டவுன்பஸ்!

0
(0)

வெகு நேரம்வரை காத்துக்கொண்டிருந்ததில் சலித்துப் போனார் தங்கவேலு. ‘’என்ன ‘’பஸ்ஸோ, என்ன எழவே,’’ நாக்கு முனுமுனுத்தது. ‘’இந்த டவுன் பஸ்ஸ{க்ககுக் காத்துக்கெடக்கதுலயே இன்னயப் பொழுது போயிரும் போல்ருக்கு.’’

பஸ்டாண்ட் முழவதையும் கண்களால் அளவெடுத்தார். ஒருபுறத்தில் கடைகளும் இன்னொரு புறத்தில் பயணிகள் தங்குமிடமும் அமைந்திருந்தன. நடுவே பெரிய வீதிபோல் விஸ்தீரணம். அந்த விஸ்தீர்ணத்தின் மையத்தில் பொட்டு வைத்தாற்போல் ஒரு விளக்குத் தூண்!

ஹாரன் அடித்துக் கொண்டு பின் வழியாக ஒரு பஸ் ஓடி வந்தது. ‘திண்டுக்கல்,’ ‘திண்டுக்கல்’ என்று ஒருவன் கத்தத்தொடங்கினான்.

அவர் வந்து ஒருமணி நேரம் ஆகப் போகிறது. இன்னும் பஸ் வரவில்லை. வத்தலகுண்டு போக இந்த ரூட்டில் மூன்று வண்டிகள் இருக்கின்றன. ஒன்றுகூட வரவில்லையே என ஆதங்கப் பட்டார்.

வயசின் தள்ளாமை சோர்வை உண்டு பண்ணியது. குhல்கள் வலித்தன. எங்காவது உட்கார வேண்டும் போல் இருந்தது.

பஸ்டாண்டின் தலைவாசலில் நிழல் பரப்பிய மதிலடியில் சாய்ந்து உட்கார்ந்தார். கொஞ்சம் சுகமாக இருந்தது.த. வாழ்க்கை இப்படியே ஓய்வாக, சுகமாக இருக்காதா என்று ஏங்கினார். தினம் காட்வேலை, கட்டடத்து வேலை என்று உழைத்து உழைத்து உடம்பு உலைந்திருந்தது. கொஞ் நேரம் நிற்க முடியவில்லை; நடக்க முடியவில்லை.

மீண்டும் ஆரன் சத்தம்! ஆசையோடு திரும்பிப் பார்த்தார். வத்தலகுண்டு போக ஒரு ரூட் பஸ்! ஒருவன் ஊர் பேரை உச்சரித்து ஜனங்களை அழைத்துக் கொணுண்டிருந்தான்.

இதிலேயே போய்விடலாமா என்றிருந்தது. வத்தலகுண்டிலிருந்து பெரியகுளத்துக்கும் அங்கிருந்து தேனிக்கும் டவுன்பஸ்ஸில் போய்க் கொள்ளலாம். அங்கெல்லாம் அடிக்கடி வண்டி கிடைக்கும்.

மனம் இடம் கொடுக்கவில்லை. இருபத்தைந்து பைசா கூடுதலாய்ச் செலவழிப்பதா? அந்தக் காசு இருந்தால் பேரப் பிள்ளையை ரெண்டு முறை வாயமத்தலாம்.

நினைவு அல்லாடிக் கொண்டிருந்த போது பஸ் போய்விட்டது.

உள் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்தார். பத்து ரூபா நோட்டு வடவடவென்றிருந்தது.

இந்தப் பத்து ரூபாயைப் புரட்ட பட்ட பாடு…அடேயப்பா! கூடப் பிறந்த அண்ணனே இல்லை எனக் கைவிரித்த போது சங்கடப் பட்டுப் போனார். உடம்பு விருவிருவென்று சோர்ந்தது. ஏழையாயப் பிறப்பது எவ்வளவு பெரிய குற்றம்!

கடைசியாக பக்கத்து விPட்டுப் பழனியப்பனிடம் கெஞ்சிக் கெதறி பத்து ரூபா வாங்கினார். ஒரு மாதத்துக்குள் திருப்பித் தந்துவிட வேண்டும் என்பது பேச்சு.

பழனியப்பனை நினைத்த போது பொறாமையாக இருந்தது. அவன் நாலு பேரைப் போல் கவுரவமாக வாழ்கிறான். அவனும் அவன் பொண்டாட்டியும் நித்தமும் சம்பாதிக்கிறார்கள். கால், அரை மிச்சம் வைக்கிறார்கள். இப்போதோ நூறோ இருநூறோ வைத்திரு;பபதாகக் கேள்வி.

சிவகாமி நினைவுக்கு வந்தாள். ‘அவ உசுரோட இருந்திருந்தா நானும் பழனியப்பனப் போல, ஏன், அவனவிட ஒரு மடங்கு மேலாவே ஆயிருப்பேன்’ என்று நினைத்துக் கொண்டார்.

அவள் கண்ணை மூடிய பிறகு குடும்பம் நொடிக்கத் தொடங்கியது. தங்கNலு மட்டும் வேலைக்குப் போனார். அவர் நிழலை நம்பி நாலு ஜீவன்கள் காத்துக் கடந்தன. தாயின் ஏக்கத்தில் இருந்து அதுகளை மீட்கவே படாதபாடு பட்டார். கடனும் பட்டார்.

ரெண்டு வருஷங்களுக்கு முந்தி மூத்த மகள் ஜெயாவை தேனியில், தன்னைப் போல ஒரு அப்புரானிக் குடும்பத்துக்குத் தாரை வார்த்துக் கொடுத்த போது கடன் சுமை அதிகமானது. ரேண்டாயிரம் ரூபா கடனாளி ஆனார் அவர்.

மீண்டும் ஹாரன் சத்தம்! மீ;ண்டும் ஏமாற்றம்! எதிர்பார்ப்பும் ஏமாற்றமுமே வாழ்க்கையோ என்று தோன்றியது.

மூத்த மகன் செல்லமணி டெயலரிங் கற்றுக் கொண்டிருக்கிறான். இன்னும் கொஞ்ச நாளில் அவர் சுமையைப் பகிர்ந்து கொள்ள வந்து விடுவான். அதுவரை அவருக்குக் கஷ்டம்தான். ஓயாத கஷ்டம்! ‘’ஏலே செல்லம்! தேனிக்கிப் போயி அக்காவப் பாத்துட்டு வாரேன். தமபியவும் தங்கச்சியவும் சூதானமாப் பாத்துக்க.’’ என்று சொன்ன போது மகள் முருகாம்பா எகுறிக் குதித்தாள்.

‘’நானும் வருவேன், அக்காவப் பாக்க நானும் வருவேன்.’’

செல்லமணியும் மொட்டையாண்டியும் கூட ஆவல் பொங்கப் பார்த்தார்கள். ‘’நாங்க மட்டும் அக்காவப் பாக்க வேண்டாமா?;’’ என்ற கேள்வியைச் சுமந்து கொண்டு அவர்கள் கண்ணிமைகள் படபடத்தன.

தங்கNலு வருத்தப்பட்டார். ‘இந்தப் பிஞ்சுகளுக்கு மட்டும் ஆசை இருக்காதா? இருக்கும்தான். ஆசைப் பட்டு என்ன செய்ய? பஸ்ஸ{க்குப் பணம் வேண்டுமே!

நிலக் கோட்டையில் இருந்து தேனிக்கு ரூட் பஸ்ஸில் போவது என்றால் ஒரு டிக்கட்டுக்கு நாலு ரூபாய். மாறி மாறி டவுன் பஸ் பிடித்துப் போவது என்றால் கூட ஒரு டிக்கட்டுக்கு இரண்டரை ரூபா வேண்டும். நாலு டிக்கட்டுக்குப் போக வர இருபது ரூபாய்! அடேயப்பா!

‘’இல்லடா கண்ணு, அடுத்த தடவ போகும் போது அய்யா ஒங்களக் கூப்பிட்டுப் போறேன்.’’

முருகாம்பா பிடிவாதமாய் அழத் தொடங்கினாள். ‘’நானும் வருவேன்| நானும் வருவேன்.’’

ஆறதலாய்ப் பேசினார் தங்கவேலு. மூன்று பேருக்கும் வாங்கித் தின்ன கால் கால் ரூபாய் தந்தார். சினிமாவுக்குத தனியாகத் தந்தார். ‘’மொத ஆட்டம் போய்ட்டு வந்து கதவச் சாத்திப் படுத்துக்கங்க| அய்யா காலேல வெள்ளன வந்துர்றேன்.’’

என்றைக்கும் இல்லாத அளவு அதிக காசு! சின்னதுகளுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அக்காவைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை குறைந்து போய் முகங்கள் பூரித்தன.

‘’போய்ட்டு வாங்க’’ என்று ஒப்புதல் தந்தார்கள்.

‘’தங்கலேண்ணே’’ என்ற குரல் கேட்டு பிரத்தியட்சத்துக்கு வந்தார். கையைக் கீழே ஊன்று, உடம்பை முன்ப்க்கம் வளைத்து பைய எழுந்கரித்தார். அசாத்தியமாக இருந்நது.

‘’என்ணே இன்னம் கௌம்பலயா?’’

அண்ணாந்து பார்த்தார். மம்பட்டியும் கையுமாய் பழளியப்பன் நின்றிருந்தான். காட்டு வேலை முடித்துவிட்டு, குறுக்காக பஸ்டாண்டு வழியாய் வீட்டுக்குப் போகிறான் எனப் புரிந்து கொண்டார்.

‘’ஏன் இன்னம் பொறப்படல?’’

‘’டவுன் பஸ்ஸப் பாத்துக்கிட்டிருக்கேன்.’’

லேசாகச் சிரித்தான். ‘’டவுனு வண்டிய எதிர்பாத்து என்னேரம் ஊர் போய்ச் சேர?’’

எந்நேரம் ஆனால் என்ன? போக வர டவுன்பஸ் சார்ஜூக்கும் பேரனுக்கு பிஸ்கட் வாங்கவும்தானே காசு இருக்கிறது. பத்து ரூபாயை வைத்துக் கொண்டு ரூட் பஸ்ஸில் போவது எளிதான காரியமா என்ன?

‘’சர்ண்ணே. போய்ட்டு வா| நான் வீட்டுக்குப் போறேன்.’’

‘’சரி’’ என்றார் தங்கவேலு. ‘’பிள்ளைகள சூதானமாப் பாத்துக்க| புளிச் சோறு ஆக்கி வச்சிட்டு வந்திருக்கேன்| ஒம்பொண்டாட்டிகிட்ட சொல்லி அதுகளுக்குப் பரிமாறச் சொல்லு.’’

‘’ஆகட்டும்’’ என்றபடி நடக்கத் தொடங்கினான்.

ரோட்டையும் பஸ்டாண்டையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.

ஜெயா கண்ணிமைகளில் நிழலாடினாள். அவளைப் போன வருஷம் தவைப் பிரசவத்துக்கு வந்து போனபோது பார்த்தது. இன்றுவரை அவளும் தகப்பன் என்ற நினைப்பில்லாமல் இருக்கிறாள். துனக்கும் தேனி போய்வர ஓய்வில்லை| பணமும் இல்லை. சின்ன சன்னமான கோடு போல் மெலிதான மூக்கு! வெள்ளையும் கருப்புமாயக் கார்காலத்து மேகம் போல விழிகள்! நேர் வகிட்டுக்குக் கீழே, பளிங்குத் தளமாய் நீள் சதுர நெற்றி! அந்த நெற்றிக்கு பார்டர் அமைத்தாற்போல் படபடத்த புரவங்கள். ஒடிசலான திரேகம்!

அந்த உருவத்தை ஒரு வருஷமாய்ப் பார்க்காமல, அந்தக் குரலை ஒரு வருஷமாய்க் கேட்காமல், அந்த அன்பு மகளோடு நல்லது பொல்லதுகளை ஒரு வருஷமாய்ப் பகிர்ந்து கொள்ளாமல……

‘ஜெயா!’

வுயிற்று மண்டலத்திலிருந்து கிளம்பி, தொண்டையைக் கடந்து, சுவாச தளத்தை உரசி வெளிக் களம்பியது பெருமூச்சு.

ஹாரன் சத்தம் நினைவுகளைக் கலைக்க, ஏறிட்டுப் பார்த்தார். வெளிளை பஸ்!

நிலக்கோட்டை, வத்தலகுண்டு, பெரியகுளம் என்ற ஊர்களில் மூன்று முறை பஸ் மாறி, தேனிக்குச் செல்ல வேண்டிய அந்த ஐம்பது வயதுக் காரர், ஒருமணி நேரம் காத்திருந்து முதல் பஸ்ஸில் ஏறி அமர்ந்த போது தளர்ந்து போன உடம்பு சந்தோஷத்தால் சிலிர்த்தது.

செம்மலர் ஜூலை 1983

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top