அது வேறு கணக்கு!

0
(0)

வினாடிகள் யுகங்களாய்த் தாமதம் பண்ணிக் கொண்டு நகர்ந்தன. வந்தவர்கள் அதைவிடக் கொடூரமாய்த் தாமதித்தார்கள். ஒரே ஒரு நிமிஷம் இடைவெளி கிடைக்காதா என்ற ஏக்கத்தோடு அந்தக் கமிஷன் மண்டி முதலாளியின் அறையை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான் பெருமாள்சாமி.

சிகரட்டை ஊதிக் கொண்டு நிதானமாய், மிக நதானமாய் ஆமையைவிட வேகக் குறைவாய்ப் பேசிக் கொண்டிருந்தார் முதலாளி.

வந்தவர்கள் அவரை விடுவதாய் இல்லை. “இது தெய்வ காரியம், கும்பாபிஷேக விழா, மொத மொத ஒங்க கிட்டதான் வந்திருக்கோம். நீங்க கணிசமா எழுதினாத்தான் மத்தவங்க கிட்டயும் அடிச்சுக் கேக்க முடியும். அதனால…!

“நான் ஓப்பனாவே சொல்லிடுறேன்,” என்று சின்னதாய்ப் புன்னகைத்தார் முதலாளி. வத்தல் சீசன் ஏமாத்திருச்சு, எதிர்பார்த்த அளவு யாவாரம் விறுவிறப்பு இல்லாம மந்தமாயிருச்சு, எனக்கு ஏகப்பட்ட நஷ்டம், எவ்வளவு தெரியுமா?” மீண்டும ஒரு சிகரட்டைப் பற்ற வைத்தார்.

‘எவ்வளவு’ என்று கேட்காமல் அவர்கள் அமைதியாய் இருந்தார்கள்.

“மூணு லட்ச ரூபா” என்றார் முதலாளி.

“நஷ்டத்தோட நஷ்டமா எங்களுக்கும் ஒரு நல்ல தொகைய….”

துள்ளிக் குதித்தார் முதலாளி. “ஒங்க பேச்சே எனக்கு ஆச்சர்யமா இருக்கு” என்றார். “எவன் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவால்ல, ஒங்களுக்குத் தேவ டொனேஷன், அதுவும் கணிசமான தொக, அப்படித்தான?”

“அய்யய்யோ” என்றார்கள் வந்தவர்கள். “நீங்க நல்லாருந்தாத்தான் நாங்க செங்ஙிற பொதுத் தொண்டு சிறப்படையும்.”

தயவு செஞ்சு என்னய நீங்க புரிஞ்சுக்கணும், நஷ்டமில்லாம இருந்திருந்தா ஆயிரமில்ல, பத்தாயிரம் கூட எழுதுவேன்,…ஏதோ என்னய நம்பி வந்துட்டீங்களேங்குறதுக்காக அம்பத்தொரு ரூபா எழுதுறேன், அம்பாள் அருள் இருந்தா அடுத்தவாட்டி பாத்துக்கிடுவோம்.”

வந்தவர்கள் சலிப்போடு எழுந்து போன பிறகு பெருமாள்சாமி விசுக்கென்று உள்ளே புகுந்தான். நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது. கைவிரித்து விடுவாரோ என்று பயமாய் இருந்தது. ‘தாயே மீனாட்சி!” என்று மனசுக்குள் உச்சரித்துக் கொண்டான்.

அதிகம் மூடித் திறக்காத இமைவெட்டு! எதையும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் விழிப் பார்வை! கொஞ்சம் உள் அமுங்கித் தெரியும்p மூக்குச் சரிவு! அளவுக்கு அதிகமாய் விரிந்து பெருத்த உதடுகள்! கழுத்தின் நீளத்தைச் சுருக்கிக் காட்டிய சதைப் பிடிப்பு! தொந்தி வயிற்றை மறைக்க முடியாமல் திணறிய சில்க் ஜிப்பா! பட்டு வேட்டி! இத்தியாதிகளுடன் அகன்ற நாற்காலியில் இடதுபுறம் சாய்ந்து கிடந்தார் முதலாளி.

“என்னடா? காலையில புடுச்சு, நாய் மாதிரி சுத்தி சுத்தி வார, என்ன வெவரம்?”

“மொதலாளி! ஒடனடியா ஒரு ஐநூறு ரூபா வேணுமுங்க, ரெம்ப அவசரம்.”

“அப்படி என்னடா தல போற காரியம்?”

“எம்பொஞ்சாதி பேறுகாலம் ஆகமாட்டாம ஆஸ்பத்திரியில கெடக்கா, ஆபரேஷம்பண்ணித்தான் கொழந்தய எடுக்கணுமாம, ஐநூறு ரூபா பீஸ் கட்டச் சொல்றாக.” அவனின் கைகள் கால்கள் மட்டுமல்ல, வார்த்தைகளும் நடுங்கின.

“ஆமா….’ என்று ஒர்; இழுப்பு இழுத்தபடி நிதானமாய்க் கேட்டார் முதலாளி. “எந்த ஆஸ்பத்திரியல சேத்திருக்க?”

“காமோண்டு ஆஸ்பத்திரியல.”

“அப்படியா?” என்று கேட்டபடி சிகரட் ஒன்றை உதட்டிடுக்கில் செருக்pனார். “பெரிய ஆஸ்பத்திரியல சேத்தா ஒங்கவுரவம் கொறஞ்சு போயிருமோ?”

“ஏதா மொதலாளி, எங்க மாமன்தான் சொல்லிச்சு, கவர்மண்டு ஆஸ்பத்தரிய விட பெரவெட்டுதான் செலவு கம்மியாம். கவர்மண்டு ஆஸ்பத்திரியில முக்காவாசி மருந்து நாமதான் வெளியில வாங்கித் தரணுமாம். அதோட கம்மோண்டரு, நர்சுக்கெல்லாம் நித்தம் படியளக்கணுமாம்.”

“ஏண்டா, அரசாங்கத்தப் பத்தி எகத்த்hளமா பேசுற?” என்ற படி இருக்கையை விட்டு விருட்டென்று எழுந்தார். “வாங்க வாங்க என்று சந்தோஷம் கொப்புளிக்க வரவேற்றார்.

முதுகுப் பக்கம் திரும்பிப் பார்த்தான். ஏழெட்டுப் பேர் நுழைந்து கொண்டிருந்தனர்.

“சரி ஒரு அஞ்சு நிமிஷம் வெளிய இரு.” பெருமாள் சாமியை விரட்டினார்.

கோபம் கோபமாய் வந்தது. மனசுக்குள் சபித்தான். ‘நாசமாப் போனவனுக, இந்த நேரத்துலயா வந்து தொலக்யணும்?’

மனைவி விம்மி விம்மி அழுதது மனசுக்குள் எதிரெலித்தது. இதுவரை ஐந்து குழந்தைகளுக்குத் தாயாகி இருகு;கிறாள். ஊசி, மருந்து என்று ஆஸ்பத்திரியை அண்டியதில்லை. இந்தத் தழவையும் வீட்டில்தான் பிரசவம் நடந்தது. மருத்துவச்சி எவ்வளவேர் முயன்று பார்த்தாள். நிமிடங்கள் நகர நகர லட்சுமி குய்யோ முறையோ என்று கதறத் தொடங்கனாள்.

ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனபோது “சிசேரியன் போடணும், ரெண்டாயிரம் செலவாகும்” என்று பயமுறுத்தினார் டாக்டரம்மா. “ஐநூறு ரூபா அடவான்ஸ் கட்டு!”

“அய்யய்யோ! அம்புட்டு ரூபாக்கி நான் எங்குட்டுப் Nபுர்கட்டும்?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஒம்பொண்டாட்டி பொழக்யணும்னா எற்குட்டாச்சும் போயி பொரட்டிட்டு வா.”

நடுங்கினான். என்ன செய்வதொன்று தவித்தான். அவனுக்கென்று இருக்கிற ஒரே சொத்து அவன் ஏடியிருக்கும் ஓட்டைக் குடிசை மட்டுமே. அதைக் கூட விற்றுத் தரலாம் என்றால் உடனடியாக நடக்கக் கூடிதா என்ன?

மனம் குழம்பிய நிலையில் ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்மான். முதலாளிதான் ஞாபகத்துக்கு வந்தார். அவர் நினைவுக்கு வந்து என்ன பயன்? மனிதாபிமானம் விலைபோகக் கூடியதல்ல என்பதால் அவரைப் பொறுத்தவரை அது மட்டமானது. அவரிடம் போனால் காரியம் ஆகுமா? இப்போதைக்கு வேறு வழியில்லை.

சுய நிலையடைந்து உள்ளே எட்டிப் பார்த்தான். முதலாளி தனது ஏலாமையை விளக்கிக் கொண்டிருந்தார். “எந்த வருசமாச்சும் நான் இம்புட்டுத் தூரம் பிடியவாதம் பிடிச்சிருக்கனாங்குறத நீங்க நெனச்சுப் பாக்குணும். மூணு லட்சம் ரூபா நஷ்டம்ஏறது ஒரு சாதாரண வெசயமில்ல.”

வந்தவர்கள் விக்கித்துப் போய் உட்கார்ந்திருந்தார்கள். இதுவும் ஒரு டொனேஷன் பிரச்சணைதான் எனப் புரிந்து கொண்டான் பெருமாள்சாமி.

“என்ன நம்பி வந்துட்டீங்க, ஏமாந்துறக் கூடாதுங்குறதுக்காகத தாரேன், வச்சுக்கங்க, பதினொரு ரூபா.”

ஒரு வழியாய் வந்தவர்கள் போய்விட்டார்கள்.

விடுவிடுவென்று உள்ளே ஓடினான். “மனசு வச்சு ஒதவி பண்ணுங்க மொதலாளி. அங்க ஒரு உசுரு ஊசலடிக்கிட்டுக் கெடக்கு.”

“என்னடா பெரிய உசுரு? எனக்கு இப்ப நஷ்டம் வந்திருக்கும் போது?….”

“நீங்க பெரிய மனுசரு” என்று இடைமறித்தான். அப்படியெல்லாம் பேசாதீங்க, தயவு பண்ணுங்க மொதலாளி.”

‘தோட்டத்துல தண்ணி கட்டுற நாலாஞ்தாதிப் பயல இம்புட்டுத் தூரம் பேச விடுறதா’ என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டார்.

“இந்தா பார்ரா பெருமாளு, ஐநூறு ரூபாங்குறது லேசான சங்கதி இல்ல, ஏற்கனவே மூணு லட்ச ரூபா நஷ்டப் பட்டிருக்கேன், அம்பது நூறுன்னூலும் பரவால்ல. எப்பக் கெடக்யுதோ அப்பக் குடுத்துடுவ ஆனா, நீ கேக்குறது ஐநூறு ரூபா.”

“அப்படி சொல்லாதீங்க மொதலாளி| ராப்பகலா ஒழச்சுக் கூட ஒங்க கடன அடச்சுடுவேன்.”

“இப்பவும் ராப்பகலாத்தானடா ஒழக்கிற? அதுக்குத்தானே மாசம் எரநூறு ரூபா தாரேன். ராப் பகலா ஒழச்சுக் காணல| திரும்ப எப்படி ராப் பகலா ஒழச்சுக் கடனடப்ப?”

பெருமாள் சாமியின் உணர்ச்சியும் பேச்சும் ஒரு ஜீவன், அதன் அவஸ்தையில் இருந்து விடுபட Nவுண்டுமே என்ற ஆதங்கத்தை உள்ளடக்கி இருந்தன. ஆனால் முதலாளியின் பேச்சோ அவரின் நஷ்டக் கணக்கைப் பெரிது படுத்தி ஒரு கூலிக் காரனின் வாழ்க்கையை இகழ்ச்சி செய்தது.

“செ! இப்படி அடிமையா இருந்து சீவிக்கிறதவிட சொதந்தரமா இருந்து செத்துப் போகலாம்” என்று நினைத்துக் கொண்ட போது கண்கள் லேசாய்ப் பனித்தன. “ரூபா குடுங்க மொதலாளி| சீக்கிரம் போகணும்.”

மீண்டும் ஒரு சீகரம்! மீண்டும் ஒரு புகைச் சுருள்! ‘அப்படியா?” என்கிற கேள்வியுடன் கூடிய முரட்டுப் பார்வை! “சரிப்பா! ஐநூறுங்குறது; ஆகாத காரியம்| நூத்தம்பது தரச் சொல்றேன். வாங்கிட்டுப் போ!” கணக்குப் பிள்ளையிடம் நூற்றைம்பது தரச் சொல்லி உத்தவவிட்டார்.

“வேணாம் மொதலாளி| ஒங்களவே தஞ்சம்னு கெடக்க ஒரு ஏழைய ஏமாத்ததாதீக.”

“ஏலே பெருமாளு! என்னயப் பத்தி ஒனக்கு நல்லாத் தெரியும், ஒரு வார்த்தைய ஒரு தடவதான் சொல்லுவேன்.” சொல்லிக் கொண்டே நாற்காலியை விட்டு எழுந்தார்.

“அங்க ஒரு சீவன் செத்துக் கிட்டுருக்கு மொதலாளி. மொத்தம் ரெண்டாயிரம் செலவாகும், இப்போதக்கி ஐநூறு அவசியம் வேணும். மீதிப் பணத்த நாளப்பின்ன எங்குட்டாச்சும் பாத்துக்கிறேன்.”

“நூத்தம்பதுதாண்டா கெடக்யும், வேணும்னா வாங்கிக்க, இல்லாட்டி வேற எங்குட்டாச்சும் பாத்துக்க.”

முதலாளி கடையைவிட்டு வெளியறிப் போவதைப் பார்த்தபடி பெருமாள் சாமி நின்று போனான். ஆங்காரம் கண்களில் கொப்பளித்தது. இறுகிய கருப்பு திரேகம் ஆவேசத்தால் நடுநடுங்கியது. ‘மட ராஸ்கல்’ என்று கறுவிய படி பற்களை நறநறவென்று கடித்தான்.

நூற்றைம்பது ரூபாயை வாங்கிக் கொள்ள அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. ‘அந்த ஈனப் புத்திக்காரனைப் பாத்துக்கிறேன்’ என்று முணுமுணுத்ததபடி கடையை விட்டு வெளியேறினான்.

என்ன செய்வது என்று புரியவில்லை. ஐநூறு ரூபாய்க்கு எங்கே போவது?

மீண்டும் மீண்டும் லட்சுமி மனசுக்குள் ஓடிவந்தாள். விம்மி விம்மி அழுதாள். அவள் வாழ்வு என்பதும் சாவு என்பதும் தனிப்பட்ட உரு ஜீவன் சம்பந்தப்பட்டதல்ல. நண்டும் சிண்டுமாய் அவள் நிழலில் முளைத்துக் கிடக்கும் இன்னும் மூன்று கொழுந்துகள் நம்பந்தப்பட்டது. அதுகளுக்கெல்லாம் விமோசனம் வேண்டுமென்றால் லட்சுமி பிழைத்து எழுவது அவசியம். ‘தாயே மீனாட்சி!’ என்று அவன் மனம் அனிச்சையாய் ஜெபித்தது.

நிற்காமல் நிலைக்காமல் ஓடிக் கொண்டே இருந்தான். ஐறூறு ரூபாய்க்காக எதிர் வீட்டு செல்லமுத்துவும் அடுத்த வீதி ஏட்டையா பொண்டாட்டியும் கைவிரித்து விட்டார்கள். “பணம் என்ன மரத்துலயா மொளக்கிது, புடுங்கித் தர? நாலுநாப் பொறு” என்று சாக்குப் Nபுhக்கு சொன்னார்கள். கந்து வட்டி குணசேகரன் ஞாபகத்துக்கு வந்தான். நூற்றுக்கு இருபத்தைந்து என்பது அவன் வட்டி விகிதம். ‘இருந்தாலும் பரவாயில்லை, ஆபத்துக்கு வேணுமே’ என்று அங்கேயும் ஓடினான்.

“யாரு, பெருமாளா?” என்றான் குணசேகரன். “நூறு ரூபா வாங்குனாவே நூத்தம்பது நாள் இழுப்ப| ஆறு நூறக் குடுத்துட்டு ஆரு தாலியயப் போயி அறுக்குறது? வேற எடத்தப் பாரு.”

‘ஆண்டவா!’ என்று அலறியது ஆன்மா. விழியோரம் சரமிட்டு நின்ற நீர்த்திவலைகள் வெயில் வெளிச்சத்தை நிறம் பிரித்துக் காட்டின. வலியவனுக்கு இனிப்பையும் எளியவனுக்குக் கசப்பையும் தருகிற இந்த பூமி வஞ்சகமானது தான்.

மேலும் எங்கே போவது என்று புரியாமல் மீண்டும் கடைக்கே ஓடினான். தாழ்யவார நிழலில் உட்கார்ந்து கொண்டான். உடல் சோர்ந்து வெலவெலத்தது. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி விலாக் கூடு வலியெடுத்தது. நாக்கை நீட்டிக் கொண்டு பூமிப் பரப்புக்கு மேல், வெற்றிடத்தில் நிரம்பிக் கிடந்த காற்று முழுவதையும் உள்ளுக்குள் இழுத்தான்.

“என்ன பெருமாளு!” என்ற கணக்குப் பிள்ளையின் குரல் கேட்டு, கொஞ்சம் தெம்பு வந்து விழித்துப் பார்த்தான். பூமி வெளிறித் தெரிந்தது.

“பணம் பொரட்டிட்டியா?”

“இல்லீங்கய்யா.”

‘நான் ரெம்ப வருத்தப் படுறேன் பெருமாளு| ஒன் சங்கதியக் கேட்டு எனக்கே மனம் துடிக்கிது. ஆனா ஒதவி செய்யப் பணமில்ல, இந்த வெசயத்துல நானும் ஒன்னயப் போலதான். பத்தாத சம்பளம் வாங்கி சீவனம் நடததுக்கதிட்டிருக்கேன்.”

“கணக்குப் பிள்ள ஐயா! ஒங்க குணம் எனக்குத் தெரியாதா? மொதலாளிக்கில்ல மனசு வரணும்?”

“இந்தா அந்த நூத்தம்பதோட என்னோட சொந்தப் பணம் அம்பது சேத்துத தாரேன்| டாக்டரம்மாகிட்ட கெஞ்சிக் கெதறிப் பாரு| அதுக்கு மேல அவங்க கண்ணு முன்னால ஒரு உசுர சாகவா விட்டுருவாக? ஒடனே பணம் கொண்டு வான்னு சொல்றதெல்லாம் ஒரு அரட்டிக்கித்தான்.”

மீண்டும் அலங்கோலமான கோலத்தோடு லட்சுமி மனக் கண்முன் தோன்றினாள். சோர்வையெல்லாம் சுருட்டி எறிந்து விட்டுப் புதுத் தெம்போடு எழுந்து நின்று இருநூறு ரூபாயை வாங்கிக் கொண்டான்.

‘எதுக்கும் இன்னொரு தடவ மொதலாளியக் கேட்டுப்பாத்தா?’

“ஓ, கேட்டுப் பாரேன்| இன்னேரம் வீட்டுலதான் இருப்பாரு” என்றார் கணக்குப் பிள்ளை.

ஒரு பெரிய காம்பவுண்டு! அதற்குள் சின்னதாய் ஒரு பூந்தோட்டம். கடந்து உள்ளே போனல் ஒரு புது மாடல் வீடு! வாச்மேனைக் காணவில்லை. வாச்மேன் வைத்துக் கொள்ள வில்லை போலும். சம்பளம் தர பயப்படும் கஞ்சாம்பட்டி.

பெரிய காம்பவுண்டு! அதன் மத்தியில் சின்னதாய் ஒரு பூந்தோட்டம்! அதையும் தாண்டி உள்ளே போனால் புது மாடல் வீடு! வீடு என்பதைவிட மாளிகை என்று சொல்வதே பொருந்தும்.

சாத்திக்கிடந்த வீட்டுக்குள் இருந்து அரவம் கேட்டது.

“நான் ஒண்ணு கேக்குறேன், கோவிச்சுக்க மாட்டீங்களே?”

முதலாளியின் இளம் மனைவி (மூன்றாம்தாரம்) சுந்தரவல்லியின் குரல்தான்.

“எனக்கா, கோபமா, இந்த சவுந்திரா மேலயா? சீ! சீ!” சிணுங்கலாய் ஒலித்தது முதலாளியின் குரல்.

“நேத்து வீட்டுக்கு வந்த கணக்குப் பிள்ளகிட்ட சத்தம் போட்டீங்களே| மூணு லட்ச ரூபா நஷ்டம்னு, அது நெஜமா?”

“அடி அசடு, அசடு!” நுனிப் பல்லில் செல்லமாய்க் கொஞ்சினார். “அந்தக் கணக்கு வேற.”

வேற கணக்குன்னா?” வளையல் கலகலக்கும் சத்தம்!

அதாவது, இந்த சீசன்ல நாலு லட்சம் ரூபா சம்பாதிக்யணும்னு கணக்குப் பேவாட்டு வேல செஞ்சேன்| சம்பாதிக்க முடியல, ஒரு லட்சம்தான் கெடச்சிது| நாலு லட்சத்துக்குக் குறி வச்சு ஒரு லட்சம்தான் சம்பாதிக்க முடிஞ்சது| மீதி மூணு லட்சம் நஷ்டம்தான?”

“ஆமா! ஆமா! நஷ்டம்தான்.” என்றாள் சுந்தரவல்லி. அவள் ஜலதரங்கம் மாதிரி சிரித்தாள்.

‘அட மடக் காட்டேரி’ என்று கத்தவேண்டும் போல் இருந்தது பெருமாள் சாமிக்கு.

ஆவேசம் மன எல்லை கடந்து ஓங்காரமிட்டு உயர்ந்தது. லாபக் கணக்கையே நஷ்டத்தப் படுத்திக் காட்டுகிற இந்த அரக்கத்தனம் பாம்பின் விஷத்தைவிடக் கொடியது. ‘ஏலே நீ இப்படியா பண்ற?’ என்ற மனக் குமுறலின் வார்த்தை வீச்சு நாக்கு நுனியை எட்டாதபடி அடக்கிக் கொண்டு, இந்த பூமியையே அதிர வைக்கிற ஆங்காரத்தோடு, அந்த வீட்டுக் கதவைத் தடதடவென்று தட்டினான்.

 

செம்மலர்

நவம்பர் 1982

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top