ஒரு கணம்

0
(0)

செல்லப்பாவுக்கு உறங்கப் பிடிக்கவில்லை.கடந்த இரண்டு நாட்களாகத்தான் இப்படி ஒரு அவஸ்தை. மன உளைச்சல் மனதை வேறுபக்கம் திசை திருப்ப முடியாமல் ரண வ-யாய் இருந்தது. பக்கத்து ஊர் சீனிவாசகம் சொல்-விட்டு போனது மனதை அரித்துக் கொண்டு இருந்தது. இன்னைக்கோட இருபத்து ஏழு நாளாச்சு அவர் மனைவி கோமதி படுக்கையில் விழுந்தது, எல்லோருக்குமே ஒரு எதிர்பார்ப்பு. பொம்பளைப் புள்ளைங்க ரெண்டு பேரும் வந்து பத்து நாள் இருந்துட்டுப் போயிட்டாங்க. பாவம் அவங்களுந்தான் புள்ள குட்டிங்களையும் வீட்டையும் போட்டுட்டு எத்தனை நாள் இருக்க முடியும். ஏன்டது எடுத்ததுக்கெல்லாம் செல்லப்பா தான்.

ம்….ம்.. ஆ.. என்று மெதுவாய் சப்தம். செல்லப்பா மெதுவாய் கட்டி-ல் இருந்து எழுந்து தண்ணீ வேணுமாப்பா என்று கேட்டுக் கொண்டே தலையை கைத்தாங்கலாய்த் தூக்கி கொடுக்க, ரெண்டு மடக் குடித்துவிட்டு வாயை மூடிக் கொள்ள, திரும்ப படுக்கையில் சாய்த்துவிட்டு டம்ளரை பித்தளைச் செம்பில் கவிழ்த்து வைத்துவிட்டு மெதுவாய் படுக்கையில் சாய்ந்தார்.

கோமதிக்கும் இருவருக்கும் ரெண்டு வயதுதான் வித்தியாசம். இவர்களது உழைப்பு, செல்வம், சம்பாத்தியம் எல்லாமே ஆடுகள் தான். கொட்டத்தில் திமுதிமுவென ஆட்டுக்கூட்டம். மாசத்துக்கு அஞ்சாறு ஆடுக குட்டி போடும். குட்டிகளை தனியே அடைக்கவும், ஆடுகளை மேய்ச்சலுக்கு ஒட்டிட்டுப் போவுதும் அதுகளுக்கு பன்டுதம் பாக்குறதே வேலை சரியாய் இருக்கும். கடுங்கோடையில் காண்மாயில் தண்ணீர் இருக்காது. அந்த சமயங்களில் அடிகுழாயில் எடுத்துவந்து தொட்டிகளில் ஊற்றி ஆடுகளுக்கு காட்டணும். அந்த நேரத்துல கோமதி ரவ்வும் பகலுமா பாடுபடுவா. நல்லது பொல்லது வந்துட்டா செல்லப்பா வெள்ளையுஞ் சொள்ளையுமாய் கெளம்பிடுவார். அப்போதெல்லாம் கோமதிதான் வம்பாடுபடுவாள். இதுல அவளுக்குள்ள ஒரு யோகம் ரெண்டும் பொம்பளப் புள்ளைங்களாப் பொறந்தது தான். அதுக தலையெடுத்தவுடன் காட்டுக்கும் வீட்டுக்குமா ஆத்தாளுக்கு மேலபாடுதான் அதுக்கு அப்புறம் செல்லப்பாவுக்கு தினசரி ஏதாவது ஒரு சோவந்துடும். மைனர் கனக்கா “சோக்” பன்னிக்கிட்டு முன்னாடி போறவங்க திரும்பிப் பாக்குற மாதிரி குரோன் அடிச் செருப்பை போட்டு கிரீச் கிரீச் சத்தம் வர்றமாதிரி நடந்து பக்கத்துல உள்ள டவுனைப் பாக்காட்டி கண்ணடையாது. சும்மானாச்சும் போய் ஒரு டீயாவது குடிச்சுட்டு வரணும். பெரும்பாலும் மதியம் வீடு தங்கமட்டார். டவுன்ல உள்ள ஓட்டல்ல புரோட்டா செட்டும் சால்னாவும் கொளச்சு அடிக்காம வந்துட்டா ஏதோ பறிகொடுத்த மாதிரித்தான் இருப்பார். எப்பவும் போடுற பச்சைக்கலர் பெல்ட்டுல நூறு ரூபாய்க்கு குறையாமல் இருந்துக்கிட்டே இருக்கும். கோமதியும் அப்புராணி வெள்ளந்தி. நம்ம வீட்டுல இருக்குற ஒரே ஆம்பிளையை நாம தானே நல்லபடியா வச்சுக்கனுமுனனு சொல் – ஒரு வேலை செய்ய விடுறதில்லை. இவ கிழிஞ்ச சேலை கட்டியிருந்தாலும் அவர் வேட்டி சட்டை கசங்க விடமாட்டா. புடுங்குற புடுங்குக்கு சோப்பு பவுடர் போட்டு தினசரி தொவச்சுப் போடுவா. கையில் காசு இல்லீன்னா சுளுவா கண்டு பிடிச்சிடுவா. மொகம் கொறாவிப் போய் இருக்கும். சாப்பாடு இழுக்காது. வெளியே எங்கயும் கௌம்பாமல் பித்துப் பிடிச்ச மாதிரி உட்கார்ந்து இருப்பதைப் பார்த்துவிட்டால் போதும் கோமதிக்கு. மனசு பொறுக்காது. “ஏய்யா அந்தக் கன்னிக்குறா பலனாகாமலே இருக்குது. வேளக் கெழமை நாலாரம் சந்தை இன்னிக்குத் தானே . கறிக்கு கேப்பாக வித்துட்டு வந்துடுய்யா,” அப்புறம் ஒரு மாசத்துக்கு செலவுக்கு பிரச்சினை இல்லாமல் வண்டி ஓடும் காடுகரையிலவர்ற பருத்தி. மல்-யை ஊருக்குள்ளே வரும் சில்லறை யாவாரிகிட்ட போட்டு அவரு பெல்ட்டுல காச வச்சுடுவா.

இந்த விசயத்துல ஆத்தாகூட பிள்ளைங்க ரெண்டும் – சண்டை போடுவாக “அய்யாவுக்கு காசக் குடுத்து குடுத்து நீதான் கெடுக்குறே” “அடியே ஊர்ல ஒலகத்துல அவனவன் ஊருக்கு ஒன்னா வச்சுக்கிட்டு திரியுறான். இல்லாட்டி குடிச்சுப்போட்டு வீட்டுல பொண்டு புள்ளைங்களை ஒதைக்குறான். எஞ்சாமி சொக்கத்தங்கமுடி. வீட்டுல என்ன ஆம்பளப் புள்ளையா இருக்குது. இருக்குற ஆடுகளை ஆளுக்குப் பாதியா குடுத்து உங்களை கெட்டிக் குடுத்துட்டா ஒங்க பாடு திர்ந்துடும். அப்புறம் எங்கூட கடைசி வரைக்கும் ஒங்க அய்யாதானாடி’ அப்படீன்னு ஒரு பெரிய வியாக்யானம் பாடுவாள்.

ஊர்ல உள்ள ரொம்பப் பேருக்கு செல்லப்பா மேல பொறாமை. பின்னே அவனவன் காடு கரையுன்னு லொம்பலப்பட்டுக்கிட்டு இருக்கும் போது இவருமட்டும் ஊர் வழியே திரிஞ்சா இருக்காதா. இப்படிப்பட்ட உழைப்பாளிக்கு லேசாய் தலைவ- காய்ச்சல் வந்துட்டாப் போதும். கோமதிக்குத் தூக்கம் வராது மருந்து மாத்திரை குடுத்து ராத்திரியெல்லாம் பக்கத்திலே இருப்பாள். எல்லாஞ் சரியான உடனே என் ராசாவுக்கு இந்த பாதகத்தி ஒழுங்கான சாப்பாடு போட்டாத்தானே அப்படீன்னு தனக்குள்ளேயே புலம்பிக்கிட்டு கோழி அடிக்குறது, பக்கத்துல போயி ஆட்டுக் கறி வாங்கிட்டு வர்றது ஆட்டுக்கால் சூப் போட்டு கொடுக்குறதுன்னு அப்படியே ஒரு வாரத்துல ஆள் மினு மினுன்னு ஆயிடுவார். ஒருவாரம் பத்து நாள் கழிச்சு பாக்குறவங்களுக்கு உடம்புக்கு சரியில்லாம படுத்து எந்தரிச்சவர் மாதிரி இருக்காது. ஏதோ மாமியார் வீட்டுலயிருந்து சாப்பாடு சாப்பிட்டவர் மாதிரி உடம்பை சும்மா கின் னுனனு ஏத்தியிருப்பார். இவதான் ரவ்வும் பகலுமா கண்முழிச்சு ஒழுங்கா சாப்புடாம எலும்பும் தோலுமா இருப்பா. புதுசா வீட்டுக்கு வாரவங்க இவளப் பாத்துத்தான் என்னாத்தா உடம்புக்கு என்னன்னு கேக்க ஆரம்பிப்பாங்க.

ஊருக்குள்ளே நல்லது பொல்லதுன்னா இவருதான் முன்னாடி போய் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்வார். ஊருக்குள்ள ஒரு தடவைக்கு நாலுதரம் தேடி வந்துருவாங்க. இதுல கோமதிக்கு ஏகப் பெருமை. கணக்கு வழக்கில் கறார் பேர்வாழி கைச் சுத்தம் வாய்ச்சுகாரிய முன்னாலும் சரி தனிப்பட்ட விசேசமுன்னாலும் நம்பித் துட்டைக் கொடுப்பாங்க. ஊருக்குள்ள பொம்பளைங்கள் இவரைப் பத்தி வாப்பாறுவாங்க. கோமதிக்கு இதக் கேட்டுக்கிட்டு இருந்தால் போதும் சோறு தண்ணி இறங்காது. ஒரு தடவை பஞ்சாயத்து போர்டு எலக்சன்ல நிக்கச் சொல்ஆளாளுக்கு வந்து கேட்டாங்க. கறாரா முடியாதுன்னு மறுத்துட்டார். இந்தக் காலத்துல இப்படி ஒரு மனுசனான்னு ஜனங்க கூடிக் கூடிப் பேசுனாங்க. கோமதிக்கு தரையில் கால் பாவம் சந்தோசத்துல மிதந்தாள். அந்த சமயத்துல மட்டும் ரெண்டு கெடாக் குட்டிக சந்தைக்குப் போனது.

இந்தக் காலத்துல கிழக்கே பெரிய குடும்பத்துல இருந்து சம்பந்தம் அண்ணன் தம்பிக்கு அக்கா தங்கைகள். பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பம் ஈத்தாடுக ரெண்டு மட்டும் வச்சுக்கிட்டு எல்லா ஆடுகளையும் சீதனமாய் அனுப்பி விட்டாள். பிள்ளைங்க போனதும் கோமதிக்கு கையொடிஞ்ச மாதிரி ஆயிடுச்சு எதையோ பறிகொடுத்த மாதிரி மொகட்டப் பாத்துக்கிட்டு மெம்மறந்த மாதிரி உக்காந்திடுவா. ஒழுங்கா சாப்புடாம உள்ள உடம்பும் கெட்டுப்போய் எலும்பும் தோலுமா ஆயிட்டா .

எப்பவாவது ஊருக்கு வர்ற பிள்ளைங்களும் எவ்வளவோ கெஞ்சிக் கெதறிப் பாத்துட்டாங்க. ஒரு பத்துநாள் எங்க கூட வந்து இருங்கம்மான்னு . “ஒங்க அய்யாவை விட்டுட்டு வரமுடியுமா. அவரு ஒரு நேரமாச்சும் அடுத்த வீட்டுல கை நனைப்பாரா’ அப்படீன்னு சொல் – அனுப்பி விடுவா.

இப்படித்தான் ஒருநாள் தண்ணீர் எடுக்கப் போனவ தூக்கமாட்டாம கீழே போட்டு விழுந்துட்டா. அதுக்கு அப்புறம்தான் செல்லப்பாவுக்கு உசாரே வந்துச்சு. அடடே எவ்வளவு பெரிய மடத்தனம் பண்ணிட்டோம். ஒத்தையாவே வேலையில் போட்டு வசக்கி வம்படியா சாகடிக்கத் தெரிஞ்சோமேன்னு மனசுக்குள்ள மொத மொதலா வருத்தப்பட ஆரம்பிச்சார். அதுல இருந்து இப்ப வரைக்கும் வீட்டு வேலையிலுஞ்சரி காட்டு வேலையிலும் கோமதிக்கு ஒத்தாசையா இருந்தார்.

இருந்த ஒன்று ரெண்டு ஆடுகளும் பத்து இருவதா பலுகிச்சு. அதுகளை, வித்து பேரப்புள்ளைகளுக்கு நகைநட்டு போட்டு அழகு பார்த்தார்கள். இப்படிப்பட்ட நேரத்துல கோமதிக்குத்தான் ரொம்ப வருத்தம். எப்படி இருந்த மனுசனை நாம் இப்படி காட்லயும் மேட்லயும் போட்டு வசக்குறோமேன்னு. காலம் ஓடியே போயிடுச்சு. வீட்ல பேருக்கு ஒரு ஆடு மட்டும். வேப்பங்குழை கயிற்றில் கட்டி ஆடிக்கொண்டிருந்தது.

லேசாய் இருமும் சப்தம். கோமதி இருமக்கூட முடியாமல் பெருமூச்சு விட்டுக் கொண்டு இருந்தாள். மெதுவாய் எழுந்து வந்து நெஞ்சைத் தடவி விட்டார். அந்த நேரத்திலும் சீனிவாசகம் சொன்னது ஞாபகம் வந்தது. “மாமா நான் சொல்றேன்னு தப்பா நெனைக்காதீங்க. எவ்வளவு நாளைக்குத் தான் ஒங்களால அத்தையைக் கவனிக்க முடியும். இந்த காலத்துல ஒங்களுக்கே ஒரு ஆள் வேணும். சரி பிள்ளைகளாது வந்து இருக்கலாமுன்னா அவுகளுக்கும் தோதுப்படலை. அங்க போயி இருக்கவும் லாஞ்சனப் படுறீங்க. நீங்களும் அத்தையும் வாழ்ந்து முடிச்சுட்டீங்க. பேரக் குழந்தைகளைப் பார்த்து சந்தோசப் பட்டாச்சு. ஒங்க கண்ணுக்கு முன்னாலயே எவ்வளவு நாளைக்குத்தான் இப்படி இழுத்துக்கிட்டும் பரிச்சுக்கிட்டும் பார்த்துக்கிட்டு இருக்கப் போறீங்க. காந்தியே தன் கண்ணுக்கு முன்னாலே சாக பொழைக்க இருந்த கன்னுக்குட்டியோட மரணப் போராட்டத்தைக் காணப் பொறுக்கமாட்டாமல் கொன்னுடச் சொன்னாராம். இது ஒன்னும் தப்பில்லை பாவமும் இல்ல . அத்தை நேரா மோட்சத்துக்குத்தான் போவாங்க. நீங்க சரின்னு சொன்னா நம்ம ஊர்ல இதுக்குன்னு ஒரு பொம்பளை இருக்கா, காரியத்தை காதும் காதும் வச்ச மாதிரி சுளுவா முடிச்சுவா. என்ன சொல்றீங்க.

ரெண்டு நாளாய் மனதைப் போட்டு அறுத்துக் கொண்டு இருந்தது. அப்போது ஒன்றும் சொல்லாவிட்டாலும் இது சரிதானோ என்று ஒருகணம் சிந்தித்தது என்னவோ நிஜம். கோமதியைப் பார்த்தார். கண்களை பாசி மூடியும் மூடாமலும் எல்லாம் எனக்குத் தெரியும் என்பது போல் பார்த்தாள்.

நேருக்கு நேராய் நோக்க முடியவில்லை. ஒரு கணம் இப்படி நினைத்ததே ரணமாய் வத்தது. உக்கிப் போனார். அம்பது வருசமாய் உள்ளங்கையில் வைத்து நம்மைத் தாங்கினாளே. இந்த ஒரு மாசத்திற்குள் தமக்குள் இப்படி ஒரு எண்ணம் எப்படி வந்தது. சே. என்ன காரியம் செய்யவிருந்தோம். மனசு ஒருநிலைப்படாமல் லாஞ்சனைப்பட்டது. இவ்வளவு நாள் வாழ்ந்த வாழ்க்கைக்கே அர்த்தமில்லாமல் போய் விட்டதே. நெஞ்செல்லாம் வறுத்தது. மெதுவாய் கோமதி கோமதி என்றழைத்தார். குரல் கொடுத்தவுடன் ம்… ம்…. என்ற முனகல் இல்லை கண்களைத் திறக்கவில்லை. மெதுவாய் அருகில் வந்து கையைத் தொட்டுப் பார்த்தார். ஜில் – ட்டுப்போய் இருந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top