! ஆனா உறவையும் பகையையும் ரொம்ப நேரம் மனசில வச்சிக்க மாட்டாங்க!’ என்றேன்.

‘நல்ல ஜனங்கய்யா’ என்று முறுவலித்தார்.

பஸ் போடி நகருக்குள் நுழைந்தது. ஒரு சாலை முடக்கில் பஸ்கள் எதிரெதிராய் வரிசையாய் நின்றன. ஹாரனை ஒலித்தன.

‘கழுதைய, வண்டி டயம் எடுக்கிறதா… இப்படியே ஒண்ணு மில்லாம உருட்டிட்டுப் போறதா…? பரமசிவம் இறங்கி அத என்னான்னு பார்த்துட்டு வாங்க! ஓட்டுனர் அலுத்துக்கொண்டார்.

நடத்துனர் இறங்கி ஓடினார். பத்து நிமிடங்கள் நகர்ந்தன. வண்டிக்குள் அங்கலாய்ப்புகஜம், பெருமூச்சுகளும் புழுங்கின. முன்னும் பின்னுமாய் வண்டிகள் ஹாரன் ஒலிகளை எழுப்பின. காது கிழிந்து விடும் போலிருந்தது.

நடத்துனர் ஓடிவந்து ஏறினார்.

‘சரியாப் போச்சு வண்டியை எடுங்க!’

‘என்னப்பா அது? எதுவும் ஆக்சிடெண்டா ?’

‘அதெல்லாம் இல்லண்ணே! காலைக்கட்டின கழுதைக ரெண்டு நடுரோட்ல நின்னுகிச்சு. ஆரன் சத்தம் கேட்டு மிரண்டு ஒன்று தெக்க இழுக்க, இன்னொன்னு வடக்க இழுக்க நடுரோட்ல தடுமாறி தத்தளிச்சுதுக. நம்மாளுக ஆரன் அடிக்குதுகளே ஒழிய இறங்கி விரட்டத் துப்பில்ல! கழுதைய நான் தாம் போய் விரட்டிட்டு வர்றேன்’ குரல் தழுதழுக்கப் பேசினார். இறுகிய முகத்தில் கண்ணீர் மளமள வென உருண்டது. அஜீரண வயிற்றப் பொருமல் நீங்கியது போல் பெருமூச்சுவிட்டார்.

ராஜு சடக்கென்று எழுந்து கண்காணிப்பாளரை கட்டிப் பிடித்துக்கொண்டார். ‘சார் நீங்க உணர்ந்திட்டீங்கள்ள சார், அப்புறம் ஏன் வருந்துறீங்க? நாம எல்லோரும் ஒரே குடும்பம் சார். நாம அலுவலருக்கு நன்றி சொல்வோம்.’

‘சேச்சே நன்றி எல்லாம் எதற்கு, மனுஷர் ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டாலே போதும். உக்காருங்க எல்லோரும் டீ சாப்பிடலாம்.’

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top