அவனும் வீதியும்

5
(1)

‘’டா…..டி…!”

இது நீலாவின் குரல்! வாசித்துக்கொண்டிருந்த புத்தகத்திலிருந்து பார்வையை விலக்கி வாசலை கோக்கினேன். மிடுமிடுத்த நடையோடு வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தாள்.

‘’கமான் மை டாட்டர்!’’

எனக்குமுன் கிடந்த மேஜைமேல் பள்ளிச் சுமையை……..பாடப் புத்தகங்களை இறக்கினாள்.  வலதுபக்க ஷெல்ஃபைத் திறந்து ஜாமிட்ரிபாக்ஸ், பேனா, அழிரப்பர், அடிஸ்கேல் ஆகியவற்றை வைத்தாள். ‘’டாடி! ஒரு குட் நியூஸ்.’’

‘என்ன’ என்பதுபோல் ஏறிட்டுப் பார்த்தேன்.

‘’கட்டுரைப் போட்டியில எனக்கு ஃபஸ்ட் பிரைஸ்.’’

‘’வெரிகுட்’’ என்றேன் நிதானமாக. ‘’விஷ் யூ ஏ கிரேட் சக்ஸஸ் இன் ஃப்யூச்சர்.’’

வெ;வளவுதான், துள்ளிக் குதித்து வீட்டுக்குள் ஓடினாள், அம்மாவிடம் சொல்வதற்காக. பிறகு வெளியே ஓடினாள், அண்டைவீடு, அயல்வீடு என்று எல்லா இடங்களிலும் செய்தி பரவ வேண்டாமா?

புத்தகத்தை மூடிவைத்தேன். வரிசை வரிசையாய் சந்தோஷ அலைகள்! நீலா, என் அன்பு மகள் முதல் பரிசு வாங்கிவிட்டாள்.

நீலாவின் கட்டுரை நினைவுக்கு வந்தது; ‘சமூக வாழ்வு’ என்பது தலைப்பு! அவளே சுயமாய் சிந்தித்து எழுதிய கட்டுரை. என் பங்கு அதில் துளிகூட இல்லை. இந்தக் கல்வி அமைப்பில் பயின்று கொண்டு, சயமாய்ச் சிந்தித்து எழுதுவது பெரிய சாதனைதான்.

கட்டுரையின் ஆரம்பமே நன்றாக இருந்தது, ஒரு புதுக் கவிதை போல. ஓன்பதாவது படிக்கும் மாணவியால் இப்படியெல்லாம் எழுத முடிகிறதே என்று ஆச்சர்யப் பட்டேன். அவள் எழுதிய முதல் வாக்கியம் இதுதான்.

அன்பு உடையது உறவு!

உறவு உடையது வாழ்க்கை!

வாழ்க்கை உடையது குடும்பம்!

குடும்பம் உடையது சமூகம்!

இந்தக் கட்டுரையின் முதல் வாசகனே நான்தான். வாசித்துப் பார்த்துவிட்டு உளமாரப் பாராட்டினேன். ‘’யூ கேன் பிக்கம் ஏ கிரேட் ரைட்டர்.’’

அவள் ஆனந்த வெள்ளத்திலில் மூழ்கிப் போனாள்.

சுமூகததை முன்னேற்றப் பாதையில் செலுத்துகிற முன்முதல் காரணஙக்ளில் அன்பு முக்கியமானது என்று சுட்டிக் காட்டியிருந்தாள். கட்டுரையை,

அன்பு உடையது உறவு!

அன்பு உடையது வாழ்க்கை!

அன்பு உடையது குடும்பம்!

அன்பு உடையது சமூகம்!

என்று முடித்திருந்தாள். அழகான இயல்பான கோர்வை!

வீதியில் இருந்து வந்த ஓர் அலறல் சத்தம் என் சிந்தனையைச் சிதைத்தது. காதுகளைக் கூர்மைப் படுத்தி உற்றுக் கேட்டேன். வள்ளியம்மாதான் அவறிக் கொண்டிருந்தாள். ‘’அடப் பாவி சண்டாளா! ஏன் என்னயப் போட்டு இப்படி கொல்ற?’’

பாவம் வள்ளி! கல்யாணடாகி மூன்று வருஷங்கள் ஆகிறது. அழுகையும் அலறலும்தான் அவள் வாழ்க்கையின் முக்கியக் கூறுகளாய் இருந்திருக்கின்றன. தாயில்லாத பிறந்த வீடு! அன்பில்லாத புகந்த வீடு! ரெண்டு பக்கமும் ஆதரவில்லாத அபலை அவள்.

கந்தசாமி ஒரு மாதிரியான பேர்வழி. யாதோடும் கலகலப்பாகப் பேசி நான் கண்டதில்லை. இறுக்கமான முகம்! புசபசப்பு இல்லாத உதடுகள்! வுரட்சியான, எரிச்சலூட்டும் பார்வை! கையெட்டத்தில் ஒரு கொலை நடந்தால் கூட சலனமின்றிப் பார்த்துக் கொண்டிருக்கிற குணாம்சம். ‘’ஆளண்டாத கொரங்கு’’ என்று என் மனைவி அவனை விமர்சிப்பாள். இவனுக்குப் போய் வள்ளி மனைவியாய் வாய்த்திருக்கிறாளே?

வீட்டுக்குள் ஓடிவந்தாள் நீலா. ‘’டாடி! டாடி! வந்து அந்த அக்காவக் காப்பாத்துங்க டாடி!’’  என்றாள்.

‘’என்னம்மா?’’ என்றேன்.

அந்த அக்காவ வகுத்துலயே ஏறி ஏறி மிதிக்கிறான்; கொடலே அந்து போகும் போலருக்கு.’’ நீலாவின் வார்த்தைகளில் பதட்டம் தெரிந்தது.

‘’ஏன் அடிக்கிறான்?’’

தெருவில பூ வித்துக்கிட்டு வந்தவங்கிட்ட பூ வாங்கிருச்சாம், அதுக்குத்தான்.’’

‘’பூ வாங்கினதுக்காவா அடிக்கிறான்?’’

‘’ஒரு ஆம்பளகிட்ட வாங்கினதுக்காக. ஆம்பளைககிட்ட பூ வாங்கக் கூடாதாம். பொம்பளைக வித்துட்டு வந்தாத்தான் வாங்கணுமாம்.’’

சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் மனிதன் தன் வக்ர புத்திpயைக் காட்ட முடியும் என்பதற்குக் கந்தசாமி ஓர் அடையாளம். வாழ்க்ககையின் மேடு பள்ளங்களுக்குக் காரணமாய் எத்தனையோ பிரச்சிணைகள் இருக்கும் போது அவற்றைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் பிரசசிணயே இல்லதாததைப் பிரச்சிணை ஆக்குகிறானே? இவன் எவ்வளவு பெரிய முட்டாள்.

ரெண்டு வருஷத்துக்கு முந்தி ஒருநாள் இப்படித்தான்…………

சாயுங்காலம் ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு வந்தேன். வள்ளியம்மா வாசல்படியில் உட்கார்ந்து என் மனைவி செல்லத்தோடு பேசிக் கொண்டிருந்தாள். அவள் முகம் வீங்கியிருந்தது. கண்கள் சிவப்பேறிக் கலங்கியிருந்தன. கை, கால் எல்லாம் நகம் கிழித்த ரத்தக் கோடுகள்!

‘’என்னம்மா! ஓம்புருஷன் அடிச்சுப் போட்டானா?’’ என்றேன்.

‘’அத ஏங்கே;ககுறீங்க?’’ குரல் தழுதழுத்திருந்தது. கண்ணீர்த் துளிகள் குபுகுபுவெனச் சிந்தின. ‘’நானு எம குண்டத்துல வந்து சிக்கிக் கிட்டேன்.’’

கந்தசாமியை உதைக்க வேண்டும் போல் இருந்தது. ‘’அவனுக்கு மனுஷத் தன்மையே கெடையாதா?’’

‘’மனுஷனா இருந்தாவுல்ல மனுஷத் தன்ம வரும்’’ என்றாள் செல்லம்.

‘’எதுக்கு அடிச்சான்?’’

வள்ளியால் நடந்ததைச் சொல்ல முடியவில்லை. வாய் திறந்தால் வார்த்தைக்குப் பதில் அழுகைதான் வந்தது. செல்லம்மாதான் நடந்ததைச் சொன்னாள்.

காலையில் ஊரிலிருந்து வள்ளியம்மாவின் அப்பா வந்திருந்தாராம். அவரிடம் தன் சோகக் கதையைச் சொல்லிப் புலம்பி இருக்கிறாள். அவர் வருத்தப் பட்டாராம்; வேறென்ன செய்ய முடியும்?

ஊருக்குத் திரும்பும் போது மருமகனிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாராம். ‘’மாப்பிள்ள! வள்ளி எம்மக இல்ல; ஒங்க சம்சாரம். அடிக்கிறதும் அணக்கிறதும் ஒங்க கையிலதான் இருக்கு; அவ ஒங்க நாயி மாதிரி; ‘செ’ன்னு வெரட்டுனா எங்க போவா? ஏதோ, கண் கலங்காமப் பாத்துக்கங்க.’’

‘’ஒம்மகளக் கொத்தியா குடிச்சிட்டேன்?;;;’’ என்றானாம் கோபமாக.

அதற்கு மேல் பேச முடியாமல் கிளம்பிவிட்டார்.

அவர் கிளம்பியதுதான் தாமதம, வள்ளியை அடி நொறுக்கி விட்டான். ‘’இந்தக் குடும்ப வெவகாரத்த ங்கெப்பன்ட்ட எப்படி சொல்லலாம்? என்னோட மானம் மருவாதி என்னாகுறது?’’ என்று சொல்லிக் கொண்டே கையை மடக்கிக் குத்தினானாம். கழுத்தைப் பிடித்து நெரித்து வயிற்றிலும் நெஞ்சிலும் ஏறி மிதித்தானாம். கைகள் ஓயம்வரை அவன் தாக்குதலும் ஓயவில்லை.

செல்லம்மாவும் வேறு சில பெண்களும் தடுத்த போது ‘’இது என் குடும்ப வெவகாரம்’’ என்றானாம். ‘’இதுல யாராச்சும் தலையிட்டீங்கன்னா மருவாதி கெட்டுப் போகும்’’ என்ற மிரட்டல் வேறு.

அவன் ஒரு மனிதனா? இல்லை! நிச்சயமாக இல்லை! களை! அப்புறப் படுத்த வேண்டிய மனிதக் களை!

வள்ளி எங்களோடு பேசிசிக் கொண்டிருந்த போது கந்தசாமி வந்து விட்டான். குடிவெறி கூடி இருந்ததன் அடையாளமாய் கண்கள் சிவந்திருந்தன.

வந்ததே சரி என்று ஓங்கி ஓர் எத்து விட்டான்.

மதிலில் மோதிக் கீழே விழுந்தாள் வள்ளி.

‘’ஊராருகிட்டப் போயி என்னளா ஒப்பிச்சுட்டிருக்க?’’ திருப்பவும் ஓர் அடி, உதை, குத்து!

‘’நில்லுப்பா’’ என்று சொல்லிக் கொண்டே போய் அவன் கையை இழுத்து நிறுத்தினேன். ‘’ஏப்பா, பொட்டப் புள்ளயப் போயி இம்புட்டு வீறாப்பா அடிக்கிற?’’

‘’விடுய்யா கைய’’ என்று விசும்பினான். ‘’நீ ஓரு ஆபீசரா இருக்கலாம்; ஆனா எங்குடும்பத்துல தலையிடுறதுக்கு ஒனக்கு என்ன  உரிமை இருக்கு?  மருவாதியாக் கைய விட்டுடு.’’

உடம்பு வெலவெலத்துப் போயிற்று. என் மூத்த அதிகாரியிடம் கூட இப்படியெல்லாம் பேச்சுக் கேட்டதில்லை. இந்தச் சிலறப் பயலிடம் போய்…………..

கைகள் பின் வாங்கின. இயல்பாக உடல் பின் வாங்கியது. வீட்டுக்குள் போய் மறைந்து கொண்டேன்.

இரவெல்லாம் தூக்கம் பிடிக்கவில்லை. வள்ளியம்மாவின் உடலுருவம்தான் கண்முன்னே நின்றது.

‘’மனிதன் ஓர் உயிர்ஜீவி மட்டுமல்ல; அவன் ஒரு சமூக ஜீவியும்கூட’’ என்று எங்கோ படித்தது ஞாபகத்திற்கு வந்து உறுத்தியது.

நான் ஒரு சமூக ஜீவியா? ஆமென்றால், இன்னொரு சமூக ஜீவியும் மனித ஜீவுயுமாகிய வள்ளியின் துயரத்தைப் போக்குவதற்கு என்ன செய்தேன்? என்ன செய்ய முடிந்தது என்னால்?

‘’டாடி!’’

நினைவுகள் கலைந்தன. தோளைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருநாள் நீலா.

‘’என்ன டாடி, சொல்லிக்கிட்டேருக்கேன்; ஊம மாதிரி ஒக்காந்திருக்கீங்க?’’

‘’பேசாம இருடி’’ எனறாள் செல்லம் வீட்டுக்குள் இருந்படி. ‘’அவன் ஒரு காட்டுப் பய, மனுசம்போயி பேச முடியுமா?’’

‘’அப்படின்னா அந்த அக்கா சாக வேண்டியதுதானா?’’ நீலாவின் குரலில் ஆவேசம் கலந்த அனுதாபம் இருந்தது.

ஒரு முடிவுக்கு வந்தவனாய் நாற்காலியை விட்டு எழுந்தேன். வாசலுக்கு வந்தேன். எல்லாப் பெண்களும் அவரவர் வீட்டு வாசலில் நின்றபடி கந்தசாமியின் வீட்டைப் பார்த்தவாறிருந்தனர்.

வள்ளியின் ஓலம் வலுவடைந்தது.

விறுவிறுவென நடந்தேன். அவன் வீட்டுக்கு முன் போய் நின்றேன். எல்லாக் கண்களும் என்னையே வட்டமிடுவது தெரிந்தது.

‘’நிறுத்துடா!’’ என் இயல்புக்கு மீறிய ஆவேசத்தோடு கத்தினேன். ‘’நிறுத்தப் போறியா, இல்லியா?’’

‘’யோவ்! இது என் குடும்ப விஷயம், இதுல மூக்க நீட்ட ஒனக்கு என்ன ஓக்யத இருக்கு? தலையிட்டா மருவாதி கெட்டுப் போகும்.’’

ஏன் இதயத்தை நீலா ஆக்கிரமித்துக் கொண்டாள். அங்கிருந்தபடி ஓங்கி ஓங்கிக் குரல் கொடுத்தாள்.

அன்பு உடையது உறவு!

உறவு உடையது வாழ்க்கை!

வுhழ்ககை உடையது குடும்பம்!

ஓ! எனக்குப் புரிந்தது. குடும்பம் என்றால் வாழ்க்கை உடையதாக இருக்க வேண்டும். வாழ்க்கை என்பது உறவு உடையது. உறவு என்பது இருவர் சம்பந்தப்பட்ட விஷயம். வள்ளியைப் பொறுத்தவரை உறவுஇல்லை, வாழ்க்கை இல்லை. அடி உதை மட்டும்தான் இருக்கிறது. அப்படியானால் ‘என் குடும்பம்’ என்று இவன் சொல்வதற்கு என்ன நியாயம் இருக்க முடியும்? உறவும் இல்லாமல் வாழ்க்கையும் இல்லதாமல் குடும்பம் எங்கிருந்;து வந்தது?

நீலாவின் குரல் மேலும் ஒலித்தது. ‘அன்பு உடையது வாழ்க்கை! அன்பு உடையது குடும்பம்!’

இவனிடம்தான் அன்பு இல்லையே! அரக்கத்தனம் தானே இருக்கிறது? அப்படியானால் குடும்பம் என்ற ஒன்று எப்படி இருக்க முடியும்?

ஆகவே, இதில் நான் தலையிடலாம். ஏனென்றால் இது ஒரு குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. இது ஒரு மிருகம் ஒரு மனித ஜீவியை ஹிம்ஸிக்கும் கொலைபாதகம். ஆகவே, இதில் நான் தலையிடலாம். மிருகத்தை விரட்ட வேண்டியது ஒரு சமூக ஜீவியின் கடமை.

விறுவிறுவென்று வீட்டுக்குள் நுழைந்தேன். அவனை வெளியே இழுத்து வந்தேன், அவன் தலைமுடியை இடது கையால் பிடித்துக் கொண்டு வலது கையால் கன்னத்தில் ஓங்கி அறைந்தேன்.

வெலவெலத்து நின்றான் அவன்; சிலிர்த்து நின்றது வீதி!

 

செம்மலர் ஜனவரி 1985

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

1 thought on “அவனும் வீதியும்”

  1. மகளின் ஒரு கட்டுரை தந்தையை தெருவுக்கு அழைத்து அநீதியை தட்டி கேட்ட வைக்கிறது. ‘’மாப்பிள்ள! வள்ளி எம்மக இல்ல; ஒங்க சம்சாரம். அடிக்கிறதும் அணக்கிறதும் ஒங்க கையிலதான் இருக்கு; அவ ஒங்க நாயி மாதிரி; ‘செ’ன்னு வெரட்டுனா எங்க போவா? ஏதோ, கண் கலங்காமப் பாத்துக்கங்க.’’பெரும்பாலான பெண்ணை பெற்றவர்களின் கையாலாகாத வேதனைக்குரலும் பெணகளின் நிலையையும் அடித்துக் கூறும் அற்புதமான கதை சிறப்பு தோழர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: