எங்களைப் பற்றி…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 1975 முதல் தமிழகத்தில் இயங்கி வரும் கலை இலக்கிய பண்பாட்டு அமைப்பாகும். இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இவ்வமைப்பு படைப்பிலும், களத்திலும் மக்கள் பணியாற்றி வருகிறது. 

தமுஎகச அறம் கிளை 2019 ஆம் ஆண்டு நானூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களோடு துவங்கப்பட்டது. வாசிப்பையும், எழுத்தையும் ஊக்குவிக்கும் நோக்கத்தோடு அறம் கிளையில் பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாதந்தோறும் நூல்களை வாசித்து, இணைய வழி இலக்கியச் சந்திப்பாக நடத்தப்பட்டு வரும் அகவிழி, தத்துவம் – அரசியல் – பண்பாட்டினை கலந்துரையாடும் பகிர்வரங்கமாக “தெளிவுறவே அறிந்திடுதல்” நிகழ்வு, தமிழின் தொன்மையான எழுத்துகளை கற்கும் “தொல்தமிழ் எழுத்துப் பயிற்சி”, எழுத்தாளர்களின் எழுத்துகளை வாசித்தும் நேசிக்கும் ”படைப்புகளைக் கொண்டாடுவோம்” நிகழ்வு, தொல்லியல் இடங்களை நேரில் கண்டு, கற்கும் “வரலாற்று வேர்களைத் தேடி” பயணங்கள் என்று அறம் கிளையின் செயல்பாடுகள் தொடர்கின்றன. தமுஎகச வின் மாநிலக்குழுவின் வழிகாட்டுதல்களின் படி அறம் கிளை உறுப்பினர்கள் மக்கள் இயக்கங்களில் பங்கு பெறுவதும், பயிலரங்குகள், கருத்தரங்குகளில் பங்கேற்பதும் நிகழ்கின்றன. 

அறம் கிளையின் இணைய வழிப் பணிகளின் ஒரு பகுதியாக சிறுகதை டாட் காம் இப்போது உருவாகியிருக்கிறது.

அறம் கிளை நிர்வாகக் குழு

 

தலைவர் :  அ.புனிதவதி

செயலாலர் : அ. உமர் பாரூக்

பொருளாளர் : சி.பேரின்பராஜன்

துணைத்தலைவர்கள் 
இல.சண்முகசுந்தரம்
ப.தி.ராஜேந்திரன்

துணைச் செயலாளர்கள்
பொ.பிரேமாவதி
சே.அருண் குமார்

செயற்குழு உறுப்பினர்கள்
ரா.சண்முகலட்சுமி
சி.சரவண பாண்டியராஜா
வீ.ஜெகநாதன்
கொ.ராமகிருஷ்ணன்
மு.ஜெய்கணேஷ்
இரா.திரிபுரசுந்தரி
அ.சையது அபுதாகிர்
மு.அராபத் உமர்
ந.காஜாமைதீன்
செ.திருஞான மணிகண்டன்
சௌ.ஜெயவள்ளி
ஆர்த்தி மோகன்பாபு
கா.ப.ஷமீம் உசேன்
வெ.யுவராஜ்
இரா.ஜெயந்தி
பூ.முருகவேல்
இரா.சாரிணி
ச.சாமுண்டீஸ்வரி
பரிமளா செல்வமணி
ஜி.ஜனார்த்தனன்
கு.மகிஆஷ்

 

Scroll to Top