ஒரு நினைப்பு

5
(2)

சின்னப் பொன்னரும்பு இன்னும் அழுகிறதே மாவேந்தனின் கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன. அப்படி ஒரு அழுகை கேட்பது போல் இருந்தது. ஆபீசில் அழுகை எப்படி வந்தது? குழந்தை ஏது?….. அழுகை மீண்டும் கேட்டது. இன்னும் அழுகிறதே ….. மரம்தான் அசைந்ததோ பூதான் உதிர்ந்ததுவோ? பொல்லாத புயல் தான் போயங்கு சூழ்ந்ததுவோ? சின்னப் பொன்ணிரும்பு இன்னும் அழுகிறதே …. இப்போது அழுகை தெளிவாகவே கேட்டது. பைலை பார்க்க முடியவில்லை. வைத்து விட்டு ஜன்னல் பக்கம் திரும்பினேன். ஆபீஸ் காம்பவுண்டை ஒட்டி வரிசையாய் நின்ற வேப்பமரம் ஒன்றில், தொட்டில் ஒன்று அசைந்து கொண்டிருந்தது. உள்ளுக்குள் உதறி உதறி ஆடியது பக்கத்தில் ஒரு சிறுமி, நான்கு ஐந்து வயதிருக்கும் வாயில் விரலைச் சப்பியபடி தொட்டிலை ஆட்டிக் கொண்டிருந்தாள். மேலுக்குச் சட்டை இல்லை. சாயம் போன அரைப்பாவாடை கட்டி இருந்தாள். பரட்டைத்தலையில் முடி சிலும்பிக்கொண்டு காற்றில் அலைந்தது. தலை அரிப்பெடுக்கும் போலும், அடிக்கடி சொறிந்து கொண்டாள். தொட்டிலை ஆட்டுவதும் தலையைச் சொறிந்து கொள்வதும் ஒரு சுபாவம் போல் செய்து கொண்டிருந்தாள். வாயில் சப்பிய கை வாயில் இருக்க தொட்டில் ஆடிக் கொண்டிருந்தது.

தொட்டில் உதறல் அதிகமாகியது. ஆட்டுவதும், தலையைச் சொறிவதும் மாறிமாறி நடப்பதால் ஆட்டம் சுகப்படவில்லை. நிறுத்தாமல் ஆட்ட வேண்டும். தொட்டில் கையை எடுக்காமல், வாயில் சப்பிய கையால் தலையை சொறிந்து கொண்டாள். தொட்டில் ஆட்டம் தொடர்ந்தது. ஆனாலும் அழுகை ஓயவில்லை. ஆட்டம் போதாமல் இருக்கலாம். வயிறும் பசித்திருக்கலாம்.

ரோட்டுப் பக்கம் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. தார்ரோடு போட்டுக் கொண்டிருந்தார்கள். இங்கிருந்து தெரியவில்லை. ரோடு ரோலரின் கடமுடா சத்தமும், ஆட்களின் பேச்சும் கலந்து தார்வாடையில் வந்து கொண்டிருந்தன.

இதன் தாய் அங்குதான் ஜல்லி சுமந்து கொண்டிருக்க வேண்டும். குளிர்ச்சியான வேப்பமர நிழலில், இதமான காற்றில் தூங்கட்டு மென்று தொட்டில் போட்டிருக்கிறாள், பார்த்துக் கொள்வதற்கு மூத்த மகளை, இந்தச் சிறுமியை நிறுத்தி இருக்கிறாள். அழுவும் போது பாப்பாவ ஆட்டி விடு என்று சொல்லி இருப்பாள்.

ஆட்ட ஆட்ட இவளுக்குத்தான் தூக்கம் வந்தது. தொட்டில் சேலையில் தலையை சாய்த்து கண்ணை மூடி ஆட்டினாள். அழுகை நிற்கவில்லை. அதிகமாகியது. உதறலும் கூடியது. ஆட்டுவதை நிறுத்தி தொட்டிலை விலக்கிப் பார்த்தாள். தலையைக் கவிழ்த்து என்னமோ சொன்னாள் பசிக்குதா? அம்மா வேணுமா? முட்டாய் வேணுமா? இப்படி கேட்டிருப்பாள்.

குழந்தை கையை நீட்டியது. இவள் தூக்கிப் பார்த்தாள். முடியவில்லை. யாரையாவது கூப்பிடலாமா? என்பது போல் திரும்பித் திரும்பிப் பார்த்தாள். குழந்தை அழுதது. இவள் தூக்கவில்லை யென்று உதறி உதறி அழுதது. தொட்டிலுக்கு வெளியே வந்து கால்கள் ஆடின. கொஞ்சம் கொஞ்சமாக இடுப்பளவுக்கு வந்து விட்டது. இனியும் விட்டால் குழந்தை கீழே விழுந்து விடும். கட்டியணைத்து இறக்கி விட்டாள்.

வெறும் மேலோடு, இடுப்பில் கருப்புக் கயிறு கட்டி இருந்தது. பெண் குழந்தை. கீழே உட்கார வைத்து, தகர டப்பா கிலுக்கை ஆட்டினாள். குழந்தை வேடிக்கை பார்த்தது. கிலுக்கைப் பிடிக்க கையை நீட்டியது. எட்டாமல் ஆட்டினாள். எக்கி எக்கிப் பிடித்தது. கையில் கொடுத்து பக்கத்தில் உட்கார்ந்தாள். குழந்தை சிரித்து கிலுக்கை ஆட்டியது.

உட்கார்ந்த சிறுமிக்குத் தூக்கம். மரத்துப் பக்கம் நகர்ந்து கால்களை மடக்கிப்படுத்தாள். நல்ல அசதி இருக்கும் போலிருக்கிறது. வேப்பங் காற்றும் சுகமாக வீசியது, படுத்த கொஞ்ச நேரத்தில் கால்களை நீட்டி உறங்கி விட்டாள்.

கிலுக்கை ஆட்டி குழந்தை இவளைப் பார்த்தது. வேகமாகத் தவழ்ந்து வந்து, மேலே ஏறி, நச், நச் சென்று குதிரைச்சவாரி செய்தது. கிலுக்கை ஆட்டிய போது சிரித்ததை விட இப்போது குழந்தைக்குச் சிரிப்பு அதிகம். இவள் புரண்டு படுத்தாள். குழந்தையும் புரண்டு கீழே சாய்ந்தது, அழவில்லை. அக்காள் தூங்குவது வேடிக்கையாக இருக்க வேண்டும். அக்காளைத் தட்டியது. வேகமாகத் தட்டியது. தூக்கம் கெட்டு இவள் முழித்துப் பார்த்தாள். பாப்பா சிரித்தது. இவளும் சிரித்து விட்டு எழுந்து உட்கார்ந்தாள்.

உட்கார்ந்தும் தூக்கம் போகவில்லை. உட்கார்ந்த நிலையிலேயே கண்கள் சொருகின. தலையும் ஆட ஆரம்பித்தது. குழந்தைக்கு வேடிக்கை கிலுக்கை மடியில் தட்டியது. சிறுமியால் தூங்க முடியவில்லை. தூங்க வேண்டும். சுற்றும் முற்றும் பார்த்தாள். தொட்டில் தொங்கிக் கொண்டிருந்தது. எழுந்து போய் தொட்டிலை விலக்கி உள்ளே ஏறிப் படுத்தாள் நீட்டம் போதாமல் கால்கள் வெளியே வந்தன. பக்க வாட்டில் புரண்டு கால்களை மடக்கி சுருண்டு படுத்தாள்.

குழந்தைக்கு ஏமாற்றம், முகம் மாறி கிலுக்கை எறிந்தது. தொட்டிலைப் பார்க்கப் பார்க்க கோபமாக வந்தது. வேகமாகத் தவழ்ந்து போய் தொட்டிலைப் பிடித்து எழுந்து, நிற்க முடியாமல் தடுமாறி விழுந்தது. கோபமும், கீழே விழுந்த அடியும் வலிக்க சத்தமாக அழ ஆரம்பித்தாள். அழுகைச் சத்தம் பெரிதாகி சிறுமியை உலுக்கியது.

கீழே இறங்கி பாப்பாவைப் பார்த்தாள். குழந்தை கீழே விழுந்து கிடந்தது. நிமிர்த்தி உட்கார வைத்தாள். அழுகை நிற்கவில்லை. பசியும் சேர்ந்திருக்க வேண்டும். கிலுக்கை கொடுத்தாள். குழந்தை தட்டி விட்டது. பக்கத்தில் கிடந்த டப்பாவை நசுக்கி பந்து என்று கொடுத்தது பார்த்தாள். வாங்கவில்லை.

ம்மா ….. அம்மா …. என்று வீறிட்டு அழுதது. இது பசி அழுகை.

இவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அம்மா வராமல் அழுகை நிற்காது. அம்மாவை நினைத்த உடன் இவளுக்கும் பசி வந்திருக்கும். அம்மாவும் இப்போது வருவதாகத் தெரியவில்லை.

இவளுக்கும் முகம் வாடியது. பசியும் வருகிறது. குழந்தையும் அழுகிறது. இரண்டையும் சமாளிக்க முடியவில்லை. அவளும் அழுவது போல் தெரிந்தது. சத்தமில்லாமல் அழுகிறாளோ!

இப்படி சின்னக் குழந்தைகளை விட்டு விட்டு அந்த அம்மா போய் விட்டாளே! பாவம் இதுகள் என்ன செய்யும்? இப்படியே அழுது துடிக்க வேண்டியது தானா?

அவளால் வர முடியாதா? ஜல்லி சுமப்பவர்கள் இதற்கெல்லாம் இடையில் போக முடியுமா? விடமாட்டார்களா? இந்தச் சத்தம் அங்கு கேட்காதா? பாவம் இந்தக் குழந்தைகள்!

சத்தம் அதிகமாகியது. இருவரும் ஒன்று சேர்ந்து அழுது கொண்டிருந்தார்கள். ஆபீசில் எல்லோரும் அந்தப் பக்கம் பார்த்தார்கள். யாருக்கும் வேலை ஓடவில்லை. ஒவ்வொருவர் முகத்திலும் எரிச்சல், சிலருக்குக் கோபம் சிலருக்கு வெறுப்பு, வேறுசிலர் பியூனைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.

அந்தக் தாய் வராவிட்டாலும் பரவாயில்லை. இவர்களுக்கு ஏதாவது மிட்டாய் கிடைத்தால் கூடப் போதும். அழுகை குறையும் கண்ணீர் நிற்கும். பசிதீராவிட்டாலும் இப்போதைக்கு அது தான் முடியக் கூடியது.

யார் வாங்கிக் கொடுப்பது? அப்படியே வாங்கிக் கொடுத்தாலும் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? என்ன பேசுவார்கள்? எல்லோர் முகத்திலும் வெறுப்பு தெரிகிறது.

என்ன செய்வது? வாங்கிக் கொடுப்பதா? வேண்டாமா?

அழுகைச் சத்தம் கூடியது. பியூனைத் தேடுவதும் அவசரமாகியது. என்னால் உட்கார முடியவில்லை நாற்காலியை விட்டு எழுந்தேன்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top