ஆகவே. . .

0
(0)

‘’யு கழச ழநெ.

டீ கழச 1 .2

ஊ கழச 1.4

னு கழச 1.4.5

இது என்ன என்று விழிக்காதீர்கள். பேனா எழுத்துக்களுக்கான பிரைல் எழுத்து வடிவங்கள். (பார்வையிழந்தோர் படிப்பது.)

புஷ்பா டீச்சரின் மனம் எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தாலும் வகுப்பறையில் டீச்சிங் அனிச்சையாய் நடந்தவண்ணம் இருந்தது. வாழ்க்கையின் ஏதோ ஓர் அம்சம் அவளைக் கிள்ளி விளையாடியது. அதை எப்படிச் சமாளிப்பது?

லு கழச 1.3.4.5.6.

ணு கழச 1.3.5.6.

அவள் சொல்லச் சொல்ல மாணவர்களும் கொழகொழப்பான ஸ்ருதி பேதத்தோடு பின் குரல் கொடுத்து ஒப்பித்தார்கள். ஆனாலும் அவள் மனம் அந்த வகுப்பறைக்கு வராமல் சிக்கல் நிறைந்த வானக் கற்பனையில் அலைமோதிக் கொண்டிருந்தது.

“அம்மா! வேண்டாம்மா! என்ன விட்டுடும்மா” என்று கத்திக் கத்திச் சாகவேண்டும் போல் இருந்தது.

“ஒன்ன விடமாட்டேண்டி.” என்று ராட்சசி மாதிரி விஸ்வரூபம் பெற்று புஷ்பாவின் கண்ணைக் குத்த வந்தாள் அம்மா, கற்பனையில்தான்.

அவள் என்ன கண்ணைக் குத்துவது? அதுதான் ஒரு வயசோ ரெண்டு வயசோ ஆகி இருந்த போதே, விபரம் தெரியாத நாளிலேயே ஆண்டவன் குத்தி விட்டானே? இனி யார் வந்து குத்தி என்ன ஆகப் போகிறது?

நேற்றுப் பத்து இருபது செலவு பண்ணி ஐம்பது தொலைவில் இருந்து இந்த நகரத்துக்கு வந்திருந்தாள் அம்மா. சந்தோஷமாய் வரவேற்றாள் புஷ்பா. இந்த ஊரில் தங்குவதற்கு புஷ்பாவிற்குச் சொந்தக் குடும்பமோ வேறு உறவினர்கள் வீடோ இல்லை என்பதால் மாணவர்கள் தங்கும்ஆஸ்டலிலேயே அவளுக்கு ஓர் அறை ஒதுக்கித் தந்திருந்தார்கள். அம்மாவை அங்கு அழைத்துப் போனாள்.

முன்பு சென்னையில் உள்ள பார்வையிழந்தோர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, அம்மா பார்க்க வந்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. அப்போதெல்லாம் பார்த்து விட்டு ஏதாச்சும் கொடுத்துவிட்டுப் போகத்தான் வருவாள். அப்படிப் பன்னண்டு வருஷம் படித்து முடித்து, இந்த ஊரில் உள்ள ‘ஸ்கூல் ஃபார் தி பிளைண்ட் சில்றன்’னில் டீச்சராகி கணிசமான தொகை சம்பளமாக வாங்குகிறாள். இரண்டு மாதச் சம்பளம் வாhங்கியாகி விட்டது. அம்மாவிற்கு ஏதாவது கொடுத்துவிட வேண்டும்.

“வீட்டுல எல்லாரும் சவுக்கியமா இருக்காங்களா” என்று ஆவல் பொங்கக் கேட்டாள் புஷ்பா.

“சவுக்க்pயந்தாண்டிம்மா! ங்கொப்பன்தான் இன்னும் குடிக்கிறத விட மாட்டேங்குது.” கண்களை உயர்த்தி வருத்தப் பட்டாள் புஷ்பா. ஒளியிழந்த கண்களுக்குக் கூட உணர்ச்சியை வெளியிடத் தெரிகிறது. இனிமே கவலப் படாதம்மா, நான் இருக்கன்ல?”

அம்மாவுக்கு சுரீரென்றது. மகள் சம்பளத்தில் மஞ்சக் குளிப்பதா? “வேண்டாம்டி அம்மா| ஒன் சம்பாத்தியத்த நீயே சேத்து வையி| ஒனக்குக் கல்யாணங்காச்சி முடிக்யணும்ல?”

புஷ்பாவிற்கு எப்படியோ இருந்தது. மனசுக்குள் ஜெயபால் தடவித் தடவிப் பார்த்தான். போன வாரம் அவன் எழுதியிருந்த பிரைல் லெட்டர் நினைவுக்கு வந்தது.

“எனக்கு எதுக்கும்மா கல்யாணம்?”

“என்னடி அப்படிச் சொல்லிட்ட? மனுசர்ங்குறதுக்கு அர்த்தம் கல்யாணத்துலதாண்டி இருக்கு.”

“அதெல்லாம் கண் தெரிஞ்சவுகளுக்குத்தான்| என்னய மாதிரி பிளைண்டுக்கு இல்ல.”

“போடி அசட்டுச் சிறுக்கி” என்று செல்லமாய்க் கடிந்தாள். “போன வாரம் ஒம்மாமன் வந்து அவன் மகனுக்குப் பொண்ணுக் கேட்டாண்டி| நாங்க புல்லாரிச்சுப் போனோம்| கண்ணுத் தெரியாதவளப் பொண்ணுக் கேக்கணும்னா மனசு எம்புட்டு சுத்தமா இருக்ணும்னு பாரு. நாங்களும் சரின்னுட்டோம்.”

லேசாகச் சிரித்தாள் புஷ்பா. அதில் விரக்தி இருந்தது. “போன வருசங்கூட ‘ஓடுகாலிப் பய, பொம்பள பொறுக்கி’ன்னு திட்டுனியே, அந்த கணேசன்தானம்மா?”

“அதெல்லாம் ஒரு கோவத்துல சொன்னது, மறந்துரணும்.

அது சரி, என்னயக் கட்டிக்கிறதுக்கு அவனுக்கு என்ன தகுதி இருக்கு?”

“ஒனக்கென்ன மூளகீள கெட்டுப் போச்சா? என்ன பேச்சு பேசுற நீ? பொம்பளக்கித் தாண்டி தகுதி எல்லாம் வேணும்| ஆம்பளக்கி அவன் ஆம்பiயா இருக்காங்குற தகுதி ஒண்ணே போதும்.”

புஷ்பாவிற்கு எரிச்சலாய் இருந்தது. ஆனாலும் கோபிக்க வில்லை. அவளைக் கோபித்து என்ன செய்ய? பெண்ணினம் என்பது அடிமையினம் என ஸ்தாபிதமாகிவிட்ட சமூகத்தில் பிறந்து வளர்ந்தவள்தானே? அவளுக்கு இப்படித்தான் பேச வரும். அவளின் ரத்த ஓட்டம் மாதிரியான, மாற்ற முடியாத குணம் அது.

“அதெல்லாம் எனக்குத் தோதுப் படாதும்மா” என்றாள் புஷ்பா.

“ஏண்டி தோதுப் படாது?”

“நான் கண் தெரியாதவ| என்னோட பொழப்பு வேற மாதிரியான அமைப்பும் நடப்பும் உள்ளது. அத அவங்களால புரிஞ்சுக்க முடியாது.”

“அப்படியெல்லாம் சொல்லாதடி| ஒன்னய அவங்க புரிஞ்சுக்கிறதும் புரிஞ்சுக்காம போறதும் ஒங்கையிலதான் இருக்கு.”

இப்போது கொஞ்சம் வாய்விட்டே சிரித்தாள் புஷ்பா. “பொண்ணுன்னா பேதைன்னு சொல்லுவாங்களே| அதுக்கு சரியான உதாரணம்மா நீ.”

“ஏண்டி?”

“கல்யாணமாகி முப்பது வருஷத்துக்கு மேல ஆகியும் ஒன்னால அப்பாவ ஏன் திருத்த முடியல? இன்னுங்கூட நித்தம் நித்தம் குடிச்சுட்டு வந்து ஒன்னய வையவோ அடிக்யவோ செய்யிறாரே| அத ஏன் நிறுத்த முடியல? ஒனக்குக் கண்ணு தெரியுது| அப்பாவ விட அதிகமா பாடுபடத் தெரியுது| அப்படிப் பட்ட ஒங்கூடவே அப்பாவால ஒத்துப் போக முடியலைங்குறப்ப….

“நிறுத்துடி” என்று வெட்டினாள் அம்மா. “பொம்பளயப் படிக்ய வச்சா இதையும் பேசுவ, இதுக்கு மேலயும் பேசுவடி.”

புஷ்பாவிற்கு வருத்தமாய் இருந்தது. அடிப்படையையே ஏற்க மறுக்க்pறாளே இந்த அம்மா. சின்ன வயசாய் இருந்தபோது அம்மாவுக்கும் அத்தைக்கும் அடிக்கடி சண்டை வரும். “குருட்டுக் கண்ணியப் பெத்தவளுக்குப் பேச்சு வேறியா” என்று வைதிருக்கிறாள் அத்தை. சென்னைக்குப் படிக்கப் போனதைக்  கூட ஏளனம் பண்ணியிருக்கிறாள்.

“நான் மெட்ராஸ்குப் படிக்யப் போனதக் கூட கிண்டல் பண்ணினாங்களே| ‘ஊர்மேல போயி சம்பாரிக்கிறவ’ன்னு வாய் கூசாமப் பழி சொன்னாங்களே| அவங்க வீட்டுல போயி வாழச் சொல்றியா?”

புஷ்பாவை ஏற இறங்கப் பார்த்தாள் அம்மா. ‘குருட்டு முண்ட’ என்று மனசுக்குள் திட்டினாள். “அதெல்லாம் எனக்குத் தெரியாது| ஒன்னய ஒருத்தன் கையில பிடிச்சுக் குடுக்க வேண்டியது எம்பொறுப்பு.”

“அதப் பத்தி நீ கவலப் படாத| அத நாம்பாத்துக்கிறேன்.”

“நீ என்னடி பாக்குறது? நாலு காசு சம்பாதிக்கிறம்னு திமுரா? நான் சொல்றதத்தான் நீ கேக்கணும்.”

“நான் ஒண்ணும் செக்கு மாடு இல்ல.”

அம்மாவோடு நிறையுவே வாதம் பண்ணினாள். காரசாரமாய் விவாதம் நடந்தது. அவர்கள் தனது மனதையோ ஆத்மாவையோ விரும்ப வில்லை. தனது டீச்சர் தொழிலை, அதன்மூலம் கிடைக்கிற பணத்தைத்தான் விரும்புகிறார்கள் என்று அடித்துக் கூறினாள். நான் அவங்களோட அடிமையா ஆன பெறகு நான் சம்பந்தப் பட்ட அத்தனையும் அவங்களுக்குத்தான் சொந்தம்னு அங்கீகாரம் ஆன பிற்பாடு என்னய என்ன பாடு படுத்துவாங்க தெரியுமா?” கண்ணீர் சிந்தப் போவது போல உணர்ச்சி வசப் பட்டாள் புஷ்பா.

அம்மாவிற்குப் பேசிப் பேசி நாக்கு வரண்டு போனது. “கடைசியா என்னடி சொல்ற?” என்றாள் அம்மா.

“கண் தெரியாதவங்களோட வாழ்க்கை, நாங்க எழுதப் பயன் படுத்துற பதிரைல் மாதிரி. ஆறே ஆறு புள்ளிகள்தான் அத்தனை எழுத்துக்களுக்கும் அடிப்டை. அந்த ஆறு புள்ளிகள்ல அறுபத்து மூணு கோணம் இருக்கு| அத்தனை கோணங்களையும் புரிஞ்சவங்கதான் பிரைல்ல எழுத முடியும்.”

‘டைங்! டைங்! டைங்!’

மணியோசை கேட்டு கற்பனையில் இருந்து விடுபட்டுக் கீழே இறங்கினாள் புஷ்பா. பீரியட் முடிந்துவிட்டது. சுய நினைவு இல்லாமலேயே பாடம் நடத்தியது ஆச்சர்யமாய் இருந்தது.

அடுத்த பீரியட் அவளுக்கு லெஷர். ஸ்டாஃப் ரூமுக்குப் போனாள். மேஜையருகே அமர்ந்து டிராயரைத் திறந்தாள். போன வாரம் ஜெயபால் எழுதியிருந்த கடிதத்தை எடுத்துப் பிரித்துப் பார்த்தாள்.

“அடுத்த வாரம் ங்கொப்பனக் கூட்டியாரேன்| அப்பத்தான் நீ அடங்குவ” என்று கறுவி விட்டுப் போன அம்மாவும் “ப்ளீஸ்! மறுத்துடாத” என்று எழுதிய ஜெயபாலும் மனசுக்குள் மோதிக் கொண்டார்கள்.

முதல் வகுப்பில் இருந்து புஷ்பாவும் ஜெயபாலும் ஒன்றாகப் படித்தவர்கள். டீச்சர்ஸ் டிரைனிங் முடித்த பிறகு அவனுக்குச் சென்னையில் வேலை கிடைத்தது. படித்துக் கொண்டிருந்த காலத்தில் எப்போதும் ஜெயபால் புஷ்பாவிற்குக் கவர்ச்சி உண்டாகும் படி பேசுவான். “நீ ரெம்ப ஸ்பீடா பிரைல் எழுதுறியே” என்பான். “பாடங்களை எல்லாம் எப்படி இவ்வளவு கரைக்டா சின்ன பிசிறு கூட இல்லாம மனப் பாடம் பண்ற?” என்பான். ‘இன்னக்கி லிட்டரரி அசோசியேஷன்ல் ஒன்னோட பேச்சு ரெம்ப டாப். யூ கேன் பிகம் ஏ கிரேட் ஒரேட்டர்” என்பான். அப்போதெல்லாம் புஷ்பாவிற்குப் புல்லரிக்கும். “ஜெயபால்!” என்று மானசீகமாகக் கொஞ்சுவாள்.

அவன் எழுதிய பிரைல் கடிதத்தை மீண்டும் ஒருமுறை தடவிப் பார்த்த்;;;;hள்.

“புஷ்பா!

ஐ லவ் யூ!

என்னைப் புரிந்துகொள். நாம் இருவரும் சம்பாதிக்கிறோம். ஒருவரை ஒருவர் புரிந்து வைத்திருக்கிறோம். பிரச்சணை இல்லாமல் வாழ முடியும். எத்த்னையோ ஆண்களும் பெண்களும் பார்வையிழந்த நிலையிலும், வெறும் உடல் உணர்ச்சிக்கு மட்டும் ஆட்பட்டு மணம் முடித்து வாழும் போது நம்மால் ஏன் முடியாது? என் சம்பாத்தியத்தில் என் பெற்றோரையும் உன் சம்பாத்தியத்தில் உன் பெற்றோரையும் பாதுகாத்துக் கொள்ளலாம். மணம் முடிக்க நமக்கு முழுத் தகுதி இருக்கிறது என்று நம்புகிறேன். நீயும் சென்னைக்கு மாற்றலாகி வந்து விடலாம். ப்ளீஸ்! மறுத்துடாத. ஐ லவ் யூ

நம்பிக்கையுடன்

ஜெயபால்.”

 

புஷ்பா சிலிர்த்துப் போனாள். நியாயமானதும் சந்தோஷமானதுமான அர்த்தம் வாழ்க்கைக்கு இருப்பதாக நம்பினாள். இந்த நம்பிக்கைக்கு அம்மாவும் அப்பாவும் இடைஞ்சல் செய்யவார்களோ? ஆஸ்டலுக்குப் பக்கத்தில் குடியிருக்கும் சரோஜாவிடம் சொல்லி இன்று மாலை அப்பாவிற்கு ஒரு இன்லாண்ட் கார்டு எழுத வேண்டும். எப்படி எழுதுவது?…..

‘ஆண்களைப் புரிந்து கொண்டு பெண்தான் கன்னை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வாழ்க்கை சித்தாந்தம் உடைய் இந்த சமூக அமைப்பில் பார்வை இழந்த ஆண்மகன் பார்வையுள்ள பெண்ணை வரித்துக் கொள்வதில் சிரமம் ஏதும் இல்லை. ஏனென்றால் அவனுக்குத் தகுந்து மாறப் போவது அவள்தான். ஆனால் பார்வையிழந்த பெண் பார்வையுள்ள ஆணுக்கு வாழ்க்கைப் படுவது அவள் தன்னைத் தானே அழித்துக் கொள்வதற்குச் சமம். நீங்கள் முடிவு செய்துள்ள மாப்பிள்ளையாகிய கணேசன் என் உடை அலங்காரத்தை வெறுத்தால் அதை என்னால் மாற்றிக் கொள்ள முடியும். பூ வைப்பதை வெறுத்தால் நிறுத்திக் கொள்வேன். குண நலன்களை வெறுத்தால் அதையும் கூட மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் என்னுடைய பிளைண்ட்னஸ்ஸையே வெறுத்தால் எப்படி மாற்ற முடியும்? ஆகவே அப்பா!…..’

 

செம்மலர் மே 1982

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top