ஒரு சின்ன தண்டனை!

0
(0)

முடிந்து போயிற்று! பார்வதியின் கனவுகளையும் நம்பிக்கைகளையும் பொசுக்கிப் போட்டுவிட்டு அந்தப் பஞ்சாயத்துக் கூட்டம் முடிந்து போயிற்று.

நீதிதேவன் ஒரு காலில் நெருப்பு விட்டத்தையும் இன்னொரு காலில் நிழல் விரிப்பையும் அணிந்துகொண்டு பயணம் போனான்.

‘’அவன் ஆம்பளப் பய! சுகதி கண்ட எடத்துல மிதிச்சு தண்ணி கண்ட எடத்துல கழுவிக்கிருவான். பொட்டக் கழுததான் சூதானமா இருக்கணும்.’’ என்று நாட்டாமை தீர்ப்புக் கூறியபோது அம்மாவையும் பிச்சை மாமாவையும் தவிர கிராமமே ஆதரித்தது.

புழைய உவமைகளையும் முதமொழிகளையும் எடுத்துக் காட்டி, கற்பு என்பது முழக்க முழுக்க பெண் சம்பந்தப் பட்ட பிரத்தியேக விஷயம் என்று விளக்கிக் கூறினார் நாட்டாமை.

‘’அது மட்டுமில்லாமஆறுமுனம் பார்வதியத் தேடிப் போனதாத் தெரியல; ஏன்னா, ஆறுமுகத்தோட வீட்டுலதான் அவ சோரம் போயிருக்கா.’’

‘இல்ல’ என்று கத்தவேண்டும் போல் இருந்தது. ‘’நான் சோரம் போகல, அவன்தான்…..அவன்தான்…..’

வார்த்தை, வார்த்தையாக வெளி வராமல் விசும்பலாய் மேலெழுந்து மூக்குக் குகையில் மோதி நின்றது. கண்ணோரத்தில் சீழ் கட்டின மாதிரி நீர்த்துளிகள் முட்டி நின்றன.

‘’அதனால ஆறுமுகத்துமேல குத்தம் சொல்ல முடியாது. தன்னக் கல்யாணம் பண்ணித்தான் ஆகணும்னு பார்வதி சொல்றது நாயங்கெடையாது’’ என்றார் நாட்டாமை.

‘’ஏன் நாயமாகாது?;’’ கத்தினார் பிச்சை மாமா. ‘’பணத்துல பெருத்தவங்கறதுக்காக அவனுக்கொரு நீதி; மத்தவுகளுக்கு ஒரு நீதியா?’’

‘’பிச்ச! கொஞ்சம் அமைதியா இருங்க.’’ கையமர்த்தினார் நாட்டாமை. ‘’பார்வதி ஒங்களுக்கு மட்டும் சொந்தம்னு நெனக்யாதீங்க; எனக்கும் அவ சொந்தக் காரிதான்.; ஏன? ஆறுமுகத்துக்கே கூட அவ ஒரு வகையில மொறப் பொண்ணுதான். ஆனாலும் நம்ம பெரியவுக சொல்லி வச்ச பாதைன்னு ஒண்ணு இருக்குல்லியா?’’

‘’என்னய்யா பாத; பொல்லாத பாத. தப்பு செஞ்சது பொம்பளையா, ஆம்பளையான்னு பாத்து தண்டன தராம யாரு தப்புப் பண்ணினாலும் தண்டன பொம்பளைக்கித்தான்;னா அது ஒரு நீதியா?’’

ஆறுமுகத்தின் தந்தை நாகநாதன் கடகடவெனச் சிரித்தார். அப்ப புதுசா ஒரு சட்டம் போட்டுருவோம்; பொம்பள எப்படி வேண்ணாலும் யாருக்கு வேண்ணாலும் வல விரிக்யலாம்; அது தப்புக் கெடையாது, அந்த வலையில விழுகுற ஆம்பளதான் குத்தவாளி; போதுமா?’’

‘’நாகநாதா! கிண்டலா பண்ற?’’ கர்ஜித்தார் பிச்சை மாமா. ‘’ஒம் பணத்திமிரக் காட்டுறியா? அதெல்லாம் வேறாள்ட்ட வச்சுக்க.’’

‘’பிச்ச!’’ என்று வேகமாய்க் கத்தினார். நூட்டாமை. ‘’கலாட்டாப் பண்ணணும்னு நெனக்கிறீங்களா?’’

‘’Nசுனா நாயமாப் பேசுங்க, இல்லாட்டிக் கூட்டத்தக் கலச்சுட்டு ஓடிப் போங்க. எனக்குத் தெரிஞ்ச வழியில நான் நாயம் தேடிக்கிறேன்.’’

ஓங்கி வளர்ந்த வலது கரத்தின் ஆள்காட்டி விரலை நீட்டி ‘’பிச்ச!’’ என்று அதட்டினார் நாட்டாமை. ‘’வீட்டுக்குள்ள பொட்டச்சிய ஒழுங்கா வளக்கத் தெரியல, பஞ்சாயத்துல வந்து வீராவேசம் பேசுறணீங்களா? இதோ பாருங்க, நான் சொல்றதுதான் முடிவான தீர்ப்பு. ஆறுமுகம் ஒரு மீன்குஞ்சு, அவனக் கொத்தித் தின்ன முயற்சி பண்ணதுக்காக பார்வதிக்கித் தெண்டம் போடணும்; ஆனா, இல்லாத குடும்பமாச்சேங்குறதுக்காக மன்னிச்சு விடுறேன், தப்பிச்சு ஓடிப் போங்க.’’

‘’அட சண்டாளப் பாவிகளா’’ என்று அலறினாள் அம்மா. பார்வதி மூர்ச்சையாகிக் கீழே விழுந்தாள்.

நீதிதோவன் ஒரு காலில் நெருப்பு விட்டத்தையும் இன்னொரு காலில் நிழல்விரிப்பையும் அணிந்துகொண்டு பயணம் போனான்.

பார்வதி குடும்பத்தாரின் அவலத்தையும ஆவேசத்தையும் உதாசீனப் படுத்தியபடி கூட்டம் கலைந்து போனது.

தூக்கம் பிடிக்கவில்லை. உலகமும் மனித உறவும் வாழ்க்கையும் கசப்புத் தட்டின. நீலவானம், பூமிவெளி, வயல் பசுமை என்று கிராமத்தின் சகலமும் நினைவுகளில் வெறுமையை நிறைத்தன. பார்வதியின் அகண்ட விசாலமான சோகத்தின் பிரதான பிம்பமாய் ஆறுமுகம் நிலைகுத்தி நின்றான்.

நாட்டாமைக்கடுத்த பெரிய பணக்காரனாகிய நாகநாதனின் ஒரே வாரிசு ஆறுமுகம்! அவனுக்கென்று ஒரு வீடு கிராமத்தின் ஒதுக்குப் புறத்தில் கட்டப் பட்டிருந்தது. அது அவனுடைய பொழுதுபோக்கு ஸ்தலம். இரவு பகல் எந்நேரமும் அந்த மாளிகையில் அவன் குடித்துவிட்டுக் கும்மாளமடிப்பது கிராமத்திற்கு பகிரங்கப் பட்டுப் போன ரகசியம்.

அந்த கிராமத்தின் கன்னிப் பெண்கள் அவனின் மன்மத லீலைக்குள் அகப்பட்டுக் கொள்வது சாதாரண விஷயம். வீட்டைக் கழுவி விடவும் நூலாம்படை அடித்து சுத்தம் செய்யவும் அவன் குடும்பத்துக்குச் சொந்தமான வயலிலேர் தோட்டத்திலோ வேலை செய்யும் ஒருத்தியை வரவழைப்பான். ஆசை வார்த்தை காட்டியோ பலவந்தப் படுத்தியோ அவள் பெண்மையை அபகரித்துக்  கொள்வான்.

அவனிடம் பணம் இருக்கிறது; பவிசு இருக்கிறது. ‘தட்டிக் கேட்க ஆளில்லை’ என்ற தைரியம் இருக்கிறது. அவள் எக்கேடு கெட்டுப் போனாலும் ஆறுமுகத்தின் உடற்பசிக்குத் தீனி கிடைத்து விடுகிறது.

அப்படிப் பட்ட ஒரு பசிநாளில் பார்வதி வரவழைக்கப் பட்டாள் .

‘’பார்வதுp!’’

‘’ம்!’’

‘’ஒனக்கொரு விஷயம் தெரியுமா?’’

‘’என்ன?’’

‘’ஒரு வெதத்துல நீ எனக்கு மொறப் பொண்ணு’’

‘’ஓ தெரியுமே; எங்கய்யா செத்த எழவுக்கு ஒங்கய்யா வந்தாக. மாமா மொற வேணும்னு ஆத்தா சொல்லுச்சு.’’

‘’அடி சக்கே!’’ என்றான் ஆறுமுகம். ‘’கரைக்டா தெரிஞ்சு வச்சிருக்கியே.’’

அண்ணாந்து நூலாம்படை தட்டிக் கொண்டிருந்தவள் நாணிப் போய்த் தரையைப் பார்த்தாள்.

‘’கட்டுனா பார்வதியத்தாங்கட்டுவேன்னு அப்பாகிட்ட சொன்னேன், அவரும் சரின்னுட்டாரு.’’

கார்காலத்து மேகம் போல பார்வதியின் மனம் பொங்கிப் பூரித்தது. ஒருகணம் அந்தப் பணக்கார வாழ்க்கை நினைவுகளில் உரசியது. தோட்டத்திலும் வயல்வெளியிலும் கூலிக் காரிகளை அதட்டி வேலை வாங்குவது போல ஒரு பிரம்மை! திகாரக் கற்பனை வளர்ந்து வளர்ந்து உடலை உல்லசப் படுத்தியது.

ஆறுமுகம் பார்வதியின் தோளைத் தொட்டான்.

அவள் ஒதுங்கினாள்.

நளினமாய்ப் பார்வை வீசி, சின்னதாய்ப் புன்னகைத்து, இன்னும் கொஞ்சம் அழுத்திப் பிடித்தான்.

‘’போங்க’’ என்று சிணுங்கினாள்.

‘’நாமதான் புருஷம்பொண்டாட்டி ஆகப் போறமே; அப்பறமென்ன கூச்சம்?’’

‘’என்னக்கி?’’

ஒருமாசம், ரெண்டு மாசத்துல அம்மாவும் அப்பாவும் ஒன்னய பொண்ணு கேக்க வருவாங்க.’’

வாராவாரம் அவர்களின் நட்பு தொடர்ந்து கொண்டிருக்க இரண்டு மாதம் ஓடியது.

ஒரு சங்கம தினத்தில் ‘’என்னக்கிப் பொண்ணு கேட்டு வாகீக?’’

‘’பாப்பம்.’’

‘’என்ன பாப்பமா?’’ அவளுக்குத் திக்கென்றது.

ஏதோ சொல்லித் தட்டிக் கழித்தான் ஆறுமுகம். பார்வதிக்கு எப்படியோ இருந்தது.

அடுத்த வாரம் வீடு கழுவ வேறொருத்திக்கு அழைப்பு வந்தது.

இடிந்து போனவளாய் ஆறுமுகத்தின் வீம்டை நோக்கி ஒடினாள்.

உட்புறம் தாளிடப் பட்டிருந்தது. வேறொருத்தியை வசியம் பண்ணிக் கொண்டிருந்தான்.

திக்பிரமை பிடித்துப் போனாள். பூமி சுக்கு நூறாய் வெடித்துச் சிதறியது. புழுவுக்கு ஆசைப் பட்டு வாய்பிளக்க மீனவனிடம் சிக்கிக் கொண்ட அற்ப ஜீவியாய் அவள்! ஆஅதல பாதாளத்தில் கீழே கீழே உருண்டுகொண்டிருந்தாள்.

கண்விழித்துப் பார்த்த போது வீட்டில் படுத்துக் கிடப்பது தெரிந்தது. பக்கத்தில் உட்கார்ந்து அம்மா அழுதபடி இருந்தாள்.

‘’என்னடி பாரு!’’ என்றாள் அம்மா. அவன் வீட்டுக்pட்ட ஏணடி விழுந்து கெடந்த?’’

நினைவுச் சுமையால் நெஞ்சு வலித்தது. கைகளும் கால்களும் சோர்ந்து போயிருந்தன. கண்கள் உநுத்தலெடுத்தன; வாழ்க்கை கசந்தது.

‘’அவங்கிட்ட அழிஞ்சு போனியா?’’’

இன்னோர் இடி கபாலத்தைப் பிளந்தது. அமைதியாய்க் கண்ணீர் சொரிந்தாள்.

‘’அடிப் பாவி முண்ட! புத்திய எங்குட்டுடி கடங்குடுத்த?’’

பிச்சை மாமா நாகநாதனிடம் போய் முறையிட்டார்.

‘’அப்படியா?’’ என்றார் நாகநாதன் மீசையைத் தடவியபடி. ‘’ஏற்கனவே கேள்விப் பட்டேன்.’’

ஓங்க மகன் வாக்குக் குடுத்த மாதிரி பார்வதிய ஒங்க மருமகளா ஏத்துக்கங்க.’’

அமதியான சிந்தனையில் இருந்தார்.

‘’என்ன நாகு?’’

‘’பிச்ச! நான் சொல்றேனேன்னு கோவிச்சுக்காத; ங்கொக்கா மக நடத்த சரியில்ல.

‘’நாகநாதா!’’

‘’உணர்ச்சி வசப்பட்டு பிரயோஜனமில்ல. எத்தனையோ தடவ என்னயவே கண்ணடிச்சிருக்கா.’’

கொந்தளித்துப் பாய்ந்தார் பிச்சை. ‘’மட ராஸ்கல்’’ அவர் தலைமுஎயைப் பிடித்தபோது பண்ணையாள் வந்து விலக்கிவிட்டான்.

‘’கோபப் படாம விசாரிச்சுப் பாரு; ஒம்மருமகதான் எம்மகனக் கெடுத்தாங்குறதுக்கு அத்தாட்சி இருக்கு. அதனால…..’’

பிச்சையின் கண்கள் சிவந்து பழுத்தன.

‘’விஷயத்தப் பெரிசு படுத்தினா பார்வதிக்குத்தான் நஷ்டம். சீக்கிரம் ஒரு மொண்டி மொடத்தப் பாத்துக் கடடிக் குடுத்துரு; கல்யாணச் செலவ நாம்பாத்துக்கிறேன்.’’

‘’நாகநாதா! ஓம்பணத் திமிரக் காட்டுறியா? பஞ்சாயத்தக் கூட்டி ஒன்னய மூக்குச் சிந்த வக்கிறேன்’’ என்றுகர்ஜித்துவிட்டு வெளிNறினார் பிச்சை.

பஞ்சாயத்து கூடியது. நீதிதேவன் ஒரு காலல் நெருப்பு விட்டத்தையும் இன்னொரு காலில் நிழல் விரிப்பையு அணிந்து கொண்டு பயணம் போனான்.

விடிந்தது.

உறங்காததன் இடையாளமாய்க் கண்கள் சிவந்திருந்தன. முகம் வீங்கி வீறாந்திருந்தது. கூந்தல்கலைந்து வரண்டு கிடந்தது. பார்வதியின் களவுகளும் நம்பிக்கைகளும் நேற்றிரவே புதைக்கப் பட்டுவட்டன.

ஏண்டி இப்படிப் பேயடிச்ச மாதிரி இருக்க? ஒனக்குன்னு ஒரு வடிவுகாலம் இல்லாமயா போச்சு? என்னத்துக்குக் கலங்குற?’’ அம்மா ஆறதலாய்ப் பேசினாள்.

‘’நான் ஏன் கலங்குறேன்?’’ என்றாள் பார்வதி. ‘’தப்பு செஞ்சவன் கல்லு மாதிரி இருக்க நான் ஏன் வருத்தப் படணும்?  ஏன் அழுகணும்?’’

கொஞ்ச நேரம் சிந்தனைவயப் பட்டவளாய் இருந்தாள். பின் அiதியாய்ச் சொன்னாள். ‘’சரிம்மா, நான் ரெண்டு நாளக்கி லீவு இருக்கலாம்னு பாக்குறேன்; நீ வேலக்கிப் போ.’’

அம்மா தயங்குவது தெரிந்தது.

‘’சும்மா போம்மா! ஏதாச்சும் நடந்திருமோன்னு பயப்படாத; நான் கோழை இல்ல.’’

அம்மாவுக்கு மனசில்லைதான். இருந்தாலும் அடுப்பு புகைய வேண்டுமே என்ற பொறுப்பு இருந்தது.

‘’சரிம்மா! சூதானமா இரு, மனசுல எதையும் நெனச்சு அழுகாத; மதியத்துக்கெல்லாம் வந்துர்றேன்.’’

பார்வதி நதானமாகவும் தெளிவாகவும் இருந்தாள். விசாலமான சிந்தனை வீச்சில் மூழ்கி இருந்தாள். ஒரு திடமான முடிவோடு முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்தரித்தாள்.

வீட்டின் வடக்கு மூலையை நோட்டம் விட்டாள். உலக்கை சாத்திக் கிடந்தது. கையிலெடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

வாசலைக் கடந்து நடக்கத் தொடங்கினாள். வேயிலின் வீர்யம் அவளை சோதிக்கவில்லை.

சில கோழிகளையும் குஞ்சுகளையும் தவிர கீழத் தெரு வெறிச்சிட்டுக் கிடந்தது. ஏழ்மையும் வறுமையும் சாசுவதப் பட்டுப் போன வீதி அது. எனவே, எல்லாரும் வேலைக்குப் போய்விட்டதை முன் உணர்ந்தவளாய் நடந்தாள்.

வீதியைத் தாண்டிய போது ஆறுமுகத்தின் சந்தன நிறக் கட்டிடம் கண்ணில் பட்டது. நெஞ்சு இப்போது கொஞ்சம் நிதானமிழந்து படபடக்கத் தொடங்கியது. மனம் பலவாறாக சிந்தித்து சோர்வடைந்தது. செய்யப் போவது நியாயம்தானா என்று பின் வாங்க முயற்சித்தது. ஆனாலும் பாதிப்படைந்த அவளின் பெண்மை ஆங்தாரத்தோடும் ஆவேசத்தோடும் அவளை உந்தித் தள்ளியது.

வாயிற்படியில் ஏறிக் கதவைத் தள்ளினாள். துpறந்து கொண்டது.

சாய்வு நாற்காலியில் இருந்து ஆறுமுகம் ஏறிட்டுப் பார்த்தான்.

கால்கள் பின்னலிடாத திடகாத்திரத்தோடு, மனம் பின் வாங்காத தைரியத்தோடு உள்ளே பிரவேசித்தாள்.

‘’பார்வதி!’’ என்று எழுந்திருக்க முயற்சித்தான். அவள் கையிலிருக்கும் உலக்கையைப் பார்த்து கண்ணிலும் உதட்டிலும் கலவரம் படர்ந்தது. நிராதரவான நிலையில் ஆண்மை அவறியது.

சுயநிலi மறந்த வெறியோடு, சாபமிட்டுக் கதறிய பெண்மையின் ஆவேசத் துடிப்போடு, நீதியும் நேர்மையும் அழிந்து போன சோக விம்மலிலருந்து பிறந்த ராட்சசத்தனத்தோடு உலக்கையால் ஓங்கி அடித்தாள் பார்வதி.

பீறிட்டுப் பீறிட்டுச் சிதறிய ரத்;தத் தடாகத்தில் மிதந்தான்.ஆறுமுகம்.

‘’இது ஒரு தனிமனிதக் கொலை அல்ல; வெகுளித் தனமான பெண் சமூகத்தை துவம்சிக்கத துடிக்கும் ஆண் வர்க்கத்திற்கான் ஒரு சன்ன தண்டனை’’ என்று அந்த ரத்தச் சதறலில் மானசீகமாக எழுதப் பட்டிருப்பது அங்கு கூடியிருந்த நிறையக் கன்னிப் பெண்களுக்குப் புரிந்தது.

 

 

தாமரை ஆகஸ்ட் 1983

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top